Thursday, August 27, 2015

அச்சமில்லை அச்சமில்லை


அச்சமில்லை அச்சமில்லை 

அகக் கடலில்
எழும் எண்ணங்கள்

அலைகடலில் அரிதுயிலும்
அரங்கனை நினைப்பவர்க்கு

காணாமல் போய்விடும்
அக்கணமே (அகக்)





















அச்சமில்லை அச்சமில்லை
ஹரியை நினைப்பவர்க்கு

மிச்சமில்லை மிச்சமில்லை
என்று நீங்கிடும் அவர்களை
சூழ்ந்த வினைகள் யாவும் (அகக்)



















ஓவியம் -தி.ரா.பட்டாபிராமன் 


அறிவைத் தந்திடும்
ஹரியின் நாமம்

ஆற்றலைத் தந்திடும்
அவனின் லீலைகள்



ஆனந்தம் தந்திடும் அவன்
புகழ் பாடும் இனிய கீதம்

உள்ளத்தில் அமைதியை
அளித்திடும் அவன் தரிசனம்    (அகக்)

Tuesday, August 25, 2015

மாடி முற்றத்திலே தோட்டம் போட்டேன் (6)

மாடி முற்றத்திலே 
தோட்டம் போட்டேன் (6)

புதிய வரவு -துளசி 






மாலவனின் மனம் கவர்ந்த துளசி
மண்டியிட்டு வணங்குபவர்களின்
வாழ்வில் மங்களம் தரும் துளசி.
மாடி முற்றத்திலே வந்து
அமர்ந்து விட்டாள் .

வந்தவுடன் சுற்றுமுற்றும்
ஒரு நோட்டம்  விட்டாள்
யார் யார் இருக்கிறார்கள் என்று

அவன் கண்ணில் முதலில்
பட்டென்று பட்டது பட்டு ரோஜா செடி.





















உடனே அவளைப் பார்த்து
மலர்ந்து சிரித்தது பட்டு ரோஜா  செடி.

வருக  வருக  துளசி அன்னையே
உங்கள் வரவு நல்வரவாகுக

தன்னை அர்ப்பணிக்க அது
நினைத்தாலும் அது தன்னை
அடக்கிகொண்டது.

இதைக் கண்டு கொண்ட துளசி
என்ன தயக்கம். ?
நான் உன்னை
ஏற்றுக்கொள்கிறேன்  என்றது.

பட்டு ரோஜாவோ " அன்னையே"
நான் பார்ப்பதற்கு அழகாக இருந்து
என்ன பயன். ? என்னிடம் மணமில்லை
அதனால் யாரும் என்னை சூடிக்கொள்ள
மனமும் இல்லை  என்று கண்ணீர் வடித்தது.

யார் என்ன வேண்டுமானாலும்
நினைத்துக்கொள்ளட்டும்

இறைவன் படைப்பில்
எல்லாம் ஒன்றுதான்.

இந்த அகந்தை  பிடித்த மனிதர்கள் இப்படிதான்
எல்லாவற்றிற்கும் பேதம் பார்ப்பார்கள்.

எனக்கு எல்லாம் ஒன்றுதான்.
நான் உன்னை ஏற்றுக்கொள்கிறேன்
என்றதும் பட்டு ரோஜா மகிழ்ச்சியோடு
துளசியில்  மடியில் போய் அமர்ந்துவிட்டது



அடுத்து அங்கிருந்த செம்பருத்தியும்
தன் வணக்கங்களை
செலுத்திவிட்டு. துளசியுடன்
தன்னை இணைத்துக்கொண்டது. 

Monday, August 24, 2015

மாடியிலே தோட்டம் போட்டேன் (5)


மாடியிலே தோட்டம் போட்டேன் (5)

புதிய வரவு -பட்டு ரோஜா 



மாடியிலே இருக்கும் முற்றத்திலே
தாவரங்களின் சுற்றம் பெருகி கொண்டே
போகிறது.

தரையிலே ஈரம்
அதனால் துவங்கிவிட்டது
எறும்புகளின் சஞ்சாரம்

அதை பிடித்து தின்ன
தத்தி தத்தி வந்துவிட்டது
தவளைக் கூட்டம்.

புதிய வரவு -பட்டு ரோஜா செடி. 
காலையிலே கடைக்கு போய்விட்டு
வந்தேன்.

வீட்டை ஒட்டி நறுமணம் வீசும்
கழிவு நீர் ஓடையின் ஓரத்திலே
ஓராயிரம் செடிகள்

எதுவும் நான் நட்டு பராமரிக்கவில்லை
அதுவாகவே முளைத்து தழைத்து
ஆனந்தமாக வாழ்ந்து கொண்டு இருந்தன.

அப்போது ஒரு மெல்லிய குரல் என்
காதில் கேட்டது. அண்ணா கொஞ்சம்
கீழே உன் பார்வையை திருப்பு .


















திரும்பியதிசையில் பட்டு ரோஜா செடி
ஒன்று இரண்டு பூக்களுடன் என்னைப்
பார்த்து சிரித்தது . ஐயோ ! அப்படி அழகு

ஆஹா நம்முடைய மாடி முற்றத்தில்
எடுத்து சென்று வளர்க்கலாமே என்று
தோன்றியது .

