Monday, December 10, 2012

காவிரி நதி நீர் பிரச்சினை


காவிரி நதி நீர் பிரச்சினை 





தமிழ் நாட்டில் உள்ள பல பிரச்சினைகளில் 
காவிரி நதி நீர் பங்கீடு பிரச்சினை ஒன்று.

இதனால் பல மாநிலங்களில் ஆளும் கட்சிகளுக்கு 
தீராத தலைவலியாக இருந்துகொண்டிருக்கிறது. 
முக்கியமாக கர்நாடகம் ,மற்றும் தமிழ்நாடு அரசுகளுக்கு.

பல ஆண்டுகளாக சில சுய நல சக்திகள் 
இந்த பிரச்சினையை தங்கள் சுயநல லாபத்திற்காக
மக்களின் உணர்ச்சிளை தூண்டிவிட்டு 
குளிர் காய்ந்து கொண்டிருக்கின்றன 

ஊடகங்களும், மொழி வெறியர்களும் 
இந்த பிரச்சினையை தங்களுக்கு சாதகமாக
 பயன்படுத்தி கொண்டு மக்களின் உணர்வுகளை தூண்டி. 
அப்பாவிமக்களிடம் விரோத மனப்பான்மையை தூண்டி விட்டு 
சண்டையிட்டு மடிகின்றனர். 

அவ்வப்போது சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளும், 
பொது சொத்துக்களுக்கு சேதங்களும் 
ஏற்படுத்தப்படுவது வாடிக்கையான செயலாகிவிட்டது. 

குடகிலே பிறந்த காவிரி தமிழ்நாட்டில் 
கொள்ளிடத்திலே அரங்கனை வழிபட்டுகொண்டு 
ஆனந்தமாக அவன் இருப்பிடமான 
வங்கக்கடலை சென்று அடைகின்றாள் 
ஆண்டாண்டுகாலமாக .

அரங்கனை அரவணைத்து கொண்டு செல்வதால் 
அவள் கங்கையை விட புனிதமான காவிரி 
என்று அழைக்கப்படுகிறாள் 

அவள் செல்லும் வழியெல்லாம் செழிப்பும் செல்வமும் 
இறைவனின் அருள் ததும்பும் திருக்கோயில்களும் ஏராளமாக காணக்கிடைக்கின்றன

மக்களின் உள்ளத்திலே சுயநலம் என்னும் 
அரக்கன் புகுந்துகொண்ட பின் காவிரி 
தன்னை மறைத்துக் கொண்டுவிட்டாள்,
மன்னவனான மாலவனிடம் 
தஞ்சம் புகுந்துகொண்டுவிட்டாள் போலும். 
காவிரி மேற்பரப்பு வரண்டு விட்டது.

காவிரியில் கசடர்கள் ஆபத்தான கழிவுகளையும், 
குப்பைகளையும் தொடர்ந்து கொட்டுவதும், 
வண்டல் மண்ணை தொடர்ந்து கொள்ளையடிப்பதும்
தடுப்பதற்கு யாருமில்லை. 

இருந்தும் அவன் தன்மக்கள் 
மீது கொண்ட அன்பினால் 
மழைக்காலங்களில் அனைத்தையும் 
கடலில் கொண்டு தள்ளிவிட்டு
தன்னை சுத்தப்படுத்திகொண்டாலும் 
மதியிழந்த மக்கள் கூட்டம் பாடம் 
கற்றுக்கொள்வதாக தெரியவில்லை.

காவிரி ஒரு நதியல்ல 
மக்களின் இந்த அறிவீனமான 
செயல்களை 
கண்டு அஞ்சி ஓடுவதற்கு

அவள் ஒரு தெய்வம் .ஏழு கடல்களின் 
நீரையே தன் கமண்டலத்திலே அடக்கி வைத்த 
அகத்திய பெருமானின் ஆசி பெற்றவள் 

எனவே இந்த பிரச்சினைக்கு 
அவளே தீர்வு காண்பாள்

முனிவர்களை விருந்துக்கு அழைத்து 
அவர்களை கொன்று தின்று வந்த வாதாபி 
போன்ற அரக்கர்களை அழித்த 
அகத்திய பெருமான் மக்களிடையே 
பேதங்களை தோற்றுவித்து துன்பத்தை 
விளைவிக்கும் இந்த கலிகால
வாய்ச்சொல் வாதாபிகளை 
அழித்து நன்மையை தருவார் 
என்பது சத்தியம்.

No comments:

Post a Comment