Tuesday, February 28, 2012

சுவாமி சிவாநந்தரோடு ஒரு நாள்


சுவாமி  சிவாநந்தரோடு ஒரு  நாள் 

யார்  மகான் ?

சுவாமியின்  முன்னிலையில்  
சத்சங்கம்  நடந்து  கொண்டிருந்தது

வயதில்  பெரியவர்  ஒருவர் தன்
 மகனுடன்  அங்கு  வந்தார் 
காலில்  செருப்புடன்  
அறைக்குள்  நுழைந்துவிட்டார் 
உடனே  அவர்  மகன்  தன தந்தையிடம்  செருப்பை 
வெளியிலேயே  விட்டுவிடவேண்டும் 
 என்று  நினைவுபடுத்தினார் 
உடனே பெரியவர் திரும்பி
செல்ல  எத்தனித்தார் 

இதை  சுவாமி  சிவானந்தர்  
கண்டுவிட்டார்  .

உடனே அவர் அந்த  பெரியவரை 
பார்த்து  பரவாயில்லை 
வாருங்கள்  நாற்காலியில்  அமருங்கள் 
செருப்புக்களையும் போட்டுக்கொள்ளுங்கள் 

ஏனென்றால்  நாம்  அனைவருமே  
இந்த  நாற்றம் பிடித்த  உடம்பாகிய 
செருப்பை நாம் எங்கு  சென்றாலும் 
போட்டுக்கொண்டேதான் போகிறோம் 
.
அந்த  பெரியவரின்  கண்களிலிருந்து
நன்றி  பெருக்காக  கண்ணீர் 
வழிந்தோடியது 

தான்  செய்த   செயலுக்கு
தன்  மீது  கோபம்  கொள்ளாமல் 
அன்போடு  தன்னை  வரவேற்றது  
அவரது  உள்ளத்தில்  அந்த 
மகானை  பற்றி  விவரிக்கமுடியாத  
மதிப்பும்  மரியாதையும் எழுந்தது . 
என்  முதிய  நிலை  கருதி  என்  மீது 
எவ்வளவு  கருணை  காட்டியிருக்கிறார் 
என்று மனம்  நெகிழ்ந்து போனார் 
.
ஆனால்  வாழ்க்கையில்  நம்மில்  
பலர்  சின்ன  விஷயங்களுக்காக 
மற்றவர்கள்  மனதை  புண்படுத்துவதும் 
கேவலமாக பேசுவதும் ,மீண்டும்  
மீண்டும் வாய்ப்பு  கிடைக்கும்  போதெல்லாம் 
அதையே பலர் முன்னிலையில் நினைவுபடுத்தி 
அசிங்கப்படுதுவதும்  போன்ற  
செயல்களை  செய்து  வருகிறோம் 
.
இது  போன்ற மகான்களின்  வாழ்க்கையில்
நடைபெற்ற  சம்பவங்களை  நினைவு  கூர்ந்து 
நம்மை  நாம் பண்படுத்தி  கொண்டால் 
நம்  வாழ்வு  சிறக்கும் 
(தகவல் -சுவாமி  ஸ்வரூபானந்தா )

Monday, February 27, 2012

தீயவரோடு சேர்ந்தால்

ஒரு நாடு இருந்தது.

அந்நாட்டை ஒரு அரசன் ஆண்டு வந்தான்.
அந்த நாட்டையொட்டி அடர்ந்த காடு இருந்தது.
அதில் சில திருடர்கள் மறைந்து வாழ்ந்து வந்தனர். 
அவர்கள் திடீரென்று நாட்டில்நுழைந்து கொலை
கொள்ளைகளில் ஈடுபட்டுக்கொண்டு மக்களுக்கு 
தொல்லை கொடுத்து கொண்டு வந்தனர். 
அரசன் முயற்சி செய்து அவர்களை பிடித்து 
விசாரித்து அவர்கள் அனைவருக்கும் 
மரண தண்டனை விதித்தான்

அப்போது அரசனின் மந்திரி 
அந்த கூட்டத்தில் ஒரு பையன் இருப்பதை கண்டு 
அவனை மன்னித்து தன்னிடம் விட்டுவிடுமாறும் 
அவனை நல்ல குடிமகனாக வளர்க்க அனுமதி 
அளிக்குமாறும் வேண்டினார்.


அரசன் அதற்க்கு அவன் திருடனின் குழந்தையாதலால் 
அவனிடம் திருடுதல், கொலை செய்தல் போன்ற ஆகிய 
தீய பதிவுகள் அவன் மனதில் நிறைந்துள்ளதால் அவன் 
பெரியவனாக ஆன பின்பும் அந்த தீய பண்புகள் 
அவனிடம் வளரும் என்று கூறி அவனையும்
தூக்கிலிட ஆணையிட்டார்

ஆனால் மந்திரி அரசனிடம் மீண்டும்
வேண்டி கேட்டுகொண்டதில்
அவனை விடுதலை செய்தார்.
மந்திரியும் அவனை நல்ல கல்வியளித்து
நல்ல குடிமகனாக வளர்த்தார்.

சில காலம் பின்பு மந்திரி தீர்த்தயாத்திரை 
சென்று விட்டு திரும்பி வருவதற்குள் 
அந்த பையன் தன் பழைய  நண்பர்களை 
சந்தித்ததும்  அவன் மனதில் உள்ள 
தீய எண்ணங்கள்  உயிர்  பெற்றுவிட்டது 
கட்டுபாடான  வாழ்க்கை அவனுக்கு கசந்தது.
மீண்டும் திருட்டு,கொலை கொள்ளைகளில்
ஈடுபடும் எண்ணம் ஏற்பட்டவுடன் மந்திரி வீட்டில்
 உள்ள எல்லாவற்றையும் கொள்ளை அடித்துவிட்டு
காட்டிற்குள் சென்று மறைந்து விட்டான்
.
தீர்த்த யாத்திரை முடிந்து வந்ததும்
வளர்த்த மகனை காணவில்லை,
வீடும் பாழடைந்து கிடந்ததை கண்டு அரசன் கூறிய
கூற்றுக்கள் மெய்யாகிவிட்டதை கண்டு
மந்திரி அரசனிடம் சென்று
தன்னை மன்னிக்குமாறு
கேட்டுகொண்டான்
.
நம்முடைய மனமும் அப்படிதான் .
அதில் உள்ள எண்ணங்கள் எப்போதும் அழிவதில்லை 
அதை கட்டுபாட்டில் வைத்திருந்தாலும் 
கட்டுப்பாடு தளரும்போது நம்மை 
எதிர்பாராமல் தாக்கி நம்மை வீழ்த்தி விடும் 
என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்

அதனால்தான் நாம் எப்போதும்
நம் எண்ணங்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
நல்ல மக்களிடையே நம் உறவை வைத்துக்கொள்ளவேண்டும் 
தீயவரோடு சேர்ந்தால் அவர்களின் தீய குணங்கள்
நம்மை ஆட்கொண்டு ஒருநாள் நம்மையும்
நம்மை சேர்ந்தவர்களையும் ஒருசேர அழித்துவிடும். 

