Monday, January 23, 2012

ஏமாறுவது எதனால்?


இன்று மனதில் பொய்களையே நிரப்பி
அனைவரையும் ஏமாற்றிக்கொண்டு
உலா வரும் பலர் மற்றவர்களிடம்
கூறுவது என்னவென்றால்
பொய் சொல்லுவது எனக்கு
சுத்தமாக பிடிக்காது என்பதுதான்
அதன் பொருள் என்னவென்றால்
நான் என்றும் அசுத்தமாகதான்
இருப்பேன் என்பதுதான்

இன்று நாள்தோறும் நாளேட்டில் எந்த செய்திகள்
வருகிறதோ இல்லையோ ஒரு தனி மனிதரோ 
அல்லது நிதி நிறுவனமோ அல்லது 
வேலை தேடி தரும் நிறுவனமோ 
பல்லாயிரம்  மனிதர்களுக்கு 
பொய்யான வாக்குறுதிகளை அளித்து 
லட்சகணக்கான ரூபாய்களை 
மோசடி செய்யும் நிகழ்வுகள் நிச்சயம் வரும் 


ஏமாற்றுகாரர்களுக்கு  
ஜாதி, மொழி, மதம்,இனம் 
நாடு என்ற பேதம் கிடையாது 
இந்த விஷயத்தில் மட்டும்தான்
உண்மையான  சமத்துவம் நிலவுகிறது  

பலமுறை ஏமாந்தும் மக்கள் திருந்துவதில்லை
இதற்க்கு காரணம், பேராசையும் 
குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கவேண்டும் 
குறுக்கு வழியில் வேலை தேடவேண்டும், 
என்ற சுயநல எண்ணங்கள்தான் காரணம்
இதை ஏமாற்றுபவர்கள் நன்றாக
பயன்படுத்தி கொள்கின்றனர்

இந்த விஷயத்தில் படித்தவர்களும்
ஒன்றுதான் பாமரர்களும் ஒன்றுதான்

ஆசைப்பட ஆசைபட் ஆய் வரும் துன்பங்கள்
என்று அன்றே திருமூலர் சொன்னதை இந்த 
மனித குலம் என்று உணர்ந்துகொள்ளுமோ?


3 comments:

  1. ஒவ்வொரு வரிகளும் சட்டையடி ! நன்றி சார்

    ReplyDelete
  2. அருமையான பதிவு.
    நன்றி.

    ReplyDelete
  3. நண்பரே
    சட்டையடி அல்ல
    சாட்டைஅடி
    ஆனால் எத்தனை அடி விழுந்தாலும் நகராமல் இருக்கும்
    அம்மி போல்டம்மியாக இருக்கும் மனிதர்களை என்ன செய்வது?

    ReplyDelete