பக்திக்கு கட்டுப்படும் பரமனே
பக்திக்கு
கட்டுப்படும் பரமனே
பாற்கடலில்
பள்ளி கொண்ட அரங்கனே
தஞ்சம் என்று
வந்தவரைத் தவறாது
காக்கும் தயாளனே
அண்டத்தில்
அகண்ட ஜோதியானாய்
பிண்டத்தின் உள்ளேயும்
உறையும் ஆன்ம ஒளியானாய்
கண்டத்திலே நஞ்சை நிறுத்தி
நீல கண்டனானாய் (பக்திக்கு)
கல்லுக்குள்
இருக்கும் தேரைக்கும்,
கருப்பையில்
மிதக்கும் கருவிற்கும்
கண்ணுக்கு புலப்படாத
உயிர்களுக்கும்
உணவு தந்து காக்கும்
தாயானாய் (பக்திக்கு)
எங்கும்
நிறைந்த பரப்ரம்மமே
அனைத்திலும் ஊடுருவி
நிற்கும் ஆன்ம ஸ்வரூபமே
ஓங்கி உலகளந்த பெருமாளே
என் உள்ளத்திலும் ஒடுங்கி
நிற்கும் உத்தமனே (பக்திக்கு)
பரமனையும் பெருமாளையும் இணைத்த துதி நன்று.
ReplyDeleteநன்றி ஸ்ரீராம்.
ReplyDeleteஎன்னுடைய சமீப இசைக் காணொளிகளை நீங்கள் காண விரும்புகிறேன். உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்று நம்புகிறேன்.