(சுவாமி சிவானந்தரின் சிந்தனைகள்)




Thursday, February 23, 2012

வாட்டம் போக்கும் மருந்து

உலகில் இரவும் பகலும்
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக 
இரவும் பகலும் மாறி மாறி 
வந்து கொண்டிருக்கின்றன 
அதில் எந்த மாற்றமும் இல்லை 
அதே போல் மனிதர்கள் 
வாழ்க்கையிலும் இன்ப துன்பங்கள்
மாறி மாறி வந்து கொண்டிருக்கின்றன 
எதுவும் நிரந்தரமாக தங்கி விடுவதில்லை
 
அதுபோல்தான் பிறப்பும் இறப்பும் 
இறந்தவர்கள் பிறக்கிறார்கள் 
பிறந்தவர்கள் இறக்கிறார்கள் 
அறிவுள்ளவர்கள் இது ஏன் என்றும்
எப்படி என்றும் சிந்திக்க 
தலைப்படுகிறார்கள்
 
உணர்வுடையவர்கள் 
பாதிக்கபடுகிறார்கள் 

இரண்டும் இல்லாதவர்கள் மற்றவர்களுக்கு 
அடிமைகளாக வாழ்க்கையை கழித்து 
மறைந்து போகிறார்கள் 

தீவிரமாக சிந்திக்கிறவனுக்கு இவை
அனைத்தையும் அந்தந்த காலக்ரமத்தில்
ஒழுங்காக ஏதோ ஒரு சக்தி நடத்தி வைக்கிறது
என்பது  புரிய வந்ததும் அதை அறிய முற்படுகிறான்

அதை அறிந்து புரிந்து கொண்டதும் அவன்
குழப்பங்கள் தீர்ந்து மனம் அமைதியடைந்து 
என்றும் மகிழ்ச்சியாக இருக்கும் 
நிலையை அடைகின்றான்

இந்த உலக பொருட்களின்மீது எந்நேரமும் 
நாட்டம் கொண்ட நாம் சிறிது நேரம் 
அந்த பரம்பொருளின் மீதும் 
நம் நாட்டத்தை செலுத்தி நம் 
வாட்டத்தை போக்கி கொள்ளுவோமாக 

Tuesday, February 21, 2012

கடவுளே மனிதகுலத்திற்கு வழிகாட்டு

கடவுளே மனிதகுலத்திற்கு வழிகாட்டு 

இந்த உலகையும் அதில் உள்ள
அனைத்து உயிர்களையும்
இறைவன்தான் படைத்தான்
படைத்தது மட்டுமல்லாமல்
அவைகளின் உள்ளே தான் ஆத்மாவாக
இருந்துகொண்டு அவைகளை
இயக்கி கொண்டும் இருக்கின்றான்

அப்படி இருக்க கடவுளே இல்லை
என்று ஒரு சிறு கூட்டமும்  கடவுள் இருக்கிறார்
என்று பெரும்பாலான மக்களும் நம்புகிறார்கள்

அவரை எப்படி அடைவது,உணர்ந்து கொள்வது என்பதை
மனிதர்களுக்கு வழிகாட்ட கடவுளை உணர்ந்த
தீர்க்க தரிசிகள் அந்தந்த பகுதிகளில்
வாழும் மக்களின் வாழ்க்கை முறைகளுக்கேற்ப
மதங்களை ஏற்படுத்தி சில வழிபாட்டு முறைகளையும்
தத்துவங்களையும், ஏற்படுத்தினார்கள்

காலபோக்கில் அந்தந்த மதங்களில் பல சுயநல பேர்வழிகள்
மதங்களின் உண்மையான தத்துவங்களை சிதைத்து
அதை சார்ந்துள்ள மக்களை ஆடுகளாகவும் மாடுகளாகவும்
மாற்றிவிட்டனர்.

அதனால் ஒருவொருக்கொருவர் 
அன்பில்லாமல்
பல நூறு ஆண்டுகளாக 
சண்டையிட்டு மடிந்து கொண்டிருக்கின்றனர்

அன்பால் அனைவரையும் இணைக்க 
வந்த மதங்கள் இன்று
மக்கள் அனைவரையும் அடிமாடுகளாக 
சில மத வெறி பிடித்த மனிதர்களிடம் சிக்கி 
சீரழிந்து கொண்டிருப்பதுடன் 
இந்த உலகத்தை ஒரு போராட்ட 
களமாக மாற்றிவிட்டனர்.

மதங்களிடையே உள்ள பொதுவான நல்ல கருத்துகளை
கொண்டு அனைவரிடமும் ஒரு நல்லிணக்கத்தை
ஏற்படுத்த பல ஞானிகள் முயன்று வெற்றி பெற்றாலும்
அதை தன் சுய லாபத்திற்க்காக சீரழிக்க பல குழுக்கள்
தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டு வருவதால்
இந்த உலகில் அமைதி மக்களுக்கு
எட்டா கனியாகவே இருந்து வருகிறது

நம்மையெல்லாம் படைத்த
அந்த இறைவன்தான் இதற்கு
நல்ல வழி காட்ட வேண்டும்
என்று பிராத்தனை செய்வோமாக

.

Monday, February 20, 2012

இன்று மகா சிவராத்ரி



இன்று மகா சிவராத்ரி 

இன்று இரவு முழுவதும் சிவ பெருமானை நினைத்து 
உறங்காமல் வழிபாட்டு புண்ணியம் தேடவேண்டும்

எதற்க்காக இன்று இவ்வளவு முயற்சி எடுக்கவேண்டும் ?

