அக வழிபாட்டுக்கும்
புற வழிபாட்டிற்கும் என்ன வேறுபாடு?
இறைவனிடமிருந்துதான் இவ்வுலகமும்
அதில் உள்ள அனைத்து பொருட்களும்
உயிர்களும் வந்துள்ளது
உயிர்களும் வந்துள்ளது
பிரளய காலத்தில் அவை அனைத்தும்
அவனிலேயே அணுவாக ஒடுங்கிவிடும்
அனைத்தையும் படைத்த இறைவன்
ஒவ்வொரு அணுவிற்குள்ளும் ஒளிமயமாக
சக்திமயமாக இருந்து கொண்டு அதை ஆட்டுவிக்கின்றான்
அவன் ஒவ்வொரு அணுவிற்குள்ளும் இருந்துகொண்டு
ஆட்டுவிப்பதால்தான் அவனின்று ஓர் அணுவும் அசையாது
என்று சொல்லபடுகிறது
.
என்று சொல்லபடுகிறது
.
அணுவிற்குள் சக்தி இருப்பதை பகுத்தறிவுவாதிகள்
நம்பும் விஞ்ஞானமும் உறுதி செய்துள்ளது
நம்பும் விஞ்ஞானமும் உறுதி செய்துள்ளது
ஆனால் தான் என்ற அகந்தை கொண்ட ஒவ்வொரு உயிரும்
அதை மறந்துவிட்டு தன்னால்தான் அனைத்தும் நடைபெறுகின்றன
என்று தவறாக எண்ணிகொண்டு தன்னை இயக்கும் சக்தி
இறைவன்தான் என்பதை வசதியாக மறந்துவிடுகின்றனர்
என்று தவறாக எண்ணிகொண்டு தன்னை இயக்கும் சக்தி
இறைவன்தான் என்பதை வசதியாக மறந்துவிடுகின்றனர்
.
மனிதனின் சக்தியின் அளவு ஒரு வரையறைக்குட்பட்டது
என்பதை அறிந்திருந்தும் அதை மறைத்து ஆட்டம்போட்டு
நிலை தவறி கீழே விழுந்து துன்பத்திற்கு ஆளாகின்றனர்
என்பதை அறிந்திருந்தும் அதை மறைத்து ஆட்டம்போட்டு
நிலை தவறி கீழே விழுந்து துன்பத்திற்கு ஆளாகின்றனர்
.
அவ்வாறு இவ்வுலக மாயையில் சிக்குண்ட மனிதர்களை
மீட்கவே மாபெரும் ஆலயங்களை அந்நாளில்கட்டுவித்தனர்
அதில் இறைவனின் வடிவங்களை நிறுவி
சிதறிப்போன மனிதனின் மனதினை ஒருமைப்படுத்த ,
பூஜைகள்,பஜனைகள் ,உற்சவங்கள் ,திருதலயாதிரைகள்
என பலவிதமான வழிபாட்டு முறைகளை வகுத்துள்ளனர்
என பலவிதமான வழிபாட்டு முறைகளை வகுத்துள்ளனர்
.
புற வழிபாட்டில் மனம் ஒன்றிய பிறகு
நம்முடைய உள்ளத்தில் உறையும் ஆன்மாவாகிய
இறைவனை தியானம் மூலம் அறிய கூடிய அக வழிபாட்டு
வழிமுறைகளை வகுத்து தந்துள்ளனர் நம் முன்னோர்கள்
.
எனவே இரண்டு முறைகளையும்
நாம் கடைபிடித்து நம்மை படைத்த
இறைவனை அடையவே நமக்கு மனித பிறவி அளிக்கப்பட்டுள்ளது
என்பதை உணர்ந்துகொண்டு இந்த உலக மாயையிலே
முழுவதும் நம்மை மூழ்கடிக்கும்
சிந்தனைகள் மற்றும் செயல்களிலிருந்து
விலகி நாம் பிறவி எடுத்த பயனை எய்த
முயற்சி செய்ய வேண்டும்
No comments:
Post a Comment