Sunday, December 23, 2012

ஆன்மிகம் என்றால் என்ன?


ஆன்மிகம் என்றால் என்ன?


இன்று ஆன்மிகம் என்றால்
கோயிலுக்கு செல்வது
பூஜைகள் செய்வது, விரதம் இருந்து
யாத்திரை செல்வது, இறைவனை பற்றி,
இறையடியார்களை பற்றி பேசுவது ,
பஜனை, உபன்யாசங்களுக்கு செல்வது
மதம்,இறைவன் பற்றிய புத்தகங்களை
பற்றி படிப்பது, அதைபற்றி பிறருடன் விவாதிப்பது.

அடுத்த கட்டம் யாராவது ஒரு ஆன்மீக பெரியவர்
அல்லது, மகான்களின் சமாதிகளுக்கு செல்வது,
அது தொடர்பான பூஜைகளில்
கலந்து கொள்வது என்று போகும்.

சிலர் வாழ்நாள் முழுவதும் ஏதாவது தலத்திற்கு
யாத்திரை சென்று கொண்டே இருப்பார்கள்.
சிலர் ஏதாவது ஒரு நம்பிக்கையில்
மட்டும் இருந்துகொண்டு மற்றவைகளை
சரியல்ல என்று வாதிட்டு கொண்டு
வாழ்நாளை போக்கிகொண்டிருப்பார்கள்.

சிலர் ஏதாவது ஒரு மதத்தில் தன்னை
பெயருக்கு இணைத்துக்கொண்டு
வறட்டு சடங்குகளில் வாழ்நாளை
கழித்துக்கொண்டிருப்பார்கள்.

கர்ம காண்டத்திற்கு பிறகு ஞான காண்டத்தை
பற்றி அவர்களுக்கு அக்கறையில்லை.


சிலர் எலாவற்றையும் படித்துவிட்டு
எந்த சாதனையையும் செய்யாமல்
விவாதித்துக்கொண்டே
ஆயுளை முடித்துக்கொள்ளுவார்கள்.

உலகில் இறைவனை அடைய
உணர்ந்துகொள்ள எத்தனையோ
வழிமுறைகள் உள்ளன.

அவரவருக்கு எந்த முறை ஏற்றதென்று
கண்டுகொண்டு அவரவர் தினசரி
வாழ்க்கை முறையை அனுசரித்து
அதை ஏற்றுக்கொண்டு
அதை நம்பிக்கையுடன்பழகி வந்தால்
இவ்வுலக வாழ்க்கையும் இனிக்கும்,
ஆன்மீக வாழ்க்கையும் இனிக்கும்.

அதை விடுத்து தனக்கு ஒவ்வாத ,
தன்னால் அனுசரிக்க முடியாத முறைகளை
கைக்கொள்ள நினைத்தால்
இவ்வுல வாழ்க்கையும் கசக்கும்
ஆன்மீகத்திலும் எந்த முன்னேற்றமும்
ஏற்படாமல் விரக்தியும்,
மன குழப்பமும் உண்டாகி
துன்பப்பட நேரிடும்.

7 comments:

  1. A spiritual seeker starts his pursuit with simple devotion. When the devotion matures and reaches the state of Para Bhakti, he automatically reaches the state of Jnana. There is a Bhajan song on Ganesa which says that there is no need to go on searching for God elsewhere. The God can be found inside. (Ulle Thedi Kandu Kollalame). The devotee then searches within, finds the God within and becomes free from bondages and attachments. He dedicates all his actions to God and accepts whatever that God ordains. As he progresses, his ego ceases, the individuality ceases and the duality ceases. The diversity which appeared in the beginning of devotion is now removed and the individual Jiva becomes one with Brahman. However, we should underscore the importance of devotion here. It is the devotion that helps the Sadhaka in every step he takes towards spiritual perfection.

    ReplyDelete
  2. I like the soul that aspires, breathes for others.


    அவரவருக்கு எந்த முறை ஏற்றதென்று
    கண்டுகொண்டு அவரவர் தினசரி
    வாழ்க்கை முறையை அனுசரித்து
    அதை ஏற்றுக்கொண்டு
    அதை நம்பிக்கையுடன்பழகி வந்தால்
    இவ்வுலக வாழ்க்கையும் இனிக்கும்,
    ஆன்மீக வாழ்க்கையும் இனிக்கும்.

