மாடி முற்றத்திலே
தோட்டம் போட்டேன் (2)
மாடி முற்றத்திலே
தோட்டம் போட்டேன்.
செம்பருத்தி மலர் செடியை
வாங்கி வைத்தேன்.
அவள் மலர்ந்து மணம்
வீசத் தொடங்கி விட்டாள்
என் மனதையும் கவர்ந்து
விட்டாள் .
காலையில் எனைக் காண
மொட்டாக குவிந்து நிற்பாள்
ஆதவன் வந்ததும் மலரும்
தாமரை போல.
சில நாள் கழித்து உன்னிடம்
ஒரு கோரிக்கை என்றாள்.
தயக்கம் எதற்கு ?
சொல் என்றேன்.
எனக்கொரு தங்கை
வேண்டும்என்றாள்
அவ்வப்போது
உரையாடி மகிழ
அதற்கென்ன ஒருத்தியை
அழைத்து வருகிறேன்
உன் மகிழ்ச்சிதான் என் மகிழ்ச்சி
என்றேன் நெகிழ்ச்சியாக
இந்த வயதான காலத்தில் யார்
என்னோடு பேசுகிறார்கள். ஏதோ
உன் போன்ற அன்பும் பாசமும்
கொண்டவர்களைத் தவிர
என்றேன் அவளிடம்
தெருவில் அடுத்த நாள்
பூ செடிகள் வாங்கலையோ
என்ற குரல் தேனாய்
காதில் பாய்ந்தது.
வாங்கி வைத்தேன் ஒரு ரோஜா
செடியை பூத்திருக்கும் ஒரு மலருடன்.
தன் ஆசை நிறைவேறிய செம்பருத்தி
மகிழ்ந்தாள்.
ஆனால் என்னவோ ரோஜா செடி
தன் பிறந்த வீட்டு நினைவாகவே
இருந்தது போலும் சரியான
வளர்ச்சியில்லை.என்னதான்
நான் நன்றாக கவனித்துக்
கொண்டபோதும்
ஏனம்மா என் வீட்டில் ஏதாவது
குறையோ என்று கேட்டேன்.
நான் உன்னை சரியாக
கவனித்துக் கொள்ளவில்லையோ
என்றேன்.
அதெல்லாம் ஒன்றுமில்லை.
என்குடும்பத்தை விட்டு பிரிந்து
வந்தது என்னமோ போல்
இருக்குது. என்றாள். அவள்.
கவலைப்படாதே. ரோஜாவே
உன்னை நான் என் கண் போல்
பார்த்துக்கொள்வேன்.
நாம் எல்லோரும் இவ்வுலகில்
வாழும் உயிர்கள்தானே
நான் மனித
உடலில் குடிகொண்டிருக்கிறேன்
நீ தாவர செடியில் குடியிருக்கிறாய்
அவ்வளவுதானே
நம் வடிவங்கள்தானே
வேறு வேறு .
நாம் எல்லோரும் இந்த
பூமித்தாயின் குழந்தைகள்தானே
இந்த உண்மையை
புரிந்துகொண்டால்
போதும் நீ எங்கிருந்தாலும்
மகிழ்ச்சியாக
இருக்கலாம் என்றேன்.
உன் விளக்கம் மிக மிக அருமை
இதுவரை யாரும் பொறுமையாக
என்னிடம் பேசியதும் கிடையாது
என் உணர்வுகளையும்
புரிந்து கொண்டது கிடையாது
என்றது ரோஜா செடி
இப்பொழுதுதான் என்
மனம் அமைதி அடைந்துவிட்டது.
என்று புன்னகை பூத்தது ரோஜா செடி.
(தொடரும்)
தோட்டம் போட்டேன் (2)
மாடி முற்றத்திலே
தோட்டம் போட்டேன்.
செம்பருத்தி மலர் செடியை
வாங்கி வைத்தேன்.
அவள் மலர்ந்து மணம்
வீசத் தொடங்கி விட்டாள்
என் மனதையும் கவர்ந்து
விட்டாள் .
காலையில் எனைக் காண
மொட்டாக குவிந்து நிற்பாள்
ஆதவன் வந்ததும் மலரும்
தாமரை போல.
சில நாள் கழித்து உன்னிடம்
ஒரு கோரிக்கை என்றாள்.
தயக்கம் எதற்கு ?
சொல் என்றேன்.
எனக்கொரு தங்கை
வேண்டும்என்றாள்
அவ்வப்போது
உரையாடி மகிழ
அதற்கென்ன ஒருத்தியை
அழைத்து வருகிறேன்
உன் மகிழ்ச்சிதான் என் மகிழ்ச்சி
என்றேன் நெகிழ்ச்சியாக
இந்த வயதான காலத்தில் யார்
என்னோடு பேசுகிறார்கள். ஏதோ
உன் போன்ற அன்பும் பாசமும்
கொண்டவர்களைத் தவிர
என்றேன் அவளிடம்
தெருவில் அடுத்த நாள்
பூ செடிகள் வாங்கலையோ
என்ற குரல் தேனாய்
காதில் பாய்ந்தது.
வாங்கி வைத்தேன் ஒரு ரோஜா
செடியை பூத்திருக்கும் ஒரு மலருடன்.
தன் ஆசை நிறைவேறிய செம்பருத்தி
மகிழ்ந்தாள்.
ஆனால் என்னவோ ரோஜா செடி
தன் பிறந்த வீட்டு நினைவாகவே
இருந்தது போலும் சரியான
வளர்ச்சியில்லை.என்னதான்
நான் நன்றாக கவனித்துக்
கொண்டபோதும்
ஏனம்மா என் வீட்டில் ஏதாவது
குறையோ என்று கேட்டேன்.
நான் உன்னை சரியாக
கவனித்துக் கொள்ளவில்லையோ
என்றேன்.
அதெல்லாம் ஒன்றுமில்லை.
என்குடும்பத்தை விட்டு பிரிந்து
வந்தது என்னமோ போல்
இருக்குது. என்றாள். அவள்.
கவலைப்படாதே. ரோஜாவே
உன்னை நான் என் கண் போல்
பார்த்துக்கொள்வேன்.
நாம் எல்லோரும் இவ்வுலகில்
வாழும் உயிர்கள்தானே
நான் மனித
உடலில் குடிகொண்டிருக்கிறேன்
நீ தாவர செடியில் குடியிருக்கிறாய்
அவ்வளவுதானே
நம் வடிவங்கள்தானே
வேறு வேறு .
நாம் எல்லோரும் இந்த
பூமித்தாயின் குழந்தைகள்தானே
இந்த உண்மையை
புரிந்துகொண்டால்
போதும் நீ எங்கிருந்தாலும்
மகிழ்ச்சியாக
இருக்கலாம் என்றேன்.
உன் விளக்கம் மிக மிக அருமை
இதுவரை யாரும் பொறுமையாக
என்னிடம் பேசியதும் கிடையாது
என் உணர்வுகளையும்
புரிந்து கொண்டது கிடையாது
என்றது ரோஜா செடி
இப்பொழுதுதான் என்
மனம் அமைதி அடைந்துவிட்டது.
என்று புன்னகை பூத்தது ரோஜா செடி.
(தொடரும்)
பூ மனம் ஐயா தங்களுக்கு...
ReplyDeleteநன்றி DD
Deleteஇந்த உலகில் ஒவ்வொரு உயிரும் நம்மோடு உரையாட நினைக்கின்றன .அவைகளிடம் உள்ளதை நமக்கு தரவே.
நாம்தான் சுயநலம், என்னும் செயற்கை சகதியில் சிக்கி இயற்கையை உணர தவறிவிட்டோம் .இன்று தறி கேட்டுப் போய்தவிக்கின்றோம்.
பூக்களிடம் பேசுங்கள்
ReplyDeleteஉங்கள் கல் மனமும்
மென்மையாகும்
பூக்கள் கர்ம யோகிகள்
பூக்கள் தியாக செம்மல்கள்.
மலர்கின்றன
மணம் வீசுகின்றன
கடவுளோ ,காமுகனோ
அல்லது கல்லறையோ
சேரும் இடத்தைப் பற்றி
கவலைப்படுவதில்லை.
மண்ணில் பிறந்து
விண்ணோடு தொடர்பு கொண்டு
மலர்ந்து காண்போர் அனைவருக்கும்
உற்சாகத்தை அளிக்கும் மலர்கள்
கடமை முடிந்ததும் மண்ணுக்கே
சென்று விடுகின்றன
நம்மை சுற்றியுள்ள உலகம் தான்
நமக்கு உண்மையான
ஆசிரியர்கள்.
நாம்தான் அவர்களை
தவறவிட்டுவிட்டோம்.
புத்தகங்களிடமும்
புளுகு மூட்டைகளிடமும்
நம்மை அடகு வைத்துவிட்டோம்.
This Golden comment came from my beloved friend Thiru.V.S.Krishnan -beautiful translation of my Tamil kavithai into english.
ReplyDeleteDear Sri Pattabhi,
"Having born in earth and having risen high to the sky,
Oh flower, you have bloomed in splendour
and spread happiness all around
and as if you have done your duty
went back to the same earth where you came from"
Beautiful verses to be written in golden words
Krishnan
மென்மையான மலர் குறித்து மேன்மையான கருத்து
ReplyDeleteThulasidharan thillaiakathu
6:54 AM (1 hour ago)
மென்மையான மலர் பற்றி மென்மையான ஆனால் அழுத்தமான வரிகள் அதுவும் இறுதி வரிகள்...
நன்றி நண்பரே. மலர்களைப் பற்றி எழுத நினைத்தால் ஆயிரம் பிறவிகள் எடுத்தாலும் போதாது .என்ன செய்வது ?
Deleteஏதோ ஓரிரு துளிகள்