Friday, August 7, 2015

கடவுளை எங்கே தேடுவது?

கடவுளை எங்கே தேடுவது?

கடவுளை எங்கே தேடுவது?

புத்தகத்தில் கடவுளை தேடாதே
கற்பனைக் கெட்டாத கடவுளை
புத்தகத்தில்போய்  தேடாதே
புத்தி கெட்டு  மயங்கி
வீணே மாளாதே  (புத்தகத்தில்)

புத்தனும் சித்தனும்
புத்தகத்திலா கடவுளை தேடினான்
எத்தனும் மத்தனும் நம்மிடம்
எதை எதையோ சொல்லி
ஏமாற்றி  திரியறான்.( புத்தகத்தில்)

விண்ணையும் மண்ணையும்
படைச்சவந்தான் உன்னையும்
என்னையும் படைச்சான்
படைச்ச பின்னே அந்த படைப்புக்குள்
தன்னை மறைத்துக் கொண்டான் (புத்தகத்தில்)

இதை அறியாத மூடர்கள் அவனை
எங்கெங்கோ தேடி அலைகின்றார்.
எவெறேவரோ   சொல்லும் பொய்களை எல்லாம்
நம்பி மோசம் போகின்றார். (புத்தகத்தில்)

கண்டவங்க சொன்ன பேச்சைக் கேட்காமல்
கடவுளைக் கண்டவங்க சொன்னபேச்சைக்  கேட்காமல்
கண்டவங்க சொன்ன பேச்சைக் கேட்டாக்கா
காசும்,காலமும்தான்  வீணாகும்
முடிவில் காலனுக்குதான்
நம் உயிர் இரையாகும்  (புத்தகத்தில்)

கருவறையிலிருந்து கல்லறை
போவதற்குள் நம் இதயக் கோயிலில்
குடியிருக்கும் கடவுளை நாம்
அறிந்துகொள்ளோணும்

இல்லையெனில்
மீண்டும் தாயின் வயிற்றில்
மல மூத்திரக் குட்டையில் ஊறி
உப்பிபோய் மண்ணில் பிறந்து
துன்பப்படோணும்  . (புத்தகத்தில்)

1 comment: