ஆன்ம பலம் முன்பு
ஆயுத பலம் தோற்றுவிடும்
இரண்டாம் உலக போரில்
ஆயுத பலம் கொண்டு உலகை நாசம்
செய்த பல சர்வாதிகாரிகள் மண்ணோடு
மண்ணாக போனதை மனித குலம்
மறக்க முடியாது
காந்தி மகானின் ஆன்ம பலம் முன்பு
வெள்ளையரின் ஆயுத பலம்
தோற்றத்தை வரலாறு அறியும்
காந்தியின் வழியில் சென்ற
தேச பக்தர்களைத்தான்
வெள்ளையர்கள் தாக்கி
சிறையில் அடைத்தனரே
தவிர காந்திஜியை
ஒன்றும் செய்ய இயலவில்லை
மக்களின் கோபத்தை கட்டுபடுத்த காந்திஜியின்
உண்ணாவிரத போராட்டத்தின் மூலம் முடிந்தது
ஏனென்றால் அவர் என்றும் பிரச்சினைகளை கண்டோ
மரணத்தைகண்டோ பயந்து எங்கும் ஓடி ஒளியவில்லை
அனைத்தும் இறைவன் ஆணைப்படிதான்
இவ்வுலகில் நடைபெறும் என்பதை
முழுமையாக நம்பியதுதான்
அதற்க்கு காரணம்.
அவர் தனக்காக வாழவில்லை.
நாம் நாடு அந்நிய ஆதிக்கத்திலிருந்து
விடுபட்டு மக்கள் நன்றாக வாழ வேண்டும்
என்று மனபூர்வமாக பாடுபட்டார்
.
இன்றைய அரசியல்வாதிகள் போல்
மக்களுக்கு சேவை செய்வதாக
நடித்து மக்களை ஏமாற்ற வில்லை
அனைத்து மத மக்களையும்
பிராத்தனை மூலம் ஒன்றிணைத்து
இந்த வெற்றியை அவர் நிகழ்த்தி காட்டினார்
ஆனால் இன்று நாட்டை ஆளுபவர்கள் வெள்ளையர்கள்
கடைபிடித்த பிரித்தாளும் சூழ்ச்சியையே கையாண்டு
மக்களிடையே விரோத போக்கை உண்டாகி
காந்திஜி கனவு கண்ட ராம ராச்சியத்தை
நடைமுறைபடுத்த தவறிவிட்டனர்.
மற்றும் சமூக அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும்
செயல்களையே செய்து வருகின்றனர்
நல்லொதொரு வாழ்க்கை நம் மக்களுக்கு அமைய
காந்திஜி கடைபிடித்து தந்த பாதையையும்
பிரார்த்தனையும் மக்கள் அனுசரிக்க வேண்டும்
மனம் வெளுக்க ராம நாமத்தையும்
வாழ்வு சிறக்க கீதை காட்டும் பலன்
எதிர்பாராது கடமையாற்றும் பண்பையும்
அந்த இறைவன்தான்
நமக்களிக்கவேண்டும்
சினேகிதி அவர்களே
ReplyDeleteநன்றி
வருகைக்கும் கருத்துக்கும்
ரத்னவேல்அவர்களே
ReplyDeleteநன்றி
வருகைக்கும் கருத்துக்கும்
நல்ல, கருத்துள்ள பதிவு சார் ! பாராட்டுக்கள் ! நன்றி !
ReplyDelete