Saturday, August 22, 2015

மாடி முற்றத்திலே தோட்டம் போட்டேன் (4)

மாடி முற்றத்திலே 
தோட்டம் போட்டேன் (4)

மிளகாய் புகட்டிய பாடம் 

ஆம்.பூக்கள் மட்டும்தான்  மனிதர்களுக்கு
வாழ்வின் சில உண்மைகளை
உணர்த்தவில்லை.

நம்மை சுற்றியுள்ள அனைத்து  உயிர்களுமே
சில உண்மைகளை உணர்த்தத்தான்
செய்கின்றன

நாம்தான் எதையும் கவனிப்பதில்லை
அவைகள் பேசும் மொழியையும்
காது  கொடுத்து கேட்பதில்லை

வீணாக காசு கொடுத்து கை பேசியை
சார்ஜ் செய்து டிஸ் சார்ஜ் ஆகியதும்
ரி சார்ஜ் செய்து நம்முடைய சக்தி
முழுவதையும்
வீணடித்துக்(நடித்து) கொண்டிருக்கிறோம்

சரி விஷயத்திற்கு வருவோம் 

ஒரு தொட்டியில் சில மிளகாய் வெள்ளை
நிறத்தில் உள்ள விதைகளைத்  தூவினேன்.



சில நாட்களில் விதைகள் முளைத்தன
அவைகள் பச்சை நிறமாய் இருந்தது.

காரமாய் இருந்தால் என்ன அதில்
சாரம் அல்லவோ உள்ளது

அது சம்சாரத்தில் இல்லாவிடில்
வாழ்க்கை ருசிக்குமோ?

சில வாரங்களில் வெள்ளை   நிற பூக்கள்
பூத்தது. .பச்சை நிற இலைகளின் இடையே
வெள்ளை நிற பூக்கள்.

பல உதிர்ந்து போயின. சில பிஞ்சாகி
சில நாட்களில் பச்சை நிறத்தில்
பச்சை மிளகாய் மாறி கண்ணுக்கு
அழகாய் காட்சி அளித்தது .
























பறிக்க மனம் வரவில்லை. இருந்தாலும்
சிலவற்றை விட்டுவிட்டு
சமையலில் அறிந்து போட்டேன்.
அருமையான சுவை.

ஏனென்றால் என் ஆன்மாவல்லவோ அதனுள்
கலந்துள்ளது. சில மாதங்களாக என்னுடன்
பழகிகொண்டிருக்கும் உயிரல்லவோ அது.

வெளியே பச்சை நிறமாய் இருந்தாலும்
உள்ளே வெள்ளை/மஞ்சள்  நிற விதைகள் அதன்
உள்ளம் வெள்ளை போலும்

சிறிது நாள் கழித்து அதே
பச்சை மிளகாய் சிவப்பு நிறமாய் மாறியது.

Red Chilli 100 Seeds S-v 14


கண்ணை கவரும் நிறம்.
அதன் உள்ளே இருக்கும் விதை அதே
வெண்மை நிறம்.

Image result for chilli seeds

நிறங்கள் மாறலாம், வடிவங்கள் மாறலாம்
அனால் உள்ளே இருக்கும் விதைகள் என்றும்
வெண்மை /மஞ்சள் நிறம்.
Chilli Seeds 75 Seeds
அதுபோலதான் மனிதர்களும். அவர்களில்
பல நிறங்கள் உண்டு, நெட்டையாகவும் இருக்கலாம் குட்டையாகவும் இருக்கலாம். அழகாகவும் இருக்கலாம். அழகற்றவர்களாகவும்  பார்ப்பவர்கள் கண்களுக்கு தோற்றமளிக்கலாம். . ஆனால் அனைவருக்குள்ளும் இருக்கும் ஆன்மா ஒன்றே. என்ற உண்மையை அது எனக்கு உணர்த்தியது.

4 comments:

  1. தத்துவம் அருமை. நானும் மிளகாய் விதை போட்டேன். செடி வரவில்லை. அதே போலக் கொத்துமல்லி விதையும் தூவி இருந்தேன். வரவில்லை. சில பூச்செடிகளும், கரும்பும், ஓமவல்லியும் வந்தன. மிளகாய், கொத்துமல்லி தலைகாட்டவில்லை!

    ReplyDelete
  2. நானும் மிளகாய் விதை போட்டேன். செடி வரவில்லை.

    விதைகளை எறும்பு இழுத்துக்கொண்டு போய் இருக்கும்.
    நிறைய விதைகளை தூவி லேசாக மண்ணை போட்டு தண்ணீர் தெளித்து வாருங்கள். பல செடிகள் முளைக்கும் சில மற்றும் நன்றாக வளரும் .மற்ற செடிகளை அப்புறபடுத்தி விடுங்கள். இலைகளையும் பூக்களையும் தின்று விடாமல் அவ்வப்போது தலை காட்டும்வெள்ளை பூச்சிகளை பார்த்து அப்புறப்படுத்தவேண்டும் முற்றிய இலைகளை நீக்க வேண்டும். பிறகு பிஞ்சு விட்டு காயாகும்.

    அதே போலக் கொத்துமல்லி விதையும் தூவி இருந்தேன். வரவில்லை.

    முழு கொத்தமல்லி விதைகளை இரண்டாக பிளந்து விதைக்க வேண்டும். தினமும் அளவாக தண்ணீர் விடவேண்டும். மண் உலர்ந்து விட்டால் செடிகள் முளைக்காது. .

    ReplyDelete
  3. ஆத்மாவின் தரிசனம்!..

    காணும் கண்கள் இருந்தால்- பச்சை மிளகாயிலும் -
    பரந்தாமனைக் காணலாம்!..

    ReplyDelete
  4. பச்சை வண்ணன் என்று திருநாமம் கொண்ட
    மாலவனின் கோயில் காஞ்சியில் உள்ளதே.
    பச்சை மா மலை போல் படுத்திருக்கிறான்
    திருவரங்கத்தில்.
    பார்த்தாலே பரவசம் தருவது
    பச்சை மிளகாய் .
    பரந்தாமன் இல்லாத இடம் ஏது
    இல்லாத பொருள் ஏது .
    எல்லாம் பார்வையில்தான் உள்ளது

    ReplyDelete