குனிந்தேன்,,செடியை கையில் எடுத்தேன்.
வீட்டில் ஒரு உடைந்த மக் இருந்தது

அதை "மக்கு "என்று நாம் சிலரை ஒதுக்கி
வைப்பதைப் போல் அதை தூக்கிப் போடாமல்
வைத்திருந்தேன்.

அதில் கொஞ்சம் மண்ணை நிரப்பி அந்த செடியை
நட்டு தண்ணீர் ஊற்றிவிட்டு உள்ளே சென்று திரும்பி வருவதற்குள்
இரண்டு மொட்டுக்கள் மலர்ந்து என்னை பார்த்து புன்முறுவல் பூத்தன



கையால் பறிக்கப் போனேன் . என்ன மென்மை !
பறிக்க மனமில்லை .அப்படியே விடவும் மனமில்லை.
சிறிது  நேரத்தில் வாடி வதங்கி உதிர்ந்துவிடும்.

பட்டு ரோஜாவே !பட்டு ரோஜாவே
என் உள்ளத்தை தொட்ட ரோஜாவே 
மென்மையாய் இருக்கின்றாய் 
ஆனால் பார்த்தவுடன் அனைவரையும் 
வசீகரிக்கும் மேன்மை குணமும் 
கொண்டவளாய் திகழ்கின்றாய். 

இவ்வுலகில் வாழும் காலம் மிகவும் 
குறைவாக இருந்திடினும் அதை 
குறை என்றென்று எண்ணாது 
காண்போருக்கும் இன்பத்தை தந்து 
துன்பத்தை மறக்க செய்கின்றாய்.

இவ்வுலகில் மனிதர்களாகிய நாங்கள் 
நீண்ட காலம் வாழ்ந்து என்ன பயன்?

அனைவருக்கும் துன்பம் தருகின்றோம் 
அகந்தை கொண்டு பிறர் மீது ஆதிக்கம் 
செலுத்தி அல்லல்படுகின்றோம். 

இறைவன் எங்களுக்கு அளித்த வரங்களை 
நினைந்து இன்பம் அடையாது என்றென்றும் 
கவலைக் கடலில் மூழ்கி துன்பப்படுகின்றோம்.

இனி உன்னைக் கண்டேன் 
உன் உயர்வான குணத்தைக் கண்டேன்.
உன்னைப் போல்  நானும் பிறர் முகத்தில் 
மலர்ச்சி ஏற்படும் வகையில் வாழ முயலுவேன். 

கீதையில் கண்ணன் தனக்கு 'ஒரே ஒரு மலரை 
சமர்ப்பணம் செய்தாலே போதும் நான் மகிழ்வேன் 
என்றது நினைவிற்கு வந்தது.



அதற்கு தகுதியானவள் நீதான் .
எனவே உன்னை அவன் 
பாதங்களில் சமப்பிக்கின்றேன். 

Saturday, August 22, 2015

மாடி முற்றத்திலே தோட்டம் போட்டேன் (4)

மாடி முற்றத்திலே 
தோட்டம் போட்டேன் (4)

மிளகாய் புகட்டிய பாடம் 

ஆம்.பூக்கள் மட்டும்தான்  மனிதர்களுக்கு
வாழ்வின் சில உண்மைகளை
உணர்த்தவில்லை.

நம்மை சுற்றியுள்ள அனைத்து  உயிர்களுமே
சில உண்மைகளை உணர்த்தத்தான்
செய்கின்றன

நாம்தான் எதையும் கவனிப்பதில்லை
அவைகள் பேசும் மொழியையும்
காது  கொடுத்து கேட்பதில்லை

வீணாக காசு கொடுத்து கை பேசியை
சார்ஜ் செய்து டிஸ் சார்ஜ் ஆகியதும்
ரி சார்ஜ் செய்து நம்முடைய சக்தி
முழுவதையும்
வீணடித்துக்(நடித்து) கொண்டிருக்கிறோம்

சரி விஷயத்திற்கு வருவோம் 

ஒரு தொட்டியில் சில மிளகாய் வெள்ளை
நிறத்தில் உள்ள விதைகளைத்  தூவினேன்.



சில நாட்களில் விதைகள் முளைத்தன
அவைகள் பச்சை நிறமாய் இருந்தது.

காரமாய் இருந்தால் என்ன அதில்
சாரம் அல்லவோ உள்ளது

அது சம்சாரத்தில் இல்லாவிடில்
வாழ்க்கை ருசிக்குமோ?

சில வாரங்களில் வெள்ளை   நிற பூக்கள்
பூத்தது. .பச்சை நிற இலைகளின் இடையே
வெள்ளை நிற பூக்கள்.

பல உதிர்ந்து போயின. சில பிஞ்சாகி
சில நாட்களில் பச்சை நிறத்தில்
பச்சை மிளகாய் மாறி கண்ணுக்கு
அழகாய் காட்சி அளித்தது .
























பறிக்க மனம் வரவில்லை. இருந்தாலும்
சிலவற்றை விட்டுவிட்டு
சமையலில் அறிந்து போட்டேன்.
அருமையான சுவை.

ஏனென்றால் என் ஆன்மாவல்லவோ அதனுள்
கலந்துள்ளது. சில மாதங்களாக என்னுடன்
பழகிகொண்டிருக்கும் உயிரல்லவோ அது.

