சுத்தம் சோறு போடும்
சுத்தமின்மை
உடலை கூறு போடும்
சுத்தம் சுகத்தை தரும்
சுத்தமின்மை
சோகத்தைதான் தரும்
சுத்தம் இன்பம் தரும்
சுத்தமின்மை
துன்பம்தான் தரும்
சுத்தம் தரும்
பரிசு நல்வாழ்வு
சுத்தமின்மையால்
தரிசாகும் நம் வாழ்வு
சுத்தத்தை மறந்துவிட்டது
இன்றைய உலகம்
நஞ்சாகிவிட்டது மண்ணும்
நீரும் காற்றும் ஆகாயமும்
புறவுலகில் எங்கு நோக்கினும் துன்பம்
அனைவர் நெஞ்சிலும் வஞ்சம்
பெருகிவிட்டது சுயநலம்
அனைத்தும் தனக்கே என்கிறார்
அகந்தை கொண்டோர்
விளைவிக்கும்
உணவுபொருளோ தாராளம்
ஆனால் உணவு கிடைக்காது
மடியும் மக்களோ ஏராளம்
நோய் தீர்க்க மருத்துவர்கள் பல இருந்தும்
நோய் தீராது மடிபவர்கள் ஏராளம்
உள்ளத்தில் சுத்தமில்லை
செய்கையில் நேர்மையில்லை
பிற உயிர்களிடத்து அன்பில்லை
அதனால் மனதில்
யாருக்கும் அமைதியில்லை
உயிரற்ற பொருட்களை நாடி ஆயுள்
முழுவதும் நாய் போல் அலைகின்றார்
சேர்த்த பொருளை பாதுகாக்கவே
அந்த பொருளில் ஒரு பகுதி செலவு செய்கின்றார்
தன் தேவை போக மிகுதியை இல்லாதவருக்கு
அளிக்க மறுக்கின்றார்
முதுமை வந்து சேர்த்த பொருளை அனுபவிக்காது
மரணம் வந்தபின் வேதனையுடன் உயிர் துறக்கின்றார்
மீண்டும் பேயாய் இவ்வுலகில் தான் சேர்த்து வைத்த
சொத்துக்களை சுற்றியே திரிந்து அல்லபடுகின்றார்
செல்வத்து பயன் ஈதல் என்பதை
வாழ்வில் கடைபிடிக்காமையால்
பலர் அமைதியை நாடி
அங்குமிங்கும் ஓடுகிறார்
கைளில் உள்ளதனைதையும்
விட்டுவிட்டு
தன்னிடத்து உள்ளதை
இல்லாதவரிடம் பகிர்ந்து கொண்டால்
துன்புறுவோரின் துயர் துடைத்தால்
அனைத்துயிர்கள் மீதும்
அகந்தையின்றி அன்பு செய்தால்
கிடைக்கும் மன அமைதி என்பதை
என்றுதான் அறிந்து கொள்வாரோ
இம்மனிதர்கள்
சுத்தம்தான் கடவுள்
புறவுலகில் மட்டுமல்ல
அகவுலகிலும் சுத்தம்தான் கடவுள்
"அகவுலகிலும் சுத்தம்தான் கடவுள்"
ReplyDeleteஅருமை ! நன்றி நண்பரே !
நன்றி.வருகைக்கும் ,கருத்துக்கும்
ReplyDelete