Wednesday, December 12, 2012

யோகி ராம் சூரத் குமார்.


டிசம்பர் மாதம்
ஒரு புனிதமான மாதம்

இந்த மாதத்தில்தான் பல யோகிகளும்
தீர்க்க தரிசிகளும் அவதரித்த மாதம்

அப்படிப்பட்ட ஒரு மகான் கங்கை கரையில் பிறந்து
திருவண்ணாமலைக்கு வந்து நம்மிடையே வாழ்ந்து
சமீபத்தில் அங்கேயே இறைவனுடன் கலந்துவிட்டவர்
யோகி ராம் சூரத் குமார்.



அவர் அவதார தினம் இம்மாதம் ஒன்றாம்தேதி
அவர் பக்தர்களால் கொண்டாடப்பட்டது.

அவரை பற்றிய என் கவிதாஞ்சலி .

காசியிலே அவதரித்தாய் அருணையிலே வந்தமர்ந்தாய்
அண்டி வந்தோர் அனைவரின்வாழ்வில் ஒளி வீச செய்திடவே

பொறாமை என்னும் துர்நாற்றம் வீசும் அழுக்காறு தன் உள்ளத்தில் ஓடுவதை உணராது சாக்கடை ஓடும் வீதியிலே சந்தனம் மணக்க வீற்றிருந்த உன்னை விட்டு விலகி சென்றனர் பலர் அந்நாளில்

மணம் வீசும் மலர்களை தேடி வரும் வண்டுகள் போல் எங்கிருந்தோ உன்னை நாடி வந்தனர் பல பேர் உன் பாதங்களில் அடைக்கலம் தேடி
மன நிம்மதி நாடி

நாடி வந்தோருக்கெல்லாம் தடையற்ற உன் அன்பை வள்ளல் போல் வாரி வாரி வழங்கினாய் தன்னை ஒரு பிச்சைக்காரன் என்று அழைத்துக்கொண்ட நீ

முன்னாளில் உன்னை துன்புறுத்திய மூடர்களையும் அன்பால் திருத்தி அவர்களுக்கும் நல்வழி காட்டியது மனித குலத்தின் மீது நீ கொண்ட கருணையன்றோ

உலக தந்தையின் அவதாரம் என்றறியாது உன்னை சோதிக்க வந்தவருக்கெல்லாம்
உன் அருட்பார்வையாலே உணர்த்திட்டாய் நீ உலகிற்கு போதிக்க வந்தவன் என்று

உன்னை காண வந்தவர் உன் தோற்றம் கண்டு எள்ளி நகையாடியோர் ஏராளம் அதை பாராது அவர்களுக்கு உன் தெய்வீகத்தை உணர்த்தி அருள் வழங்கியது தாராளம்

ஸ்ரீராமனாக அவதரித்தவனே யோகி ராம் சூரத் குமாராக அவதரித்துள்ளான்  என்பதை உணர்ந்தோர் வெகு சிலரே

எங்கிருந்தோ வந்து தாமரையில் தேனை சுவைத்து மகிழும் வண்டுகள் போல் உன் அருளை நாடி உன் பாத கமலங்களில் சரணடைய ஓடி வந்தது பக்தர் கூட்டம்

குப்பையில் கிடந்த மாணிக்கம் போல் ஒளி வீசும் உன் தோற்றம் கண்டு கண்டு குவலயத்தை காத்திடவே நீ வந்த தெய்வீக அவதாரம் என்பதை உணர்ந்துகொண்டது மனித குலம்

தாமரையினுள்ளே சுரக்கும் தேனை உண்டு மகிழும் வகையறியாது அதை சுற்றி வரும் பூச்சிகளை உண்ணும் தவளைகள் போல் உன் மகிமைஅறியாது  உலக மோகத்தில் மூழ்கி உன் தரிசனம் நாடாது வாய்ப்பை தவற விட்டவர்கள் பல் கோடி

குன்று போல காட்சியளித்து அகிலத்தை காக்கும் அண்ணாமலையான் போல உன்னை நினைப்போரின் உள்ளத்தில் இன்ப ஊற்றாய் சுரந்து நின்று எப்போதும் அனைவரையும் காத்திடும் உன் திருநாமம்

யோகி ராம் சூரத் குமார் யோகி ராம் சூரத் குமார்
யோகி ராம் சூரத் குமார்    ஜயகுரு ராயா.

2 comments:

  1. யோகியின் அருட்பார்வை அளப்பரிய ஆற்றல் மிக்கது ,ஒருமுறை நாடு வீதியில் நின்றுகொண்டு மலையினை நோக்கியபடி அவர் மனதிற்குள் ஏதோ சொல்லியபடி நின்றார் மிக அருகில் நின்று நோக்கிய எனக்கும் இன்றளவும் அவர் கருணை தொடர்கிறது

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கும் நன்றி.
      நீங்கள் புண்ணியம் செய்தவர். நான் 31.12.12 அன்று
      யோகி ஆஸ்ரமம் சென்று அவரை வணங்கி வந்தேன்.
      அவர் நாமம் எப்போதும் அவரை நினைப்பவரை கவசம் போல் நின்று காக்கும்.

      Delete