    அதை விடுத்து தனக்கு ஒவ்வாத ,
    தன்னால் அனுசரிக்க முடியாத முறைகளை
    கைக்கொள்ள நினைத்தால்
    இவ்வுல வாழ்க்கையும் கசக்கும்
    ஆன்மீகத்திலும் எந்த முன்னேற்றமும்
    ஏற்படாமல் விரக்தியும்,
    மன குழப்பமும் உண்டாகி
    துன்பப்பட நேரிடும்.

    ReplyDelete
    Replies
    1. wonderful lines.Thank you.
      இந்த உலகில் எல்லோரும் பிறருக்காகத்தான் வாழ்கிறார்கள் .
      ஆனால் எல்லைகள்தான் மனிதருக்கு மனிதர் மாறுபடுகிறது.

      தனக்காகவும்,தன் குடும்பத்திற்காகவும் பலர்

      ஆனால் தன்னை இழந்து இந்த உலகத்திற்காக தன்னை அர்ப்பணிப்பது ஒரு சிலரே.

      தனக்குள் இறைவனைக்கண்டுகொண்ட அவர்களுக்கு பிற உயிர்களிடம் அதே இறைவன் உறைவதை உணர இயலும்போது அந்த தான்,தனது என்ற எண்ணம் மறைந்துபோய் அவர்கள் அன்புமயமாகிவிடுகிரார்கள்.

      அவர்களால்தான் இந்த உலகம்
      இன்னும் இயங்கிஇயங்கிகொண்டிருக்கிறது

      Delete
  3. எந்த ஒரு செயலும் தனக்கோ பிரர்க்கோ தற்காலத்தோ அல்லது பிற்காலத்தோ தீமை பயக்காத செயலில் ஈடுபாடுடன் ஒழுக்கத்தை கடைப்பிடித்து தன்னை வழி நடத்தும் இறைவன் இன்பத்தை கொடுத்தாலும், துன்பத்தை கொடுத்தாலும் சமமாக பாவித்து இடையராது தெய்வ சிந்தனையுடன் வாழும் வாழ்க்கையே பிரமத்தை சார்ந்த ஆன்மீகம்.

    ReplyDelete
    Replies
    1. எது இன்பம் எது துன்பம் என்று எதைக் கொண்டு வரையறை செய்வது?
      என்பதில்தான் மனிதர்களிடையே குழப்பம்.
      எலியைப் பிடித்து தின்பது பாம்பிற்கு இன்பம் ஆனால் எலிக்கோ துன்பம்
      அதுபோல்தான் ஒவ்வொரு நிகழ்வும்.
      இன்பம் துன்பம், இகழ்ச்சி புகழ்ச்சி, விருப்பு வெறுப்பு ,இருட்டு வெளிச்சம் போன்ற அனைத்து இரட்டை நிலைகளையும் கடந்தால்தான் இன்பம்.
      அதுவரை தேடல் தொடரும்.

      Delete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. மிகவும் சரியான குழப்பம். நாம் இரட்டைகளுக்கு இடையேதான் வாழ்ந்து
    கொண்டு இருக்கிறோம். குழப்பங்களுக்கான உபதேசம் தான் கீதை
    என்பது தெரிந்ததுதான்.
    உற்றறிவைந்தும் உணர்தறி வாறேழுங்
    கற்றறி வெட்டுங் கலந்தறி வொன்பதும்
    பற்றிய பத்தும் பல வகை நாழிகை
    அற்றறியா தழிகின்ற வாறே
    என்னும் திருமந்திரம் ஐந்தறிவு என பற்றிய பத்து என அறிவின்
    படிநிலைகனை கூறுவது சிந்திக்க தக்கதுகற்றல், கேட்டல் உடன் ஐந்தறிவு தொடங்கி பற்றிய பத்தறிவையும் இந்த திருமந்திரம் குறிப்பிடுவது உணர்ந்து (ஆறாவது) , அறிவது (ஏழாவது) அதாவது உணர்ந்தறிவு ஆறு ஏழு எனக்குறிப்படுவது திரு என்னும் அடைமொழியுடன் வரும் இச் சொற்கள் எல்லாம் உணர்ந்து பின்பு அறியத்தக்கதாகும். பற்றிய பத்து என்பதை "பற்றுக பற்றற்றான் பற்றினை" என்னும் திருக்குறள் கூறுவது எய்தவனை நாடியவர்கே அறியப்படும் "அறியும் அறிவாகும் "
    நாம் இதுவரை வாழ்ந்த வாழ்க்கை நமக்கு எது சரி எது தவறு என்பதை உணர்த்தும். குழப்பபம் வருமானால் கலந்துரையாடல் பயன் படும்.

    ReplyDelete