தர்மம் என்ற உயர்ந்த பண்பு
அனைவராலும் கடைபிடிக்கபடவேண்டும்
இந்த உயரிய பண்பைவாழ்வின் எந்நிலையிலும்
கடைபிடிப்பவர்கள் வெகு சிலரே
படித்தவர்களுக்கும்,பாமரர்களுக்கும்,
ஏழைக்கும்,பணக்காரர்களுக்கும்
கடைபிடிக்கவேண்டிய தர்மம் ஒன்றே
ஆனால் வாழ்வில் இல்லறத்தில் ஈடுபட்டவர்களுக்கும்,
துறவு வாழ்க்கையை நாடுபவர்களுக்கும் என தனியாக
தர்மங்கள் உண்டு .
அதே போல் ஒவ்வொரு தொழிலில் ஈடுபடுவோருக்கும்
தனி தனியாக கடைபிடிக்கவேண்டிய தர்மங்களை
சாஸ்திரங்கள் வரையறுத்து வைத்துள்ளன
முக்கியமாக நேர்மையும் நாணயமும் கடைபிடிக்கவேண்டியவை
.
அவைகளை முறையாக கடைபிடிப்பவர்கள் தாங்களும்
நன்மை பெறுவதுடன் இந்த உலகமும் நன்றாக வாழ உதவுகின்றனர்
ஆனால் எந்த தர்மத்தையும் கடைபிடிக்காமல் பலர் இன்று
தன் மனம் போன போக்கில் அதர்மத்தை தன் உயிர்மூச்சாக கடைபிடித்து
தாங்களும் அழிவு பாதையில் செல்வதுடன் இந்த சமூகத்தை
துன்பத்திற்கு உள்ளாக்கி மகிழ்கின்றனர்.
எது எப்படி இருந்தாலும் பொதுவான
சில தர்மங்களை அனைவரும்
வாழ்வில் கடைபிடித்தால்
வாழ்வு வளமாக இருக்கும்
பசித்தோருக்கு உணவிடுதல்,துன்புற்றோர்க்கு உதவி செய்தல்,
பிறரிடம் அன்பு காட்டி இனிமையாக பழகுதல்,மறந்தும் பிறருக்கு கேடு
நினையாமல் இருத்தல் ,தெய்வத்தை இகழாமல் போற்றி வணங்குதல்
தாய் தந்தையரை பேணுதல்,ஒழுக்கமாக வாழ்க்கை நடத்துதல்
,தீமை பயக்கும் செயல்களை செய்ய அஞ்சுதல் ,
பிற உயிர்களுக்கு துன்பம் விளைவிக்காதிருத்தல் ,
போன்ற நற்பண்புகள் அனைவராலும்
கடைபிடிக்கபடவேண்டியவை.