Wednesday, December 19, 2012

மார்கழியும் சுற்றுப்புறசூழலும்


மார்கழியும் சுற்றுப்புறசூழலும் 



மார்கழி என்னும்போதிலே 
உடலுக்கும் உள்ளத்திற்கும் இதமான 
பனி படர்ந்த குளிர்ந்த காலை பொழுது 

காதினிலே தேன் போல் பாயும் 
மாலவனின் புகழை காற்றில் தவழ 
வைக்கும் பக்தி பாடல்கள்,பாசுரங்கள்
இசைபாக்கள் 

கண்ணுக்கும் ஆத்மாவிற்கும் ஆனந்தம்
தரும் தெய்வீக தரிசனங்கள் 

கிராமங்களில் பஜனை கோயில்களில் 
மக்கள் கேட்கிறார்களோ இல்லையோ 
ஒலிபெருக்கிகளில் காதை
பிளக்கும் திருப்பாவை பாடல்கள்

வானொலி,தொலைகாட்சிகளில் 
கண் கவரும் வகையில் கோலம்,இசை 
பிரசங்கங்கள் என மனதை த்ன்வயபடுத்தும் 
நிகழ்சிகள் ,ஆஹா மகிழ்ச்சி பிரவாகம் 
எங்கும் ,ஆனந்தம், மகிழ்ச்சி. 

நாவில் ருசிக்க,வெண்பொங்கல், சக்கரை பொங்கல் 
நெய் மணக்க ,வயிறு நிறைய இது பூலோக 
சுவர்க்கம். 

ஆனால் தூய யமுனை என்று அன்று 
கோதை பாடினாளே அது சாக்கடையாக மாறிப்போய் 
பல்லாயிரம் கோடிரூபாய்களை விழுங்கியும் 
நாளுக்குநாள் நாற்றமடித்து கொண்டு நிற்க 
அந்த யமுனை துறைவனை வணங்கும் 
நாம்வெறும் பாட்டில் மட்டும் 
கிளிப்பிள்ளை போல் ஏட்டு சுரைக்காய் போல்
தூய யமுனை தூய யமுனை என்று 
இன்னும் எத்தனை காலம் பாடப்போகிறோம்?

கங்கையில் புனிதமான காவிரி என்றும், 
காவிரி அன்னை என்றும் பாடிக்கொண்டு 
அதில் அனைத்து கழிவுகளையும் விட்டு 
அதை அசுத்தப்படுத்தும் மதிகேடர்கள்,
மூடர்கள்,பக்தர்கள் போல் வேஷம் 
போடும் போலி எத்தர்கள் 

நாம் எவ்வளவு தீங்கு செய்தாலும் 
நமக்கு குடிநீர்,பயிருக்கு நீர் தரும் 
அந்த தெய்வத்தை நாம் எப்படி 
காப்பாற்ற போகிறோம்? 

கறவைகள் பின் சென்று கானம் 
சேர்ந்துண்போம் என்றாள் ஆண்டாள் 
ஆனால் இன்று அந்த பிஞ்சு கன்றுகள் 
பல ஆயிரக்கணக்கில் உயிரோடு 
கேரளாவிற்கு லாரியில் அடைத்து சென்று
இறைச்சிக்காக கொன்று அழிக்கும் 
அரக்கர்களை யார் அழிப்பது? 

வள்ளல் பெரும்பசுக்கள் இன்று 
வதைக்கப்படுவதை கண்டும் கொஞ்சமும் 
உள்ளம் பதை பதைக்காது, 
அது படும் துன்பத்தை கண்டும்
உள்ளத்தில் ஈரம் இல்லாது 
அதன் இறைச்சியை சுவைத்து தின்றுகொண்டு 
குருவாயுரப்பா ,ஐயப்பா என்று 
ஒரு மாதம் மட்டும் பக்தனாக 
வேஷம் போட்டு கூக்குரல் போடும்
பல மாக்களை யார் திருத்துவது? 

பகவானே நீ அரக்கர்களை அழிக்கவில்லை.
அவர்கள் உன்னுடன் போர் புரிவதை விட்டுவிட்டு
மனிதர்களை அவர் வழிக்கு திருப்பிவிட்டனர்போலும்!

அதனால்தான் இன்று இத்தனை 
அநீதிகள், வன்செயல்கள்.

நடுக்கடலில் அகப்பட்ட காகம் மீண்டும்
கப்பலின் கொடிமரத்தைதான் நாடுவதுபோல்
எங்களை ரட்ஷிக்க உன் திருவடியைதான்
பக்தர்களாகிய நாங்கள் நாடுவது எப்போதும்.
என்பதை நீ அறிவாய். 


படம்-நன்றி.google 




2 comments: