தலையோ
பரட்டை
கையிலோ
சிரட்டை
வாயில்
பற்ற வைப்பதோ சிகரெட்டை
விரட்டுவதோ
நம் மன இருட்டை
உடுப்பதோ
கந்தை துணி
அழிப்பதோ நம் அகந்தை பிணி
குளிக்காமல்
பல காலம் இருந்தாலும்
என்றும் புளிக்காத
தெய்வீக கள் அவன் ;
இடி
போன்ற அவன் சிரிப்பில்
பொடியாகிபோகும்
நம் கவலைகோட்டைகள்
அவனை
சுற்றி குவிந்திருக்கும்
அழுக்கு மூட்டைகள்
அவன்
நம்மிடமிருந்து
அகற்றிய பாப மூட்டைகள்
நினைத்தாலே
முக்தி தரும்
அண்ணாமலையான்போல்
அவன் நாமம் நினைத்தாலே
நினைத்த கணம் தோன்றி
விரட்டுவான்
நினைத்தவரின்
துன்பங்களை
உலகையளந்த
நெடுமால்போல்
நெடிய தோற்றம் கொண்டவன்
அருளை வாரி வழங்கும் வள்ளலவன்
ஆனாலும் தன்னை பிச்சைகாரன்
என்று அழைத்து கொள்பவன்
தன்னை நாடி வரும் மக்களை
அன்பால் வசியம் செய்து
ஆட்கொள்ளும் ஆற்றல் படைத்தவன்
காண்போரை வசீகரிக்கும்
பார்வை கொண்டவன்
உள்ளத்தை கொள்ளை
கொள்ளும் மாய
கண்ணனவன் ;
சொல்லிடுவோம்
அவன்
நாமம் எப்போதும்
வாழ்ந்திடுவோம் சுகமாக
இவ்வுலகில் வாழும் காலம் வரை
யோகிராம் சூரத்குமார்
யோகிராம் சூரத்குமார்
யோகிராம் சூரத்குமார்
ஜெயகுரு
ராயா
No comments:
Post a Comment