Saturday, February 18, 2012

சாதுக்களின் இதயம் எப்படிபட்டது?


சாதுக்களின் இதயம் எப்படிபட்டது?

ஒரு நாட்டில் ஒரு மன்னன் வாழ்ந்து வந்தான் 
அவன் துறவிகள் தங்குவதற்காக ஒரு ஆஸ்ரமம்  கட்டினான்
அவனுடைய குரு தன் சீடர்களுடன் அங்கு தங்கி ஆன்மீக 
சாதனைகளை செய்து வந்தார்

இதை கண்டு பொறுக்காத அமைச்சர்கள் சிலர் அரசனிடம் ஆஸ்ரமத்தில் 
உள்ளவர்கள் நன்றாக உண்பதுமுறங்குவதுமாக தண்டமாக பொழுது போக்கி சாதனைகள் எதுவும் செய்யாமல் காலத்தை கழித்து 
அரசு பணத்தை வீணடிக்கின்றனர் என்று புகார் கூறினார்கள்

உடனே அரசன் தன் குருவை அழைத்து இது பற்றி விசாரித்தான்
அதற்க்கு குரு அரசனை அதிகாலை தான் மூன்று மணிக்கு 
வந்து எழுப்புவதாகவும் அதற்க்கு அரசனை தயாராக 
இருக்குமாறு கேட்டுகொண்டார்

அரசனை ஒரு குடம் தண்ணீருடன் தன் பின்னால் 
வருமாறு குரு கேட்டுகொண்டார்
முதலில் அமைச்சர்கள் வீட்டிற்கு 
சென்று தூங்கும் அவர் முகங்களில்
தண்ணீரை தெளிக்குமாறு குரு கூறினார்
தண்ணீர் தெளித்தவுடன் அவர்கள் அனைவரும் 
உறக்கம் கலைந்து எழும்போது ,
முட்டாள்,கழுதை,அறிவு கெட்ட முண்டம் 
எங்கள் உறக்கத்தை கலைத்தது யார் 
என்று கத்திக்கொண்டே எழுந்தனர்

குதிரை லாயதிர்க்கு சென்று அங்குள்ளவர்களை 
அதுபோல் எழுப்ப அவர்களும் திட்டிக்கொண்டே வசை பாடினர்
 
பிறகு அனைவரும் ஆஸ்ரமம் சென்று 
அங்குள்ளவர்கள் மீது தண்ணீர் தெளித்தும் 
அனைவரும் சிவோஹம்,ஹரிஓம், ராம் ராம்
 என்று சொல்லிக்கொண்டே எழுந்தனர்
.
இப்போது ஆச்ரமவாசிகளுக்கும்
 மற்ற மனிதர்களுக்கும் உள்ள 
வேறுபாட்டை கவனித்தீர்களா ? 
என்று குரு அரசனை கேட்டார்
ஒவ்வொரு மனிதனின் வாயிலிருந்து 
வரும் வார்த்தைகள் அவன்
 மன உணர்வுகளையும் பண்பையும் குறிக்கும்
 
உண்மையான சாதுகளும் சந்நியாசிகளும்
மற்றவர்களைப்போல் உணவு உண்பது 
உடலை கொழுக்கவைத்து  
வளர்ப்பதற்காக அல்ல
உடலில் உயிரை காப்பாற்றி 
ஆன்மீக சாதனைகளை செய்யத்தான் 
என்பதை புரிந்து கொள்ள வேண்டும் 
என்று குரு சொன்னதை 
அரசன் உணர்ந்துகொண்டான்.

அவர்கள் பசி என்பது உடல் சம்பந்தப்பட்டது 
ஆன்மா சம்பந்தப்பட்டது  அல்ல என்பதை உணர்ந்தவர்கள் 
அவர்கள் அடுத்தநாள் பட்டினி கூட கிடக்கலாம், 
அல்லது கிடைத்ததை திருப்தியுடன் உண்டு 
உலக நன்மைக்காக சாதனையை தொடருவார்கள் 

உலக மோகத்தில் மூழ்கியிருப்பவர்களுக்கு 
அது புரியவாய்ப்பிலை என்று குரு கூறியதை 
அரசனும் மற்றவர்களும் ஏற்றுகொண்டனர். 
(ஸ்ரீ சுவாமி சிவானந்தரின் அருள்;உரைகள்)

2 comments:

  1. நல்ல பதிவு ! வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  2. வருகைக்கும் கருத்துக்கும்
    நன்றி DD சார்

    ReplyDelete