Monday, August 17, 2015

மாடியிலே தோட்டம் போட்டேன்


மாடியிலே தோட்டம் போட்டேன் 


மாடியிலே தோட்டம் போட்டேன்
செம்பருத்தி மலர் செடிகள் வாங்கி வந்து
தொட்டிகளில் நட்டு வைச்சேன்

காலையிலும் மாலையும்
அன்போடு நீர் வார்த்தேன்

நன்றாக வளர்ந்தது மலர்  செடிகள்
என்னோடு மவுன மொழியில்
பேசி எனக்கு இன்பம் தந்தன
துளிர் இலைகளினால்.

நாளொரு மேனியும் பொழுதொரு
வண்ணமாய் வளர்ந்தன அச்செடிகள்.




நன்றாய் வளர்ந்த செடிதன்னில்
நயவஞ்சகமாய் புகுந்தன  வெள்ளை
நிற பூச்சிகள். வெள்ளை நிறம் கொண்டதே தவிர
உள்ளம் முழுவதும் கள்ளம் நிறைந்தது  போலும்


தோன்றிய மொட்டுக்கள் அனைத்தும் மலராமலே
கருக தொடங்கின. என் மனமும் கூட

பிறகுதான் கண்டு கொண்டேன் காரணத்தை
கொள்ளை அடிக்கும் வெள்ளை பூச்சிகளை
ஒழித்து கட்டினேன்.

அப்புறம் என்ன ?
அழகாய் தோன்றியது
ஆனந்த பூந்தோப்பு






மலர்ந்து சிரித்தது
அழகிய மலர்கள்




என்னை பார்த்து




மகிழ்வோடு ரசித்தேன் .மகேசனுக்கு
சூடி மகிழ்ந்தேன் ..

2 comments:

  1. பூவும் பாவும் அருமை..

    பாமாலையுடன் பூமாலையும்
    பரமனுக்கே சமர்ப்பணம்!..

    ReplyDelete
    Replies
    1. பின்னூட்டம் பின்னிவிட்டீர்கள்
      அழகு தமிழ் கொஞ்சி விளையாடுகிறது
      நன்றி நண்பரே.

      Delete