வெளியே பச்சை நிறமாய் இருந்தாலும்
உள்ளே வெள்ளை/மஞ்சள்  நிற விதைகள் அதன்
உள்ளம் வெள்ளை போலும்

சிறிது நாள் கழித்து அதே
பச்சை மிளகாய் சிவப்பு நிறமாய் மாறியது.

Red Chilli 100 Seeds S-v 14


கண்ணை கவரும் நிறம்.
அதன் உள்ளே இருக்கும் விதை அதே
வெண்மை நிறம்.

Image result for chilli seeds

நிறங்கள் மாறலாம், வடிவங்கள் மாறலாம்
அனால் உள்ளே இருக்கும் விதைகள் என்றும்
வெண்மை /மஞ்சள் நிறம்.
Chilli Seeds 75 Seeds
அதுபோலதான் மனிதர்களும். அவர்களில்
பல நிறங்கள் உண்டு, நெட்டையாகவும் இருக்கலாம் குட்டையாகவும் இருக்கலாம். அழகாகவும் இருக்கலாம். அழகற்றவர்களாகவும்  பார்ப்பவர்கள் கண்களுக்கு தோற்றமளிக்கலாம். . ஆனால் அனைவருக்குள்ளும் இருக்கும் ஆன்மா ஒன்றே. என்ற உண்மையை அது எனக்கு உணர்த்தியது.

Tuesday, August 18, 2015

மனித பிறவியின் நோக்கம் என்ன?

மனித பிறவியின் 
நோக்கம் என்ன?

விலங்குகளைப் போல்
உண்டு களித்து
பின்பு களைத்து
உறங்கி மீண்டும் எழுந்து
மீண்டும்...

இதற்கு எதற்கு
மனித பிறவி?

எதற்கோ படித்து
எங்கெங்கோ வேலை செய்து
யாருக்கோ உழைத்து தனக்கென்று
ஒன்றும்  செய்துகொள்ளாமல்
எல்லாவற்றையும் அப்படியே
போட்டது போட்டபடி விட்டுவிட்டு
மாண்டு போவதற்கா மனித பிறவி?

பிறந்தது முதல் அச்சத்திலும்
ஆசைகளிலும், சிக்கி துன்பப்பட்டு
அமைதியில்லாமல் வாழ்ந்து
அழிந்து போவதற்கா மனித பிறவி?

கருவறையிலிருந்து கல்லறைக்கு
போகும் வரையில் ஏதாவது ஒரு
அறையில் கைதி போல் அடிமையாக
வாழ்ந்து மடிவதற்க்கா மனித பிறவி?

விண்ணிலிருந்து மண்ணுக்கும்
மண்ணிலிருந்து விண்ணுக்கும்
ஒவ்வொரு உடலாக புகுந்து
பிறகு வெளியேருவதற்கா மனித பிறவி?

இல்லை இல்லை இல்லை

பின் எதற்கு ?

சிந்தனை செய்யுங்கள். 

Monday, August 17, 2015

மாடி முற்றத்திலே தோட்டம் போட்டேன்.(3


மாடி முற்றத்திலே 
தோட்டம் போட்டேன்.(3)

செம்பருத்தியை அடுத்து
ரோஜா செடி வைத்தேன்.

ஆனால் செம்பருத்திபோல்
வேகமான வளர்ச்சி இல்லை

இருந்தாலும் நான்
தளர்ச்சி அடையவில்லை.

தினமும் அதை கண்காணித்து
அதை முன்னேற்ற
முயற்சி எடுத்தேன்.

முயற்சி வீணாகவில்லை
சில வாரங்கள் கழித்து
இலைகள் துளி விட்டன

















அதோடு கூடவே
மொட்டுக்களும்
வெளிர் பச்சை
நிறத்தில் தலை தூக்கின

அழகோ அழகு.
பார்க்க பார்க்க பரவசம்.

















சில நாட்கள் கழித்து மொட்டு மலர்ந்தது.
அழகிய சிவந்த உதடுகள் போல
ரோஜா  மலர் என்னைப் பார்த்து
புன்னகைத்தது.


















அருகே சென்றேன். ரோஜா மலரே
ராஜகுமாரி ,என் ஆசைக் கிளியே
அருகில் வரலாமா என்றேன்.














என் அன்பே
அவசரம் கூடாது
என் பாதுகாவலர்களான
முட்கள் உன்னை தாக்கிவிடுவார்கள்.

நான் உனக்கு சொல்லும்போது
பறித்து அம்பிகைக்கு சூடிவிடு
என்றாள் அவள்

சரி உன் விருப்பப்படியே
என்றேன். நான். (தொடரும்) 

மாடி முற்றத்திலே தோட்டம் போட்டேன் (2)

மாடி முற்றத்திலே 
தோட்டம் போட்டேன் (2)

மாடி முற்றத்திலே
தோட்டம் போட்டேன்.
செம்பருத்தி மலர் செடியை
வாங்கி வைத்தேன்.



அவள் மலர்ந்து மணம்
வீசத் தொடங்கி விட்டாள்
என் மனதையும் கவர்ந்து
விட்டாள் .

காலையில் எனைக் காண
மொட்டாக குவிந்து நிற்பாள்
ஆதவன் வந்ததும் மலரும்
தாமரை போல.

சில நாள் கழித்து உன்னிடம்
ஒரு கோரிக்கை என்றாள்.

தயக்கம் எதற்கு ?
சொல் என்றேன்.

எனக்கொரு தங்கை
வேண்டும்என்றாள்
அவ்வப்போது
உரையாடி மகிழ

அதற்கென்ன ஒருத்தியை
அழைத்து வருகிறேன்
உன் மகிழ்ச்சிதான் என் மகிழ்ச்சி
என்றேன் நெகிழ்ச்சியாக

இந்த வயதான காலத்தில் யார்
என்னோடு பேசுகிறார்கள். ஏதோ
உன் போன்ற அன்பும் பாசமும்
கொண்டவர்களைத் தவிர
என்றேன் அவளிடம்

தெருவில் அடுத்த நாள்
பூ செடிகள் வாங்கலையோ
என்ற குரல் தேனாய்
காதில் பாய்ந்தது.




வாங்கி வைத்தேன் ஒரு ரோஜா
செடியை பூத்திருக்கும் ஒரு மலருடன்.
தன் ஆசை நிறைவேறிய செம்பருத்தி
மகிழ்ந்தாள்.

ஆனால் என்னவோ ரோஜா செடி
தன் பிறந்த வீட்டு நினைவாகவே
இருந்தது போலும் சரியான
வளர்ச்சியில்லை.என்னதான்
நான் நன்றாக கவனித்துக்
கொண்டபோதும்

ஏனம்மா என் வீட்டில் ஏதாவது
குறையோ என்று கேட்டேன்.
நான் உன்னை சரியாக
கவனித்துக் கொள்ளவில்லையோ
என்றேன்.

அதெல்லாம் ஒன்றுமில்லை.
என்குடும்பத்தை விட்டு பிரிந்து
வந்தது என்னமோ போல்
இருக்குது. என்றாள்.  அவள்.

கவலைப்படாதே. ரோஜாவே
உன்னை நான் என் கண் போல்
பார்த்துக்கொள்வேன்.

நாம் எல்லோரும் இவ்வுலகில் 
வாழும் உயிர்கள்தானே 

நான் மனித
உடலில் குடிகொண்டிருக்கிறேன் 
நீ தாவர செடியில் குடியிருக்கிறாய் 
அவ்வளவுதானே 

நம் வடிவங்கள்தானே 
வேறு வேறு .

நாம் எல்லோரும் இந்த
பூமித்தாயின் குழந்தைகள்தானே 


இந்த உண்மையை 
புரிந்துகொண்டால் 
போதும் நீ எங்கிருந்தாலும் 
மகிழ்ச்சியாக 
இருக்கலாம் என்றேன்.  

உன் விளக்கம் மிக மிக அருமை 
இதுவரை யாரும் பொறுமையாக 
என்னிடம் பேசியதும் கிடையாது 

என் உணர்வுகளையும் 
புரிந்து கொண்டது கிடையாது 
என்றது ரோஜா  செடி 

இப்பொழுதுதான் என் 
மனம் அமைதி அடைந்துவிட்டது.
என்று புன்னகை பூத்தது ரோஜா செடி.  
 (தொடரும்)

மாடியிலே தோட்டம் போட்டேன்


மாடியிலே தோட்டம் போட்டேன் 


மாடியிலே தோட்டம் போட்டேன்
செம்பருத்தி மலர் செடிகள் வாங்கி வந்து
தொட்டிகளில் நட்டு வைச்சேன்

காலையிலும் மாலையும்
அன்போடு நீர் வார்த்தேன்

நன்றாக வளர்ந்தது மலர்  செடிகள்
என்னோடு மவுன மொழியில்
பேசி எனக்கு இன்பம் தந்தன
துளிர் இலைகளினால்.

நாளொரு மேனியும் பொழுதொரு
வண்ணமாய் வளர்ந்தன அச்செடிகள்.




நன்றாய் வளர்ந்த செடிதன்னில்
நயவஞ்சகமாய் புகுந்தன  வெள்ளை
நிற பூச்சிகள். வெள்ளை நிறம் கொண்டதே தவிர
உள்ளம் முழுவதும் கள்ளம் நிறைந்தது  போலும்


தோன்றிய மொட்டுக்கள் அனைத்தும் மலராமலே
கருக தொடங்கின. என் மனமும் கூட

பிறகுதான் கண்டு கொண்டேன் காரணத்தை
கொள்ளை அடிக்கும் வெள்ளை பூச்சிகளை
ஒழித்து கட்டினேன்.

அப்புறம் என்ன ?
அழகாய் தோன்றியது
ஆனந்த பூந்தோப்பு






மலர்ந்து சிரித்தது
அழகிய மலர்கள்




என்னை பார்த்து




மகிழ்வோடு ரசித்தேன் .மகேசனுக்கு
சூடி மகிழ்ந்தேன் ..

Sunday, August 16, 2015

தியானம் என்றால் என்ன ?



தியானம் என்றால் என்ன ? 

அதற்கு என் இவ்வளவு முக்கியத்துவம்
அளிக்கப்படுகிறது?

அது அஷ்டாங்க யோகத்தில்
எட்டாவது படி என்று சொல்லுகிறார்களே?

அந்த நிலையை அவ்வளவு எளிதாக
முடியாது என்று சொல்லுகிறார்களே
அது ஏன் ?

ஏழு நிலைகளை முறையாக  கடைப்பிடித்து
பிறகுதான் அந்த முறையை பயிற்சி
செய்ய  வேண்டும் என்கிறார்களே அது ஏன் ?

உலகில் பல தியான முறைகள் இருக்கின்றன
என்றும் அதை பயிற்சி தர பல ஆயிரம் போலிகள்
புற்றீசல் போல் கிளம்பி உலகெங்கும்
மக்களை ஏமாற்றி கோடிக்கணக்கில்  காசு
பார்க்கின்றார்களே அது ஏன்?

தியானம் செய்வதால் தான் இறைவனை
காணமுடியும் என்கிறார்களே அது உண்மையா?

முறையான தியானம் செய்தால்
நமக்கு சக்தி கிடைக்கும்  என்றும்
இல்லாவிடில் தூக்கம் மற்றும்  சோர்வுதான் 
கிடைக்கும் என்கிறார்களே அது உண்மையா?

எதற்காக தியானம் செய்ய வேண்டும்
வெறுமனே கும்பிடு போட்டுவிட்டு
துதி செய்துவிட்டு போனால் போதாதா ?

தியானம், பூஜை எதுவும் செய்ய வேண்டாம்
பஜனை பண்ணிக்கொண்டே போனால் போதும் பரமன்
அகப்பட்டுவிடுவான் என்று ஒரு சாரார் சொல்லுகிறார்களே
அது உண்மையா?

நல்லவனாக ,பொய் சொல்லாமல் ஏமாற்றாமல்
இருந்து வந்தால் போதும் கடவுள் என்று ஒன்று
தேவையில்லை என்று ஒரு கூட்டம் சொல்கிறதே அது சரியா?

ஒவ்வொரு துன்பத்திற்கும்
ஒவ்வொரு வேண்டுதலுக்கும்
வெவ்வேறு  கோயில்களுக்கு
சென்று பரிகாரம்.  செய்யத்தான் வேண்டுமா?

கடமையை செய்து வந்தால் போதும்
கடவுள் நம் வீட்டு வாசலில் நிற்பான்
என்கிறார்கள் அது உண்மையா?

உண்மையில் கடவுளுக்கும்
நமக்கும் என்ன தொடர்பு ?

நாம் சொல்பவைகளை எல்லாம்
அவர் கேட்கும் ஒரு மனிதரா?

ஏன் இத்தனை தெய்வங்கள்?

பிறக்கும் முன்னே எங்கிருந்தோம்,
என்னவாயிருந்தோம்,இறந்த பின் என்ன ஆவோம்,
எங்கே செல்கிறோம்  அந்த விவரம்
நமக்கு ஏன் நினைவிருப்பதில்லை?

இப்படி ஆயிரமாயிரம் கேள்விகள் ஆன்மீக பாதையில்
செல்பவர்களுக்கு எழுந்துகொண்டுதான் இருக்கின்றன.

ஒவ்வொருவரும் அவரவர் மனதிற்கு விளங்கிய
பொருளை மற்றவர்களுக்கு விளக்கி கொண்டுதான்
இருக்கிறார்கள்.

ஒவ்வொருவரும் எந்த விளக்கத்திலும் விளக்கம் பெறாமல்
ஒவ்வொரு கடையாக ஏறி  ஏறி இறங்கிகொண்டிருக்கிறார்கள்
விடை தெரியாமல்.

எல்லாவற்றையும் கூட்டி கழித்துபார்த்தால் 
சரியான விடை வரும் 
என்று ஒரு பழமொழி ஒன்று உண்டு. 

கூட்டி கழித்து பாருங்களேன்.
விடை கிடைக்கிறதா என்று?

நானும் எனக்கு கிடைத்த சில பதில்களை.
உங்கள் முன் வைக்கிறேன்.

ஏற்கெனவே சில ஆண்டுகளாக என்னுடைய 
பதிவுகளில் பலவற்றை அனைவரும் புரிந்து 
கொள்ளும் வகையில் வெளியிட்டுள்ளேன். 
படித்தவர்கள்.  புரிந்து கொண்டிருப்பார்கள். படிக்காதவர்கள்.........









திரு ஆடி பூரம்

திரு ஆடி பூரம் 


Image result for sri andal


ஆடி பூரம் தன்னில்
அவதரித்த  கோதை

கண்ணனையே நினைந்து
நினைத்து அவனுடன்
கலந்துவிட்ட பேதை

இனிமையான முப்பது பாக்களில்
முப்பது முக்கோடி தேவர்களும்
வணங்கும் முகுந்தனின் அருளைப்
பெற பாதை  வகுத்து தந்த மேதை

வேதத்தின் உட் பொருளை
விளையாட்டாய் பாடி அறிந்து இன்புற
பாக்களாய்  தந்தாள் பாவை ஆண்டாள்
திருப்பாவை என்னும் நூலாக

அரங்கனுடன்
கலந்துவிட்ட பக்தை   அவள்
அடியவர்களின் துயர் துடைக்கும்
அன்னையும் அவளே. அவளை
நினைத்து வணங்குவோம்  இந்நாளில்.



இதயத்தில் இறைவனை நிறுத்தி விடு

இதயத்தில் 
இறைவனை நிறுத்தி விடு 






                                                        ஓவியம். தி.ரா..பட்டாபிராமன் 



இதயத்தில்
இறைவனை நிறுத்தி விடு

உன்னை வாட்டி வதைக்கும்
கவலைகளுக்கும் அச்சங்களுக்கும்
உடனே விடை கொடு

உன்னை மீளா துன்பத்தில் தள்ளுவது
எது என்று தெரிந்து கொள்ளடா

அவைகள்தான் நம்மை என்றும்
நரகத்தில் தள்ளும்  விருப்பு வெறுப்பு
என்னும் எண்ணங்களடா

அவைகளை நாம்  விட்டுவிட்டால்
என்றும் நம்  வாழ்வில்  வசந்தமடா

உள்ளத்தில்
அன்பை நிறைத்துக்கொண்டு

அண்டி வந்தோர்
அனைவருக்கும் உதவிக்கொண்டு

இருப்பதனைத்தையும்
அனைவரிடமும் பகிர்ந்துகொண்டு
வாழ்பவர் உலகில் தெய்வமடா


காற்றிருக்கும் வரை
கடலில் அலை இருக்கும்
நம் உடலில் மூச்சு காற்று
வந்து போகும் வரை வாழ்வில்
இன்ப துன்பமிருக்கும்

எது வந்த போதும் எல்லாம்
அவன் செயல் என்றுணர்ந்தவர்
உள்ளத்தில் அமைதி இருக்கும்

புறத்தே ஒளி
தருபவன் ஆதவனடா




நம் உள்ளத்தே உறைந்து
ஒளி தருபவன் மாதவனடா


உலகில் வாழ்வாங்கு
வாழ வழி காட்டியவன்
யாதவன்  கண்ணனடா


இந்த உண்மையை
உணர்ந்தவன்தான்
இறைவனின்
உண்மையானதொண்டனடா

Thursday, August 13, 2015

அலர்மேல் மங்கையே

அலர்மேல் மங்கையே 


அலர்மேல் மங்கையே
அகிலத்தை ஆளும் அரசியே



ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன் 


அன்புடன்  அகத்தில்
நினைப்போர்தன்னை
பரிவோடு  காக்கும்
அன்னையே

எட்டெழுத்து மந்திரத்தில்
எட்டெழுத்தாய் இருந்து கொண்டு
எல்லோரையும் காப்பவளே



                                                  ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன் 



ஒளி வீசும்
திருமுகம் கொண்டவளே
வணங்குவோர்  வாழ்வில்
ஒளி தீபம் ஏற்றுபவளே

என்றும் மறவேன்
உன் திருநாமம்
என் கண்களை விட்டு
என்றும் அகலாது
உன் திருவடிவம்.

ராம ராம என்று சொன்னாலே


ராம ராம என்று சொன்னாலே 

ராம ராம என்று சொன்னாலே
ராக த்வேஷம் அகலும் தன்னாலே

புண்ணியம் பல செய்து
அரிதாய் கிடைத்த மனித பிறவியின்
மகிமையை உணராது அழியும் அற்ப
பொருட்களின் மீதுஆசை கொண்டு
அலையலாமோ (ராம ராம)

அங்கும் இங்கும் விலங்குகள் போல்
அலைந்து திரிந்து முடிவில்
அனைத்தையும் இழந்து
அல்லல்பட்டு அமைதியின்றி
வாழ்வை தொலைக்கலாமோ (ராம ராம)

ஹரி நாமம் ஒன்றே அழியாப் பதம்
தரும் என்பதை உணர்ந்துகொண்டு
அவன் பாதம் வணங்கியே அவன்
அடியார்களின் கூட்டத்தில்
இணைத்துக்கொண்டு
ஆனந்தம் பெறுவதுதான்
வாழ்வின் நோக்கம் என்பதை
புரிந்துகொள்ள வேண்டாமோ (ராம ராம)

அனைத்தையும்
நாம் கேளாமலே
தரும் இறைவனை
பற்றி யோசிக்காது
அகந்தை கொண்ட
மனிதர்களிடம்
சென்று யாசிப்பது
அறியாமையன்றோ (ராம ராம)



Wednesday, August 12, 2015

கண்முன்னே காண்பது கடவுளடா

கண்முன்னே 
காண்பது கடவுளடா 

கண்முன்னே
காண்பது கடவுளடா

நம் முன்னே
உலவிடும் உயிர்களடா

ஊரிலே ஒரு சில பேர் சேர்ந்து
கல்லாலே கோயில் கட்டுறான்
கட்டி வைத்த  கோயிலினுள்
ஒரு கல்லை வைத்து கடவுளாய்
வணங்குறான்.

உடல் என்னும் கோயிலிலே
உறைகின்ற கடவுளை உணர்த்தத்தான்
உலகத்தில் கோயிலை கட்டியது
அந்தக்காலம்.

ஆனால் இன்றோ மனம் கல்லாய்ப் போன
மனிதர்கள் தங்கள் கல்லாப் பெட்டி நிறைக்கக் கோரி
ஆண்டவனிடம் வேண்டுதல்களை வைக்கும்
இடமாய்ப் போனது இந்தக் காலம்

தன்னைச்  சுற்றி துன்புருவோருக்கு
ஆறுதலைத் தர மனமில்லாமல்
ஆலயத்தில் ஆறுமுக சாமியிடம்
ஆறுதலை  தேடி அலையுது ஒரு கூட்டம்.

கை நிறையக் காசிருந்தும்
கஷ்டப்படுவோருக்கு
உதவ மனமில்லாமல்
கால் தூசுக் கூட பெறாத
குப்பைகளை வாங்கி
குவிக்குது ஒரு  கூட்டம்

அன்பே  சிவமாய்
அகத்துள்ள அமர்ந்திருக்க
அதை உணர்ந்து
ஆனந்தம் அடையாது
அகம்பாவம் பிடித்து
அனைத்தையும்
தனதாக்கிக்கொள்ள
துடிக்குது ஒரு கூட்டம்

இறைவனிடம்
கொள்ளும்  அன்புதான்
இன்பம்தரும்  மற்றெல்லாம்
துன்பத்தினைத்தான்
பரிசாய் தந்திடும் என்பதை
உணர்ந்தவரே அறிவுடையோர்.

பக்திக்கு கட்டுப்படும் பரமனே


பக்திக்கு கட்டுப்படும் பரமனே 

பக்திக்கு
கட்டுப்படும் பரமனே

பாற்கடலில்
பள்ளி கொண்ட அரங்கனே




தஞ்சம் என்று
வந்தவரைத்  தவறாது
காக்கும் தயாளனே



அண்டத்தில்
அகண்ட ஜோதியானாய்

பிண்டத்தின் உள்ளேயும்
உறையும் ஆன்ம ஒளியானாய்

கண்டத்திலே நஞ்சை நிறுத்தி
நீல கண்டனானாய் (பக்திக்கு)



கல்லுக்குள்
இருக்கும் தேரைக்கும்,

கருப்பையில்
மிதக்கும் கருவிற்கும்
கண்ணுக்கு புலப்படாத
உயிர்களுக்கும்

உணவு தந்து காக்கும்
தாயானாய்   (பக்திக்கு)

எங்கும்
நிறைந்த பரப்ரம்மமே
அனைத்திலும் ஊடுருவி
நிற்கும் ஆன்ம ஸ்வரூபமே



ஓங்கி உலகளந்த பெருமாளே
என் உள்ளத்திலும் ஒடுங்கி
நிற்கும் உத்தமனே (பக்திக்கு)

இசையும் நானும்(41)


இசையும் நானும் என்னும் தொடரில்
41 வது காணொளி


மவுத்தார்கன்  இசையில்

அன்னமாச்சார்யா கீர்த்தனை-நாராயணதே   நமோ. நமோ.

காணொளி இணைப்பு.

https://youtu.be/IOLE_PuLtGA


Tuesday, August 11, 2015

மணியோசை காதில் கேட்டேன்

மணியோசை 
காதில் கேட்டேன்

மணியோசை
காதில் கேட்டேன்

மனம் மகிழும்
மாலை வேளை

உலகத்தை
காக்கின்ற இறைவன்
உறையும்
இடம்தான் கோயில்




ஒளி வீசும்
தீப சுடரின் முன்னே
மணம்  வீசும் மலர்கள் சூடி
காட்சி தரும் வடிவம்
மனதினில் பதித்துக்கொண்டேன்


மன அமைதியை தந்து
மகிழ்விக்கும் இறைவன் மொழிதான்
ஓங்காரமாய் ஒலிக்கும் நாதம்


அவன் சந்நிதியில் வந்து நின்றேன்
அவன் அடியார்களுடன் கூடி நின்று
உளமுருக அவன் நாமம்  பாடி தொழுதேன்
அனைவரும்  நலமாக வாழ வேண்டி




உலகனைத்தும் வாழ தவம்
செய்து வாழ்ந்த தவ முனிவர்கள்
பாதம் பணிவோம். அவம் பேசாது
அன்போடு சிவ  வாழ்வு வாழ்வோம். 

இசையும் நானும் (40)

இசையும் நானும் (40)




இசையும் நானும்  என்னும் தொடரில்

என்னுடைய 40 வது காணொளி

அன்னமையா கீர்த்தனை

 மிகவும் இனிமையான  பாடல்.

"நாராயணதே  "நமோ நமோ   

என்ற பிரபலமான பாடல்.

என் குரலில்.

காணொளி  இணைப்பு.
https://youtu.be/_z-ZX-5anp4

Monday, August 10, 2015

இசையும் நானும் (39)

இசையும் நானும் (39)

இசையும் நானும் என்னும் தொடரில் என்னுடைய

39 வது காணொளி.

தி எம் சவுந்தரராஜன் அவர்களே இசையமைத்து பாடி 
பிரபலமான முருகன் பாடல். 

மவுதார்கனில் இசைத்துள்ளேன் 



பென்சில் ஓவியம்-தி. ரா. பட்டாபிராமன். 

"முருகா என்றதும் உருகாதா மனம் 
மோகன குஞ்சரி மணவாளா 

உருகாதா மனம் உருகாதா முருகா

குறை கேளாயோ குறை தீராயோ
மாமகள் வள்ளியின் மணவாளா (உருகாதா)

மறையே புகழும் மாதவன் மருகா (உருகாதா)
மாயை நீங்க வழிதான் புகல்வாய்

அறுபடை வீடென்னும் அன்பர்கள் இதயமே
அமர்ந்திடும் ஜோதியே நீ வருவாய் (உருகாதா)

ஜென்ம பாவ வினை தீரவே பாரினில்
சிவமே பதாம்புஜம் தேடி நின்றோம்
தவ சீலா  ஹே  சிவா பாலா
சர்வமும் நீயே ஜெய சக்தி வேலா. (உருகாதா)

காணொளி இணைப்பு.
https://youtu.be/D-FlnxzDwCQ

Sunday, August 9, 2015

இசையும் நானும் (38)

இசையும் நானும் (38)

இசையும் நானும்  என்னும் தொடரில்

என்னுடைய 38வது    காணொளி.

சதாசிவ பிரம்மேந்திரரின் "மானச சஞ்சரரே " என்ற

கீர்த்தனை. சங்கராபரணம் படத்தின் மூலம்

பிரபலமடைந்த  கீர்த்தனை.



அனைவருக்கும் பிடித்த கீர்த்தனை.

எனக்கும் பிடிக்கும். பாடியுள்ளேன்

உங்கள் அனைவருக்காகவும்

காணொளி இணைப்பு.

https://youtu.be/yBmFZ0jS26o



Saturday, August 8, 2015

ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர் கீர்த்தனைகள்.

ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர் கீர்த்தனைகள். 

ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர் போன்ற மகானை பற்றி 
நினைப்பதும் பேசுவதுமே நம்முடைய பாக்கியம்.








கடுமையான தவம் மேற்கொண்டு மிக சமீப காலத்தில்
நம் கண் முன்னேயே பிரம்ம நிலையை அடைந்து
இன்றும் நமக்கு அருள் செய்து கொண்டிருக்கும் மகான்.






அவர் நமக்கு அளித்த கொடை அவருடைய கீர்த்தனங்கள்.

அதில் ஒன்றுதான் மானச சஞ்சரே. 

மனம்தான் அனைத்திற்கும் காரணம்.

அதுவேதான் நமக்கு நண்பனும்

அதுவேதான் நமக்கு எதிரியும் கூட.

ஒரு கட்டிடம் கட்ட சாரம் எப்படி தேவையோ
அதுபோல் இந்த மனமும் நமக்கு தேவை.

அதை பண்படுத்த வேண்டும் .இறைவனை உணர
அதை நமக்கு சாதகமாக விளங்கும் சாதனமாக
நெறிப்படுத்தவேண்டும்.

மனதிற்கு உபதேசம் செய்யும் சுவாமிகளின் பாங்கின் உண்மைப்பொருளை உணராது ஒவ்வொருவரும் தன்  மனம் போன போக்கில் பொருள் கொள்கிறார்கள்.

கடந்த சில நாட்களாக இந்த பாடலின் நோக்கம் என்னவாக இருக்கமுடியும் என்று சிந்தித்தபோது இவன் மனதில் தோன்றிய எண்ணங்களை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். 

பிடித்தால் ஏற்றுக்கொள்ளவும் இல்லையேல்  தள்ளிவிடவும். 

மானச  சஞ்சரரே ..

பிரம்மணி மானச சஞ்சரரே..

மனமே நீ எப்போதும் சத் சித் ஆனந்தம் என்னும்
பிரம்ம பாவத்தில் உலவுவாயாக




மதசிகி பிஞ்சா அலங்க்ருத சிகுரே .

மத  நீர் சொரியும் தந்தங்களை அலங்காரமாக
கொண்ட சிரசை உடைய விநாயக பெருமானைப் போல
மனமே நீ எப்போதும் ஆனந்த நிலையில் உலவுவாயாக

மஹனீய கபோல விஜித  முகுரே. 

இதைப்போன்ற உயர்ந்த நிலையை அடைந்த
மகான்களை போல நீயும் மனதில் கொண்டு உலவுவாயாக

ஸ்ரீ ரமணி குச துர்க  விஹாரே 
சேவக ஜன மந்திர மந்தாரே 

ஐஸ்வர்யங்களை அளிக்கும் லக்ஷ்மியும், துர்க்கையும்
இதயத்தில் வாசம் செய்ய இறைவனின் அடியார்களுடன் கூடி
அவன் புகழ் பாடி ஆனந்தம் அடைவாயாக

பரமஹம்ச முக சந்திர சகோரே 

சகோர பட்சியானது வானிலிருந்து பூமிக்கு வருவதேயில்லை.
அது வானிலேயே பிறந்து அங்கேயே வாழ்ந்து சந்திரனிடமிருந்து வரும் மழை துளிகளைப் பருகி இன்பமாய் இருப்பதைப் போல நீயும் அந்த உயர்ந்த பிரம்ம பாவனையிலேயே எப்போதும் சஞ்சரிப்பாயாக

ஹம்சம் என்னும் அன்ன பறவையானது பாலில் கலந்துள்ள தண்ணீரை நீக்கிவிட்டு பாலை மட்டும் குடிப்பதுபோல் மிக உயர்ந்த நிலையை அடைந்த
பரமஹம்சர்கள் போன்ற மகான்கள் உலகிலே இருந்தாலும் உலக விகாரங்கள் தங்களை ஒட்டவிடாமல் அனைத்தையும் பிரம்மமாக பாவித்து பரவச நிலையில் இருப்பதைப்போல் மனமே நீயும் நீ உயர்ந்த நிலையில் உன்னை வைத்திருப்பாயாக

பரிபூரித முரளி ரவதாரே 

முழும் நிலவைப்போல் வெண்மையாக அழகாக ஒளி  வீசும் முகத்தையுடைய  பரிபூரணனான



பரப்ரம்மம் கிருஷ்ண  பரமாத்மாவின் திருவடிவை தியானித்துக்கொண்டு எப்போதும் ஆனந்த பரவச நிலையில் ,மனமே நீ எப்போதும்உலவுவாயாக.