எப்போதும் சிவ பெருமானை நினைத்து
கொண்டிருப்பவர்களுக்கு
தனியாக முயற்சி தேவையில்லை

ஆனால் இறைவனை மோர் சாதத்திற்கு ஊறுகாய் 
தொட்டுகொள்பவர்கள் போல் ஒரு நாளில் நமக்கு இறைவன்
அளித்த24 மணி துளிகளில் ஒரு சில நொடிகள் மட்டும் 
அவனை நினைக்கும் மனிதர்களை இறைவன்பால் 
மனதை திருப்ப இதுபோன்ற விரதங்கள் தேவைபடுகின்றன

அன்பே சிவம் என்று சொல்கிறார்கள்

சிவபெருமான்தான் எல்லா உயிர்க்கும் தலைவன் 
அதனால்தான் அவனுக்கு பசுபதி என்று அழைக்கபடுகின்றான்

கண்ட மனிதர்களையெல்லாம் தலைவா தலைவா  என்று
சுயலாபங்களுக்காக வாழ்நாளெல்லாம் 
அழைத்து வீண் பொழுது போக்கும் மனிதர்களே


 நாமெல்லாம் வாழ ஆலகால விஷத்தை தன்னுடைய 
கண்டத்தில் நிறுத்தி நம்மை எல்லாம் 
காத்த தியாகத்தின் உருவமாம் சிவபெருமானை,
எந்த நோக்கத்தோடு  தவம் செய்து
வரம் கேட்டாலும் அதை தப்பாமல் 
அளிக்கும் சிவபெருமானை,
எளிய முறையில் புற வழிபாடுகள் செய்தாலும்,
மனதிலே அக வழிபாடுகள் செய்தாலும் 
மிகவும் மகிழ்ந்து  பக்தர்களை 
காக்கும் அன்பு தெய்வத்தை
ராம நாமத்தின் பெருமையை 
அனைவருக்கும் உபதேசித்து முக்தியை 
அடைய வழி காட்டிய வள்ளல் பெருமானை,  
பக்தனுக்காக  தன  முதுகில் 
பிரம்படி  பட்ட  தயாபரனை  
பகீரதனுக்காக கங்கையை தன ஜடாமுடியில் தாங்கியவனை
தஷனின் சாபத்தால் களையிழந்த சந்திரனின் சாபம் நீங்க தன காலில்
விழுந்தவனை தா தலையிலே தாங்கியவனை  
 தனக்கென்று எதையும் வைத்துகொள்ளாமல் 
தியாகேசனாக விளங்கும் மூர்த்தியை
மனதில் தியானித்து 
எல்லா வளங்களையும் பெறுவோமாக .

அதே  நேரத்தில்  அனைவரிடமும்
 எப்போதும் அன்பு செலுத்தி 
அறவழியில் வாழ்க்கை நடத்தி,
 இறைவன் நமக்கு வாழ்ந்து காட்டிய
 நல்ல குணங்களை  நம் வாழ்வில் கடைபிடிக்க
 இந்நாளில் உறுதி ஏற்று செயல்படுவதுதான் 
மகாசிவராத்திரியின் உண்மையான வழிபாடு  

Sunday, February 19, 2012

பாவம்தான் பக்தி

பயிற்சியே முக்கியம்

ஒருவன் ஆன்மீகத்தில் தொடர்ந்து இடைவிடாமல்
பயிற்சிகளை மேற்கொள்ளவேண்டும்
தொடர்ந்து பயிற்சி செய்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும்
தேவைப்படுவதெல்லாம் இறைவனிடம்
 மாறாத அன்பு ஒன்றுதான்
இது இடையறாது இருக்கவேண்டும்

ஒரு சாதாரண வெள்ளை காகிதம்
அல்லது வர்ண காகித துண்டிற்கு
மதிப்பு கிடையாது ஆனால் அந்த
காகிதத்தின் மீது அரசாங்கத்தின்  முத்திரை
இருந்துவிட்டால் நீங்கள் அதை பத்திரமாக உங்களுடைய
பணபைய்யிலோ அல்லது இரும்பு பெட்டியிலேயோ
வைத்து கொள்ளுகிறீர்கள்
இதேபோல்தான் ஒரு கல்; துண்டுக்கும்
எந்தவித மதிப்பும் கிடையாது
நீங்கள் அதை எறிந்துவிடுகிறீர்கள்

ஆனால் நீங்கள் பண்டரிபுரதிலுள்ள
கிருஷ்ணா பரமாத்மாவின் கல் சிலையையோ
அல்லது கோயில்களிலுள்ள மூர்த்தியை
 பார்த்தால் கை கூப்பி வணங்குகிறீர்கள்
ஏனென்றால் அந்த கல்லின் மீது இறைவனின்
முத்திரை இருக்கிறது
பக்தன் அந்த கல் சிலை மீது தன்னுடைய அன்பிர்க்குரியவனையும்,அவனுடைய
எல்லா குணாதிசயங்களையும் காண்கின்றான்.

பாவம்தான் பக்தி 

நீங்கள் எதை நினைகின்றீர்களோ
அதுவாகவே ஆகிவிடுவீர்கள்
இறைவனின் நாமமும்
இறைவனின் வடிவமும்,
இறைவனும் அனைத்தும் ஒன்றே. 

Saturday, February 18, 2012

சாதுக்களின் இதயம் எப்படிபட்டது?


சாதுக்களின் இதயம் எப்படிபட்டது?

