ராம ராம என்று சொன்னாலே
ராம ராம என்று சொன்னாலே
ராக த்வேஷம் அகலும் தன்னாலே
புண்ணியம் பல செய்து
அரிதாய் கிடைத்த மனித பிறவியின்
மகிமையை உணராது அழியும் அற்ப
பொருட்களின் மீதுஆசை கொண்டு
அலையலாமோ (ராம ராம)
அங்கும் இங்கும் விலங்குகள் போல்
அலைந்து திரிந்து முடிவில்
அனைத்தையும் இழந்து
அல்லல்பட்டு அமைதியின்றி
வாழ்வை தொலைக்கலாமோ (ராம ராம)
ஹரி நாமம் ஒன்றே அழியாப் பதம்
தரும் என்பதை உணர்ந்துகொண்டு
அவன் பாதம் வணங்கியே அவன்
அடியார்களின் கூட்டத்தில்
இணைத்துக்கொண்டு
ஆனந்தம் பெறுவதுதான்
வாழ்வின் நோக்கம் என்பதை
புரிந்துகொள்ள வேண்டாமோ (ராம ராம)
அனைத்தையும்
நாம் கேளாமலே
தரும் இறைவனை
பற்றி யோசிக்காது
அகந்தை கொண்ட
மனிதர்களிடம்
சென்று யாசிப்பது
அறியாமையன்றோ (ராம ராம)
No comments:
Post a Comment