Tuesday, February 28, 2012

சுவாமி சிவாநந்தரோடு ஒரு நாள்


சுவாமி  சிவாநந்தரோடு ஒரு  நாள் 

யார்  மகான் ?

சுவாமியின்  முன்னிலையில்  
சத்சங்கம்  நடந்து  கொண்டிருந்தது

வயதில்  பெரியவர்  ஒருவர் தன்
 மகனுடன்  அங்கு  வந்தார் 
காலில்  செருப்புடன்  
அறைக்குள்  நுழைந்துவிட்டார் 
உடனே  அவர்  மகன்  தன தந்தையிடம்  செருப்பை 
வெளியிலேயே  விட்டுவிடவேண்டும் 
 என்று  நினைவுபடுத்தினார் 
உடனே பெரியவர் திரும்பி
செல்ல  எத்தனித்தார் 

இதை  சுவாமி  சிவானந்தர்  
கண்டுவிட்டார்  .

உடனே அவர் அந்த  பெரியவரை 
பார்த்து  பரவாயில்லை 
வாருங்கள்  நாற்காலியில்  அமருங்கள் 
செருப்புக்களையும் போட்டுக்கொள்ளுங்கள் 

ஏனென்றால்  நாம்  அனைவருமே  
இந்த  நாற்றம் பிடித்த  உடம்பாகிய 
செருப்பை நாம் எங்கு  சென்றாலும் 
போட்டுக்கொண்டேதான் போகிறோம் 
.
அந்த  பெரியவரின்  கண்களிலிருந்து
நன்றி  பெருக்காக  கண்ணீர் 
வழிந்தோடியது 

தான்  செய்த   செயலுக்கு
தன்  மீது  கோபம்  கொள்ளாமல் 
அன்போடு  தன்னை  வரவேற்றது  
அவரது  உள்ளத்தில்  அந்த 
மகானை  பற்றி  விவரிக்கமுடியாத  
மதிப்பும்  மரியாதையும் எழுந்தது . 
என்  முதிய  நிலை  கருதி  என்  மீது 
எவ்வளவு  கருணை  காட்டியிருக்கிறார் 
என்று மனம்  நெகிழ்ந்து போனார் 
.
ஆனால்  வாழ்க்கையில்  நம்மில்  
பலர்  சின்ன  விஷயங்களுக்காக 
மற்றவர்கள்  மனதை  புண்படுத்துவதும் 
கேவலமாக பேசுவதும் ,மீண்டும்  
மீண்டும் வாய்ப்பு  கிடைக்கும்  போதெல்லாம் 
அதையே பலர் முன்னிலையில் நினைவுபடுத்தி 
அசிங்கப்படுதுவதும்  போன்ற  
செயல்களை  செய்து  வருகிறோம் 
.
இது  போன்ற மகான்களின்  வாழ்க்கையில்
நடைபெற்ற  சம்பவங்களை  நினைவு  கூர்ந்து 
நம்மை  நாம் பண்படுத்தி  கொண்டால் 
நம்  வாழ்வு  சிறக்கும் 
(தகவல் -சுவாமி  ஸ்வரூபானந்தா )

2 comments:

  1. வருகைக்கும் கருத்துக்கும்
    நன்றி RN அவர்களே

    ReplyDelete