ஒரு நாட்டில் ஒரு மன்னன் வாழ்ந்து வந்தான் 
அவன் துறவிகள் தங்குவதற்காக ஒரு ஆஸ்ரமம்  கட்டினான்
அவனுடைய குரு தன் சீடர்களுடன் அங்கு தங்கி ஆன்மீக 
சாதனைகளை செய்து வந்தார்

இதை கண்டு பொறுக்காத அமைச்சர்கள் சிலர் அரசனிடம் ஆஸ்ரமத்தில் 
உள்ளவர்கள் நன்றாக உண்பதுமுறங்குவதுமாக தண்டமாக பொழுது போக்கி சாதனைகள் எதுவும் செய்யாமல் காலத்தை கழித்து 
அரசு பணத்தை வீணடிக்கின்றனர் என்று புகார் கூறினார்கள்

உடனே அரசன் தன் குருவை அழைத்து இது பற்றி விசாரித்தான்
அதற்க்கு குரு அரசனை அதிகாலை தான் மூன்று மணிக்கு 
வந்து எழுப்புவதாகவும் அதற்க்கு அரசனை தயாராக 
இருக்குமாறு கேட்டுகொண்டார்

அரசனை ஒரு குடம் தண்ணீருடன் தன் பின்னால் 
வருமாறு குரு கேட்டுகொண்டார்
முதலில் அமைச்சர்கள் வீட்டிற்கு 
சென்று தூங்கும் அவர் முகங்களில்
தண்ணீரை தெளிக்குமாறு குரு கூறினார்
தண்ணீர் தெளித்தவுடன் அவர்கள் அனைவரும் 
உறக்கம் கலைந்து எழும்போது ,
முட்டாள்,கழுதை,அறிவு கெட்ட முண்டம் 
எங்கள் உறக்கத்தை கலைத்தது யார் 
என்று கத்திக்கொண்டே எழுந்தனர்

குதிரை லாயதிர்க்கு சென்று அங்குள்ளவர்களை 
அதுபோல் எழுப்ப அவர்களும் திட்டிக்கொண்டே வசை பாடினர்
 
பிறகு அனைவரும் ஆஸ்ரமம் சென்று 
அங்குள்ளவர்கள் மீது தண்ணீர் தெளித்தும் 
அனைவரும் சிவோஹம்,ஹரிஓம், ராம் ராம்
 என்று சொல்லிக்கொண்டே எழுந்தனர்
.
இப்போது ஆச்ரமவாசிகளுக்கும்
 மற்ற மனிதர்களுக்கும் உள்ள 
வேறுபாட்டை கவனித்தீர்களா ? 
என்று குரு அரசனை கேட்டார்
ஒவ்வொரு மனிதனின் வாயிலிருந்து 
வரும் வார்த்தைகள் அவன்
 மன உணர்வுகளையும் பண்பையும் குறிக்கும்
 
உண்மையான சாதுகளும் சந்நியாசிகளும்
மற்றவர்களைப்போல் உணவு உண்பது 
உடலை கொழுக்கவைத்து  
வளர்ப்பதற்காக அல்ல
உடலில் உயிரை காப்பாற்றி 
ஆன்மீக சாதனைகளை செய்யத்தான் 
என்பதை புரிந்து கொள்ள வேண்டும் 
என்று குரு சொன்னதை 
அரசன் உணர்ந்துகொண்டான்.

அவர்கள் பசி என்பது உடல் சம்பந்தப்பட்டது 
ஆன்மா சம்பந்தப்பட்டது  அல்ல என்பதை உணர்ந்தவர்கள் 
அவர்கள் அடுத்தநாள் பட்டினி கூட கிடக்கலாம், 
அல்லது கிடைத்ததை திருப்தியுடன் உண்டு 
உலக நன்மைக்காக சாதனையை தொடருவார்கள் 

உலக மோகத்தில் மூழ்கியிருப்பவர்களுக்கு 
அது புரியவாய்ப்பிலை என்று குரு கூறியதை 
அரசனும் மற்றவர்களும் ஏற்றுகொண்டனர். 
(ஸ்ரீ சுவாமி சிவானந்தரின் அருள்;உரைகள்)

Friday, February 17, 2012


கருத்து: என்னுடையது
படம் :நன்றி http://engeyumeppothum.blogspot.in/


Darkness is also a form of GOD

Darkness is also a form of GOD

If there is no darkness we cannot
see GOD who is in the form of light.


AS SUN 's rays

he dispell the
darkness of the world
like X-rays which exposes 

our inner parts of the body

He destroys our ego 

through sufferings,
illness,loss,pain
troubles,accidents and

by numerous ways
to mould us into a beautiful 

ever blissfull atman.

Like a scissor which cuts the clothes

into several pieces
to stich a beautiful garment 

in the hands of a tailor


If we sincerely prays to him
He will mend our evil traits
and make us fit to attain 
divine bliss before we end 
our earthly journey.

உங்களுக்கு ஏன் மன நிம்மதி இல்லை?

உங்களுக்கு ஏன் மன நிம்மதி இல்லை?

ஏன் எனக்கு மன நிம்மதி இல்லாமல் போயிற்று?
நான் ஏன் மனசஞ்சலத்துடன் இருக்கின்றேன்?
என்னுடைய பிரச்சினைகள்தான் என்ன?

எனக்கு எல்லாம் இருக்கிறது.
இருந்தும்மனம்  எதையோ நினைத்து
கலங்குகிறது அல்லது பயப்படுகிறது
அல்லது கவலைப்படுகிறது

இந்நிலை மாறி எப்போது மனம் அமைதியாக
நிம்மதியாக இருக்கும் என்று இன்று
பல பேர் புலம்புகிறார்கள்

சிலர் வெளியே காட்டி கொள்கிறார்கள்
பலர் மனதிற்குள்ளேயே போட்டு
புழுங்கிகொண்டிருக்கிரார்கள்

எது எப்படி இருந்தாலும் அது அவர்களின் முகம்
அவர்கள் கவலைப்படுவதை காட்டிகொடுத்துவிடும்

இந்நிலை நீடித்தால் அது அவர்களின்
ஆரோக்கியத்தை கெடுத்துவிடும்
அவர்கள் வாழ்க்கையின்
மகிழ்ச்சியை பறித்துவிடும்

தொடர்ந்து அந்த நிலையிலிருந்து
மீளவில்லை என்றால்
மற்றவர்களிடமிருந்து
அவர்களை தனிமைபடுத்திவிடும்
மது,மற்றும் போதை பழக்கங்களுக்கு
ஆட்படுத்திவிட்டும்

முதலில் மனிதர்கள் தங்களின் இந்த நிலைக்கு
அவர்களேதான் காரணமாக உள்ளனர் என்பதை
உணர்ந்துகொள்ளவேண்டும்

அவர்களின் அறிவற்ற செயல்களே
அவர்களின் துன்பத்திற்கு
காரணமாகும் என்பதை
புரிந்துகொள்ளவேண்டும்

இந்த நிலையிலிருந்து மீள வேண்டுமேன்றால்
தனது மனதில் நல்ல எண்ணங்களை மட்டுமே
உருவாக்கி அவைகளை
உறுதியுடன் இருக்குமாறு
 பார்த்து கொள்ளவேண்டும்

எல்லையற்ற ஞானத்தின்  மூலமாக மனதில் நல்ல
ஒளியினை ஏற்ற வேண்டும்
ஞானத்தின் மூலாதாரத்தை
அடைந்துவிட்டால் அது பின்னர்
நல்ல தெளிவினை கொடுக்கும்

நல்ல ஆன்மீக நூல்களை படித்து
அதில் வழிகாட்டியுள்ளபடி
வாழ்க்கையில் கடைபிடிக்க
முயற்சி செய்ய வேண்டும்

உணவின்றி உடல் இருக்கலாம் .
ஆனால் அக உணவின்றி இருக்கலாகாது.

(சுவாமி சிதாநந்தரின் சிந்தனைகள்)




Tuesday, February 14, 2012

பிறப்பிறப்பு சுழலிருந்து விடுபட முயற்சிக்கவேண்டும்

இறைவனிடமிருந்து பிரிந்து கணக்கற்ற பிறவிகளை அடைந்து
பலவிதமான பிறவிகளை எடுத்து,இன்ப துன்பங்களை அடைந்து ஆசையினாலும், மோகத்தினாலும், அறியாமையாலும் பல இன்னல்களை அனுபவித்து இந்த சுழலிலிருந்து விடுதலை அடைவதற்காக இறைவனால் நமக்கு அளிக்கப்பட்ட பிறவிதான் மனித பிறவி

அதை உணராது இந்த உலக மாயையில் மூழ்கி உலகத்திற்கு தான் வந்ததின் நோக்கத்தை உணராது அகந்தை கொண்டு அன்பில்லாது பிற உயிர்கள் மீது ஆதிக்கம் செலுத்தியும் ,தன்னை படைத்த இறைவனை உணர்ந்துகொள்ளும் மார்க்கத்தை நாடாது வாழ்க்கையை வீணடிப்பதே தங்கள் உயிர் மூச்சாக கொண்டு இந்த உலகில் பெரும்பாலான  மனிதர்கள் தங்கள் காலத்தை கழித்து கொண்டு வருவது மிகவும் வருத்தர்க்குரியது 

எக்கணமும் மரணத்தை தழுவும் உடல் கொண்ட நாம் தம்மைப்போல் அழியக்கூடிய மனிதர்களின் உடல் மீது இச்சை கொண்டு அதை 
பரா(மரிப்பதிலேயே }ஆயுள் முழுவதும் நம்முடைய நேரத்தையும், சக்தியையும் வீணடித்து கொண்டிருக்கிறோம் 

இறைவனே கணக்கற்ற முறை இவ்வுலகில் அவதரித்து மனிதர்களுக்கு அறிவுறித்தியும் ,மெய்யறிவு பெற்ற சித்தர்கள், யோகிகள் ஞானிகள் 
போன்றவர்களை   இவ்வுலகிற்கு அனுப்பி மனித குலத்திற்கு நல்வழிகாட்டி அவர்களை மாயையிலிருந்து மீட்க வழிவகைகள் செய்தும் மனித குலம் எந்த பாடத்தையும் கற்றுகொள்ளாமல் நிலையற்ற பொருட்கள்மீதே தங்கள் நாட்டத்தை தங்கள் ஆயுட்காலம் முடியும்வரை செலுத்தி மீண்டும் பிறவி என்னும் புதைகுழிக்குள் (தாயின் கருவறை) விழுந்து துன்பபடுவதற்க்கே முயற்சி செய்கின்றனர். 

எனவே இனியாவது இறைவனின் நாமத்தை உச்சரித்துக்கொண்டு 
பற்றற்று தங்கள் கடமைகளை தங்களை இறைவனின் கருவியாக கருதி 
செய்து இந்த பிறப்பிறப்பு சுழலிருந்து விடுபட முயற்சிக்கவேண்டும்     

Sunday, February 12, 2012

இப்பிறவியிலே இன்ப வாழ்வு வாழலாம்

பெறுதர்க்கரிய மனித பிறவியை 
பெற்ற பின் அதை வீணடிக்கலாமா?

பெறுதர்க்கரிய மனித பிறவியை பெற்றும்
அதன் மகிமையை உணராமல் மனிதர்கள்
விலங்குகள்போல் வாழ்க்கையை 
ஒட்டிகொண்டிருக்கின்றனரே ,அவர்களின் 
அறியாமையை என்னவென்று சொல்வது?

உண்பதற்க்காகவும் உறவு கொள்வதற்காகவும்
உலகில் நிலையில்லாத உயிரற்ற 
பொருட்கள் மீது மோகம் கொண்டு 
ஆயுளில் தூங்கும் நேரம் போக விழித்திருக்கும் நேரம் 
முழுவதும் வீணடிக்கும் செயலை என்னவென்று
சொல்வது ?
 
மனதில் ஆசை கொண்டு புலன்களின் வழியே மனதை
செலுத்தி வாழ்நாள் முழுவதும் இன்ப துன்பங்களில்
சிக்கிக்கொண்டு வேதனைப்படவா இந்த பிறவி 
நமக்கு இறைவனால் அளிக்கப்பட்டது 
என்பதை  ஒரு கணம் சிந்திப்பீர்

கணத்திற்கு கணம் மாறும் மனதினால் எப்படி
நிலையான இன்பத்தை அடையமுடியும் என்பதை 
தயவு செய்து மனிதர்கள் சிந்தித்து பார்த்தார்களேயானால் 
தங்கள் செய்யும் செயல் எவ்வளவு மூடத்தனமானது
என்பதை உணர முடியும்
 
உண்மையான, நிலையான என்றும்,
எப்போதும் மாறாத இன்பம்
நம்முடைய ஆன்மாவில் உள்ளது  என்பதை 
இனியாவது நினைவில் கொண்டு அந்த 
இன்பத்தை அடைய இக்கணத்திலிருந்து 
முயற்சி செய்யுங்கள்
 
மரணம் நம்மை எந்த நொடியிலும் ஆட்கொன்றுவிடும்
எனவேஇறைவன்  நம்மை ஆட்கொள்ள அவன் 
நாமத்தை இடைவிடாது மனதில் உச்சரித்துக்கொண்டே 
இந்த உலக பணியில் ஈடுபடுங்கள்
 
மனதில் இறைவன் புகுந்துகொண்டால்
உலக ஆசைகள் தானே வெளியே சென்று விடும்

இப்பிறவியிலே இன்ப வாழ்வு வாழலாம்       

 

Friday, February 10, 2012

இறைவனை நோக்கி தவம் செய்யுங்கள்

தவம் செய்யுங்கள்  
ஆனால் வரம் கேட்காதீர்கள் 

இறைவனை நோக்கி தவம் செய்யுங்கள் 
ஆனால் அவனிடம் எந்த வரமும் கேட்காதீர்கள் 

ஏனென்றால் நமக்கு எந்த பொருளை பற்றியும் 
முழுமையான அறிவு கிடையாது

நம்முடைய அறிவெல்லாம் புலன்கள் 
காட்டும் வழியை பொறுத்தது

புலன்கள் வெறும் கருவிகளே
அவைகள் அவைகள் காணும் 
காட்சி அல்லது உணர்வுகளின் 
அடிப்படையில் முடிவுகளை நமக்கு 
அறிவிக்கின்றன

புராண கதைகளை உற்று நோக்கினால்
சில உண்மைகள் புலப்படும் 

ராமாயணத்தில் தசரதன் தனக்கு 
குழந்தை வரம் வேண்டும் என்று இறைவனை 
வேண்டி  யாகம் செய்தான் 
ஆனால் புதல்வர்களால் அவனுக்கு 
பெருமை உண்டானாலும்
அவன் புத்திர சோகத்தில் 
ஆழ்ந்து ராமனை பிரிந்து 
அந்த சோகத்திலேயே 
அவன் உயிரை விட நேர்ந்தது

கும்பகர்ணன் தவம் செய்து நிலையாக இருக்க 
வரம் கேட்க நினைத்து தூக்க நிலையில் 
என்றும் ஆழ்ந்து கிடக்கும் வரம் பெற்று தன் வாழ்வில் 
பெரும்பகுதி தூக்கத்தில் கழித்து முடிவில் 
தன் சகோதரனுக்காக வீணே போரிட்டு மாண்டான்

ஹிரண்யகசிபு பிரம்மாவிடம் மரணம் வாராமல் 
இருக்க வரம் கேடடு பெற்று
முடிவில் அதனால் அகந்தை மேலிட தன்னையே 
கடவுளாக வழிபடவேண்டும் என்று அனைவரையும்
துன்புறுத்தி முடிவில் தன் மகன் மூலமாகவே 
இறைவன் கையில் சிக்கி மாண்டான் 

எனவே நம்மை படைத்த இறைவனுக்கு நமக்கு
என்ன தரவேண்டும், எப்போது தரவேண்டும் என்பது 
அவனுக்கு நன்றாக தெரியும் 
எனவே அவன் அருளை மட்டும்
 நாம் வேண்டி பெற முயற்சி செய்ய வேண்டும்

மற்றவைகளை அவன் விருப்பத்திற்கு விட்டு விட்டால் 
அனைத்தும் நன்றாக நடைபெறும்
நம் வாழ்வில் ஏமாற்றங்கள் ஏற்படாது . 
அதனால் நம் மகிழ்ச்சி என்றும் 
குறைவுபடாது வாழலாம் 

 

Monday, February 6, 2012

தாய் தந்தை உறவுகள் கசக்க காரணம் என்ன ?

பணம்தான் இன்றைய கால கட்டத்தின் 
மனிதர்களின் வாழ்க்கை இலக்கு
அதற்காகத்தான் கல்வி கற்கிறார்கள்
அதற்காக பெற்றோர்ர்களும் 
மற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்கு
வாழ்நாளில் பெரும்பகுதி தங்களை 
சுகங்களையும்,வாழ்வையும் இழக்கிறார்கள்
பெற்றோர்களின் உதிரத்திலிருந்து பிறந்த குழந்தைகள் 
அவர்களில் வியர்வையை தங்களுக்கு 
உரமாக்கி வளந்த குழந்தைகள் இன்று காட்டும்
நன்றிகடன் என்ன தெரியுமா?
தங்களை வளர்த்தவர்களை அப்படியே 
விட்டுவிட்டு வெளிநாடுகளுக்கு பணம்
சம்பாதிக்க சென்றுவிடுகிறார்கள்
பெற்றோர்கள் நோய்வாய்பட்டாலும்
வந்து அருகில் கவனிப்பதில்லை 
தனிமையில் தவிக்கும் அவர்களின் இறுதி
நாட்களில் அவர்களை மதிப்பதும் இல்லை

பலர் பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் 
தள்ளிவிட்டுவிடுகின்றனர்
பலர் பெற்றோர்களை அனாதையாக 
விட்டு விடுகின்றனர்
சிலர் அவர்கள் பெறும் அரசு பென்ஷன்
காசுக்காக ஆதரிப்பதுபோல்நடிக்கின்றனர்
இப்படி முக்கியமாக தாய் தந்தை உறவுகள்
கசக்க காரணம் என்ன ?

பெற்றோர்களும் ஒருவகையில் காரணமாக 
இருப்பதுதான்
 .
அவர்கள் குழந்தைகளை இயந்திர கதியில் வளர்ப்பதும்
அவர்களுக்கு உண்மையான அன்பை போதிக்காதும்தாம்
பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஒழுக்கமாக 
இருக்க போதித்து அதற்காக அவர்களை பலவகையில்
துன்புறுத்தி அவர்கள் மட்டும் பலவகைகளில் ஒழுங்கீனமான
வாழ்க்கை நடத்தியதும்தான்

மாத பிதா குரு தெய்வம் என்ற வரிசையில் வைத்து 
போற்றி வணங்க வேண்டிய பெற்றோர்கள் 
இன்று மனம் வெதும்பி துன்புறுவதர்க்கு  காரணம்
அவர்கள் தங்கள் குழந்தைகளை பணத்தை எப்படி
சம்பாதிப்பது என்றும் எப்படி வளமாக வாழ்வது என்று 
அவர்களை உருவாக்கியிருக்கிரார்களே தவிர 
அன்பு, பண்பு பாசம், நேர்மை,இரக்கம்,இறை பக்தி, 
போன்றவற்றையும் ஊட்டி வளர்த்திருந்தார்களேயானால்
 இன்று இதுபோல் அல்லல்பட வேண்டிய 
நிலை அவர்களுக்கு வந்திருக்காது 

Sunday, February 5, 2012

மனிதர்களே ஏன் கவலைபடுகிறீர்கள்?

மனிதர்களே ஏன் கவலைபடுகிறீர்கள்? 
கவலைபடுவதால் என்ன நன்மை ?

கவலைப்படுதலே கடு நரகம் என்றான் மகா கவி பாரதி 

மேலும் சொன்னான் நெஞ்சில் தினமும் கவலை பயிராக்கி 
அஞ்சி வாழ்தல் அறியாமை என்று மேலும் இடித்துரைத்தான் 

மனிதர்கள் கவலைபடுவதற்கு காரணங்கள் பல கோடி
அவற்றில் பல அர்த்தமற்றவை ஆதாரமற்றவை

இவை எல்லாவற்றிற்கும்மூல காரணம் 
மனம்தான் 

அதுவும் மனதில் எழும் எதிர்மறை எண்ணங்கள் 

எதற்கெடுத்தாலும் தவறான 
முன்னுதாரணங்களை 
மனதில் கொண்டு 
அதையே சிந்தித்து 
ஒன்றுக்கும் உருப்படாமல்
போய் தன்னை தானே 
தானே புயல்போல் 
அழித்து கொள்வது

வாழ்க்கை என்றால் பிரச்சினைகள் 
இருக்கத்தான் செய்யும் 
அதை எப்படி எதிர்கொள்வது 
என்ற வழியை கற்றுக்கொள்ளவேண்டும் 

தோல்விகள் வாழ்வில் நேரத்தான் செய்யும் 
.சிலநேரம் தொடர்ந்து 
தோல்விகள் நம்மை தாக்கத்தான் செய்யும் .

ஆனால் தோல்விக்கான காரணங்களை
 கண்டுகொண்டு அதை 
நிவர்த்தி செய்வதின்மூலம்
 வெற்றிக்கனியை பறிக்க முடியும்

ஆனால் நடப்பது என்ன?

சிறிய தோல்வியைக்கூட 
ஏற்றுகொள்ளும் மனப்பக்குவம்
இந்த காலத்தில் பெரும்பாலோனாருக்கு 
இருப்பதில்லை 

தன்னுடைய முயற்சி குறைபாடுகளை 
மறைக்க பிறர் மீது
சேற்றை வாரி இறைக்கின்றனர் 
பிறர் மீது குற்றம் சுமத்துகின்றனர் 
தன் தோல்வியை வெற்றியாக மாற்ற
முயற்சி செய்யாமல் தங்கள் சக்தி முழுவதையும்
பிறரை பழி வாங்கவும், அழிப்பதற்கும் 
தன் வாழ்நாளையே வீணாக்குகின்றனர்.

இப்படிப்பட்ட மனிதர்கள் திருந்தவேண்டும் 
இல்லையேல் இவர்கள் வாழ்வில் என்றும் வசந்தம்  வராது
மாறாக இவர்கள் செல்லும் திசைகள் எல்லாம்
வசைகள்தான் இவர்கள் காணபோகும் காட்சிகளாக இருக்கும்

எனவே எதற்கும் கவலைப்படுவதை விட்டு 
இறைவன் மீது நம்பிக்கை வைத்து 
அவனிடம் நல்லவை நடக்க பிரார்த்தனை 
செய்து நேர்மையான வழியில் முயற்சி செய்தால் 
கவலைகள் நம்மை விட்டு ஓடிவிடும்
சிந்தனையில் தெளிவு பிறக்கும் 
தெளிவான மனதில் சக்தி பிறக்கும்
வெற்றி எளிதில் வசப்படும்.

Friday, February 3, 2012

மரணம் என்ற சொல்லை உச்சரிக்கவே மனிதர்கள் பயப்படுகிறார்கள்

மரணம் .இந்த சொல்லை 
கேட்டாலே மனித குலம்
பதறுகிறது. அது ஏன்?

மரணம் என்ற சொல்லை 
உச்சரிக்கவே மனிதர்கள் 
பயப்படுகிறார்கள் 
.
மரணத்தின் தருவாயில்
ஒருவர் இருக்கின்றார் 
என்றவுடன் மக்களின் 
முகத்தில் சோகம் 
கவ்விகொள்கிறது
உடனே குடும்பத்தில் ஏற்கெனவே இறந்தவர்களை  பற்றி ஒரு பட்டிமன்றமே நடத்த துவங்கிவிடுகிறார்கள்
சிலர் துக்கம் தாங்காமல் புலம்புவதும்,மற்றவர்கள் ஏதாவது சொல்ல போகிறார்களே  என்று நினைத்து அழுவதுபோல் நடித்து அவர்களின் துக்கத்தை வெளிக்காட்டுகிறார்கள் 
சிலர் ஓஹோகோவேன்று கூச்சலிட்டு ஊரை கூட்டுகிறார்கள்
சிலர் மௌனமாகிவிடுகிரார்கள் 
சிலர் அதிர்ச்சியிலிருந்து வெகு காலம் மீள்வதேயில்லை 
சிலருக்கு அப்போதுதான் தத்துவ முத்துக்கள் உதிர்கின்றன
இந்நிலை மக்களுக்கு என் வருகிறது?

விலங்குகள் என்றும் மரணத்தை
பற்றி நினைப்பதும் கிடையாது
கவலைப்படுவதும் கிடையாது  
அவைகளும் பிறக்கின்றன,வாழ்ந்து மடிகின்றன 

உண்மையில் பிறந்தது அனைத்தும் 
ஒருநாள் மடிவது என்பது 
இயற்கையின் நியதி. இதை யாராலும் 
மாற்றவோ மறுக்கவோ முடியாது 
இது அனைவருக்கும்  தெரியும் 
இருந்தாலும் மக்கள் மரணத்தை கண்டு 
பயப்படுவது ஏன்? 

