ஒரு நாடு இருந்தது.
அந்நாட்டை ஒரு அரசன் ஆண்டு வந்தான்.
அந்த நாட்டையொட்டி அடர்ந்த காடு இருந்தது.
அதில் சில திருடர்கள் மறைந்து வாழ்ந்து வந்தனர்.
அவர்கள் திடீரென்று நாட்டில்நுழைந்து கொலை
கொள்ளைகளில் ஈடுபட்டுக்கொண்டு மக்களுக்கு
தொல்லை கொடுத்து கொண்டு வந்தனர்.
அரசன் முயற்சி செய்து அவர்களை பிடித்து
விசாரித்து அவர்கள் அனைவருக்கும்
மரண தண்டனை விதித்தான்
அப்போது அரசனின் மந்திரி
அந்த கூட்டத்தில் ஒரு பையன் இருப்பதை கண்டு
அவனை மன்னித்து தன்னிடம் விட்டுவிடுமாறும்
அவனை நல்ல குடிமகனாக வளர்க்க அனுமதி
அளிக்குமாறும் வேண்டினார்.
அரசன் அதற்க்கு அவன் திருடனின் குழந்தையாதலால்
அவனிடம் திருடுதல், கொலை செய்தல் போன்ற ஆகிய
தீய பதிவுகள் அவன் மனதில் நிறைந்துள்ளதால் அவன்
பெரியவனாக ஆன பின்பும் அந்த தீய பண்புகள்
அவனிடம் வளரும் என்று கூறி அவனையும்
தூக்கிலிட ஆணையிட்டார்
ஆனால் மந்திரி அரசனிடம் மீண்டும்
வேண்டி கேட்டுகொண்டதில்
அவனை விடுதலை செய்தார்.
மந்திரியும் அவனை நல்ல கல்வியளித்து
நல்ல குடிமகனாக வளர்த்தார்.
சில காலம் பின்பு மந்திரி தீர்த்தயாத்திரை
சென்று விட்டு திரும்பி வருவதற்குள்
அந்த பையன் தன் பழைய நண்பர்களை
சந்தித்ததும் அவன் மனதில் உள்ள
தீய எண்ணங்கள் உயிர் பெற்றுவிட்டது
கட்டுபாடான வாழ்க்கை அவனுக்கு கசந்தது.
மீண்டும் திருட்டு,கொலை கொள்ளைகளில்
ஈடுபடும் எண்ணம் ஏற்பட்டவுடன் மந்திரி வீட்டில்
உள்ள எல்லாவற்றையும் கொள்ளை அடித்துவிட்டு
காட்டிற்குள் சென்று மறைந்து விட்டான்
.
தீர்த்த யாத்திரை முடிந்து வந்ததும்
வளர்த்த மகனை காணவில்லை,
வீடும் பாழடைந்து கிடந்ததை கண்டு அரசன் கூறிய
கூற்றுக்கள் மெய்யாகிவிட்டதை கண்டு
மந்திரி அரசனிடம் சென்று
தன்னை மன்னிக்குமாறு
கேட்டுகொண்டான்
.
நம்முடைய மனமும் அப்படிதான் .
அதில் உள்ள எண்ணங்கள் எப்போதும் அழிவதில்லை
அதை கட்டுபாட்டில் வைத்திருந்தாலும்
கட்டுப்பாடு தளரும்போது நம்மை
எதிர்பாராமல் தாக்கி நம்மை வீழ்த்தி விடும்
என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்
அதனால்தான் நாம் எப்போதும்
நம் எண்ணங்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
நல்ல மக்களிடையே நம் உறவை வைத்துக்கொள்ளவேண்டும்
தீயவரோடு சேர்ந்தால் அவர்களின் தீய குணங்கள்
நம்மை ஆட்கொண்டு ஒருநாள் நம்மையும்
நம்மை சேர்ந்தவர்களையும் ஒருசேர அழித்துவிடும்.
(சுவாமி சிவானந்தரின் சிந்தனைகள்)

No comments:
Post a Comment