Saturday, December 15, 2012
மார்கழி மாத சிந்தனைகள்
மார்கழி மாத சிந்தனைகள்
உரசல்கள் இல்லாத
வாழ்க்கை ஒரு வாழ்க்கையா?
பிரச்சினைகள் இல்லாத
ஒரு தொழிலும் ஒரு தொழிலா?
துன்பமே இல்லாத வாழ்க்கையில்
என்ன சுகம் உள்ளது?
சோதனைகள்
இல்லாதவன் ஒரு பக்தனா?
தோல்விகளே சந்திக்காது
பெற்ற வெற்றி ஒரு வெற்றியா?
இப்படியாக இந்த உலகத்தில்
ஒவ்வொன்றிற்கும் ஒரு
எதிர் விளைவு இருக்கத்தான் செய்யும்.
எதிர்விளைவு இல்லாமல் இருந்தால்
இந்த உலகம் எப்படி இயங்கும்?
இயங்காது
எப்படி. சக்தி இல்லையேல்
சிவமென்று கிட என்பார்களே
அதுபோலத்தான்.
பிரம்மமும் அசையாமல் இருந்தால் அது matter
அது அசைந்தால் energy
தத்துவம் அவ்வளவுதான்.
படைத்தலும், காத்தலும் அழித்தலும் ,மறைத்தலும்
எல்லாம் இந்த இரண்டிற்கும் அடங்கிவிட்டது
இதை விளக்குவதற்காக எண்ணாற்ற இறை அவதாரங்கள்,
ஞானிகள், கணக்கிலங்கா புராணங்கள்,தத்துவ விளக்கங்கள்.
எல்லாவற்றையும் அனுபவித்து ,அறிந்து,
புரிந்து தெளிவதர்க்காகத்தான் மனித பிறவி.
அதை நாம் என் துன்பமாக கருதவேண்டும்.
சம்சாகரம் மிக கொடுமையானது என்று
வார்த்தைக்கு வார்த்தை பிரசாரம் செய்பவர்கள்
முதலில் இந்த பேத்தலை நிறுத்துங்கள்.
அனுபவிக்கத்தான் பிறவி.,
அனுபவித்து திருந்தத்தான் இந்த பிறவி
அனுபவங்களை பெறத்தான் இந்த பிறவி.
அதற்குதான் அந்த பகவான் கிடைத்தர்க்கரிய
மானிட சரீரத்தை நமக்கெல்லாம் அளித்ததுடன்,
நம்முள்ளேயே இருந்துகொண்டு
அதை இயக்குகிறான், பாதுகாக்கிறான்,
நம்முடைய அறியாமையினால்
அந்த உடலை நாம் பாழ்படுத்தியவுடன், மீண்டும்
வேறு ஒரு உடலை தருகிறான் நம் அனுபவங்களை தொடர.
அந்த கருணா மூர்த்தியை
இந்த மார்கழி மாதம் முழுவதும்
அன்போடு நினைந்து நினைந்து
பக்தி செய்து அவ ன் அடியார்களோடு
கூடி மகிழ்ந்து அவன் அருளை பெற்று
நாம் அனைவரும் உய்வோமாக
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment