மெய் என்றால் என்ன?
மெய் என்றால் உண்மை
என்று ஒரு பொருள்
மெய் என்றால் நம்முடைய
உயிர் தங்கியிருக்கும் ஒரு கூடு
அந்த மெய் எதனால் ஆக்கப்பட்டது?
பஞ்ச பூதங்களால் ஆக்கப்பட்டது
பஞ்ச பூதங்கள் என்றால் என்ன?
மண்,நீர்,காற்று,தீ ,ஆகாயம் அதாவது வெட்டவெளி
இந்த உடலை விட்டு உயிர் நீங்கிடின் உடல் அழுகி
ரசாயன மாற்றமடைந்து அந்தந்த
மூல பொருளில் கலந்துவிடும்
இந்த உண்மையை
அறிந்துகொள்வதுதான்
உண்மையான அறிவு
மற்றபடி உலகில் உள்ள பொருட்களின்
மூல கூறுகளை
ஆராய்ந்து அறிந்துகொண்டு
நாம் இவ்வுலகில்
நலமாக வாழ பயன்படுத்தி கொள்ள
உதவுவது விஞ்ஞானம்
அந்த அறிவு இந்த உடலை விட்டு
நீங்கியபின் பயன்படாது போகும்
ஆனால் மெய்ஞானமோ
நாம் இவ்வுலகை விட்டு நீங்குவதற்கு
முன்னும், நீங்கிய பின்னும் நமக்கு
தெளிவும் அமைதியும், ஆனந்தமும்
அளிக்கும் மார்கமாகும்
சித்தர்களும், யோகிகளும்,ஞானிகளும்
இதை தெளிவாக தங்கள் நூல்களிலும்,
தாங்கள் வாழ்ந்த வாழ்க்கை மூலமும்
மனித குலத்திற்கு வழி காட்டியுள்ளனர்
இன்றும் முறையாக அணுகுவோருக்கு
உதவவும் செய்கின்றனர்.
Tnx sir
ReplyDeleteWhat is மெய்ஞ்ஞானம் sir?
ReplyDeleteஉங்களைப்போல் தன் சுயரூபத்தை மறைத்துக்கொண்டு செயல்படும் தத்துவத்திற்கு பெயர் "மெய்ஞ்ஞானம்".அதை உங்களுக்குள் தேடுங்கள். அப்போது அது தானே வெளிவரும்.
Delete