சொல்வது ஒன்று
செய்வது ஒன்று
சொல்வது:
அனைத்து உயிரிலும் வாசம் செய்யும்
வாசுதேவனான நாராயணனை/ஈசனை/
பராசக்தியை வணங்குகிறேன்
செய்வது:
உயிரற்ற அவன் வடிவங்களுக்கு
அனைத்து உணவுகளையும் அளிப்பது
அவன் வாசம் செய்யும் மற்ற உயிரினங்களனைதையும்
பட்டினி போடுவது
அவன் வடிவங்களுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் செலவு செய்து
கோயில் கட்டுவது
அவன் வாசம் செய்யும் கோடிக்கணக்கான ஏழை மக்களை
வெய்யிலிலும்,மழையிலும், குளிரிலும் வாடி வதங்கி வசிக்க இடமில்லாமல்,வீடில்லாமல் நடைபாதையில் துன்புறுவதை
கண்டும் காணாமல் இருப்பது
உயிர்களின் உள்ளிருப்பவனை போற்றுவது
அவன் தாங்கியுள்ள வடிவமான மனிதர்களை கொடுமைபடுத்துவது, சிறுமைபடுத்துவது, ஒதுக்கி வைப்பது ,சொல்லால் செயலால் இழிவுபடுத்துவது,போன்ற செயல்களை மன சாட்சியின்றி செய்வது
இன்னும் எத்தனையோ
மானிடர்கள் சொல்வதொன்றாகவும் செய்வதொன்றாகவும்
பொய்களையே பேசி,உண்மையை மறைத்து
இறைவழிபாடு செய்வதாக தங்களையே ஏமாற்றிக்கொண்டு திரிகிறார்கள்
இவர்கள் திருந்துவது எந்நாளோ?

அருமையான பதிவு.
ReplyDelete