உலகில் இரவும் பகலும்
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக
இரவும் பகலும் மாறி மாறி
வந்து கொண்டிருக்கின்றன
அதில் எந்த மாற்றமும் இல்லை
அதே போல் மனிதர்கள்
வாழ்க்கையிலும் இன்ப துன்பங்கள்
மாறி மாறி வந்து கொண்டிருக்கின்றன
எதுவும் நிரந்தரமாக தங்கி விடுவதில்லை
அதுபோல்தான் பிறப்பும் இறப்பும்
இறந்தவர்கள் பிறக்கிறார்கள்
பிறந்தவர்கள் இறக்கிறார்கள்
அறிவுள்ளவர்கள் இது ஏன் என்றும்
எப்படி என்றும் சிந்திக்க
தலைப்படுகிறார்கள்
உணர்வுடையவர்கள்
பாதிக்கபடுகிறார்கள்
இரண்டும் இல்லாதவர்கள் மற்றவர்களுக்கு
அடிமைகளாக வாழ்க்கையை கழித்து
மறைந்து போகிறார்கள்
தீவிரமாக சிந்திக்கிறவனுக்கு இவை
அனைத்தையும் அந்தந்த காலக்ரமத்தில்
ஒழுங்காக ஏதோ ஒரு சக்தி நடத்தி வைக்கிறது
என்பது புரிய வந்ததும் அதை அறிய முற்படுகிறான்
அதை அறிந்து புரிந்து கொண்டதும் அவன்
குழப்பங்கள் தீர்ந்து மனம் அமைதியடைந்து
என்றும் மகிழ்ச்சியாக இருக்கும்
நிலையை அடைகின்றான்
இந்த உலக பொருட்களின்மீது எந்நேரமும்
நாட்டம் கொண்ட நாம் சிறிது நேரம்
அந்த பரம்பொருளின் மீதும்
நம் நாட்டத்தை செலுத்தி நம்
வாட்டத்தை போக்கி கொள்ளுவோமாக
அசத்தல் பகிர்வு !
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும்
ReplyDeleteநன்றி DD சார்
உலகில் அனேக மக்கள் வாட்டம் போக்க
குவார்டரில் வாட்டர் மிக்ஸ் பண்ணி
தங்கள் வாழ்க்கையை அழித்து கொள்கிறார்களே
அவர்களை யார் காப்பாற்றுவது?