மனிதனை மரணம் ஒவ்வொரு 
நொடியும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
அதை யாரும் உணர்வதில்லை 
.பூனை தன் கண்ணை மூடிகொண்டால் 
பூலோகம் இருண்டு போகுமாம். 
அதைபோல்தான் இதுவும். 
தவிர்க்க முடியாத இந்த நிகழ்விற்கு  
பயப்படவேண்டியதில்லை என்று
பகவத் கீதையில் பகவான் 
ஆணித்தரமாக உரைத்திருக்கிறான் 

கீதையை தினமும் படிப்பவர்கள் கூட மரணத்தை கண்டு அஞ்சுகின்றனர்
பல சித்தர்களும், ஞானிகளும், யோகிகளும் மரணத்தை 
எவ்வாறு வெல்வது என்று வாழ்ந்து காட்டி மரணமிலா பெருவாழ்வு பெற்று மனித குலத்திற்கு இன்றும் வழி காட்டி கொண்டிருக்கின்றனர்
.
மரணம் என்பது துன்பப்படும் மனிதகுலத்திற்கு 
இறைவன் அளித்த வரப்ரசாதம் 
.
நைந்து போன உடலை அழித்துவிட்டு 
மீண்டும் நமது எண்ணங்களை நிறைவேற்றிகொள்ள,
ஞானம் பெற்று இறைவனோடு கலக்க மீண்டும் 
புதிய உடலை நமக்கு அளிக்க 
இறைவன் நமக்கு அளித்த வாய்ப்பு 

உடலையும் மனதையும் அதன்மூலம் உலகத்தையும் ஒரு பார்வையாளனாக பார்க்கின்றவனுக்கு
மரணம் எந்த மாற்றத்தையும் ஏற்படுவதில்லை

விழிப்போடு இருப்பவனை மரணம் 
என்றும்  வெற்றிகொள்ள முடியாது
உறங்குபவனைதான் மரணம் ஆட்கொள்ளும்

அதனால்தான் வள்ளல்பெருமான் விழித்திரு என்றார்

விழித்திருப்போம் மரணத்தை வெல்வோம்.

Wednesday, February 1, 2012

கடவுளை நம்பினால்


பிற உயிர்க்கு கேடு விளைவித்தால் பாவம்
நன்மை செய்தால் விளைவது புண்ணியம் 
இரு தரப்பட்ட வினைகளால் விளையும் 
இன்ப துன்பங்களை அனுபவித்து தீர்க்கவே
இந்த மனித பிறவி

இதை யாராலும் தவிர்க்க முடியாது
ஒரே மனம்தான் இன்பத்தையும் 
துன்பத்தையும் அனுபவிக்கிறது
ஒரே செயல் ஒருவருக்கு துன்பமாகவும்
மற்றவர்க்கு இன்பமாகவும் தோற்றமளிக்கிறது
உண்மையில் துன்பம் என்றோ இன்பம் 
என்றோ உலகில் ஏதும் இல்லை

நடுநிலையில் மனதை வைத்து பார்த்தால்
இந்த உண்மை விளங்கும்

இதற்க்கு தெளிவான சிந்தனை வேண்டும்
எந்த பிரச்சினையையும் உணர்ச்சி வசப்படும்போது
அணுகினால் தீர்வு பிறக்காது

கடவுளை வணங்கிவிட்டால் மட்டும்
நம் பிரசினைகள் தீர்ந்துவிடுமா?

சிலவற்றை இதயம் கொண்டு அணுகவேண்டும்
சிலவற்றை அறிவுபூர்வமாக தீர்வு காண வேண்டும்
சிலவற்றை இறைவனிடம் விட்டுவிடவேண்டும்

இதில் தடம் மாறுவதால்தான் இன்று உலகில்
அனைத்தும் தீர்க்க முடியாதபிரச்சினைகளாக மாறி
உலகில் மக்கள் பலவிதமான சிக்கல்களில்
மாட்டிகொண்டு அமைதியில்லாமல் தவிக்கின்றனர் 

கணத்திற்கு கணம் குணம் மாறும்
மனிதர்களை நம்புவதை விட
குணக்குன்றான கடவுளை நம்பினால்
நிச்சயம் நல்ல தீர்வு அமையும்

கடவுளை நம்பினால்




பிற உயிர்க்கு கேடு விளைவித்தால் பாவம்
நன்மை செய்தால் விளைவது புண்ணியம் 
இரு தரப்பட்ட வினைகளால் விளையும் 
இன்ப துன்பங்களை அனுபவித்து தீர்க்கவே
இந்த மனித பிறவி

இதை யாராலும் தவிர்க்க முடியாது
ஒரே மனம்தான் இன்பத்தையும் 
துன்பத்தையும் அனுபவிக்கிறது
ஒரே செயல் ஒருவருக்கு துன்பமாகவும்
மற்றவர்க்கு இன்பமாகவும் தோற்றமளிக்கிறது
உண்மையில் துன்பம் என்றோ இன்பம் 
என்றோ உலகில் ஏதும் இல்லை

நடுநிலையில் மனதை வைத்து பார்த்தால்
இந்த உண்மை விளங்கும்

இதற்க்கு தெளிவான சிந்தனை வேண்டும்
எந்த பிரச்சினையையும் உணர்ச்சி வசப்படும்போது
அணுகினால் தீர்வு பிறக்காது

கடவுளை வணங்கிவிட்டால் மட்டும்
நம் பிரசினைகள் தீர்ந்துவிடுமா?

சிலவற்றை இதயம் கொண்டு அணுகவேண்டும்
சிலவற்றை அறிவுபூர்வமாக தீர்வு காண வேண்டும்
சிலவற்றை இறைவனிடம் விட்டுவிடவேண்டும்

இதில் தடம் மாறுவதால்தான் இன்று உலகில்
அனைத்தும் தீர்க்க முடியாதபிரச்சினைகளாக மாறி
உலகில் மக்கள் பலவிதமான சிக்கல்களில்
மாட்டிகொண்டு அமைதியில்லாமல் தவிக்கின்றனர் 

கணத்திற்கு கணம் குணம் மாறும்
மனிதர்களை நம்புவதை விட
குணக்குன்றான கடவுளை நம்பினால்
நிச்சயம் நல்ல தீர்வு அமையும்.