Sunday, February 5, 2012

மனிதர்களே ஏன் கவலைபடுகிறீர்கள்?

மனிதர்களே ஏன் கவலைபடுகிறீர்கள்? 
கவலைபடுவதால் என்ன நன்மை ?

கவலைப்படுதலே கடு நரகம் என்றான் மகா கவி பாரதி 

மேலும் சொன்னான் நெஞ்சில் தினமும் கவலை பயிராக்கி 
அஞ்சி வாழ்தல் அறியாமை என்று மேலும் இடித்துரைத்தான் 

மனிதர்கள் கவலைபடுவதற்கு காரணங்கள் பல கோடி
அவற்றில் பல அர்த்தமற்றவை ஆதாரமற்றவை

இவை எல்லாவற்றிற்கும்மூல காரணம் 
மனம்தான் 

அதுவும் மனதில் எழும் எதிர்மறை எண்ணங்கள் 

எதற்கெடுத்தாலும் தவறான 
முன்னுதாரணங்களை 
மனதில் கொண்டு 
அதையே சிந்தித்து 
ஒன்றுக்கும் உருப்படாமல்
போய் தன்னை தானே 
தானே புயல்போல் 
அழித்து கொள்வது

வாழ்க்கை என்றால் பிரச்சினைகள் 
இருக்கத்தான் செய்யும் 
அதை எப்படி எதிர்கொள்வது 
என்ற வழியை கற்றுக்கொள்ளவேண்டும் 

தோல்விகள் வாழ்வில் நேரத்தான் செய்யும் 
.சிலநேரம் தொடர்ந்து 
தோல்விகள் நம்மை தாக்கத்தான் செய்யும் .

ஆனால் தோல்விக்கான காரணங்களை
 கண்டுகொண்டு அதை 
நிவர்த்தி செய்வதின்மூலம்
 வெற்றிக்கனியை பறிக்க முடியும்

ஆனால் நடப்பது என்ன?

சிறிய தோல்வியைக்கூட 
ஏற்றுகொள்ளும் மனப்பக்குவம்
இந்த காலத்தில் பெரும்பாலோனாருக்கு 
இருப்பதில்லை 

தன்னுடைய முயற்சி குறைபாடுகளை 
மறைக்க பிறர் மீது
சேற்றை வாரி இறைக்கின்றனர் 
பிறர் மீது குற்றம் சுமத்துகின்றனர் 
தன் தோல்வியை வெற்றியாக மாற்ற
முயற்சி செய்யாமல் தங்கள் சக்தி முழுவதையும்
பிறரை பழி வாங்கவும், அழிப்பதற்கும் 
தன் வாழ்நாளையே வீணாக்குகின்றனர்.

இப்படிப்பட்ட மனிதர்கள் திருந்தவேண்டும் 
இல்லையேல் இவர்கள் வாழ்வில் என்றும் வசந்தம்  வராது
மாறாக இவர்கள் செல்லும் திசைகள் எல்லாம்
வசைகள்தான் இவர்கள் காணபோகும் காட்சிகளாக இருக்கும்

எனவே எதற்கும் கவலைப்படுவதை விட்டு 
இறைவன் மீது நம்பிக்கை வைத்து 
அவனிடம் நல்லவை நடக்க பிரார்த்தனை 
செய்து நேர்மையான வழியில் முயற்சி செய்தால் 
கவலைகள் நம்மை விட்டு ஓடிவிடும்
சிந்தனையில் தெளிவு பிறக்கும் 
தெளிவான மனதில் சக்தி பிறக்கும்
வெற்றி எளிதில் வசப்படும்.

2 comments:

  1. பல வரிகளில் உண்மைகளை அழகாக சொல்லி உள்ளீர்கள் ! நல்ல பதிவு! பாராட்டுக்கள் ! நன்றி !

    ReplyDelete
  2. நன்றி. நண்பரே
    உண்மைகள் என்றும் அழகாகதான் இருக்கும்.
    ஆனால் அது மனிதர்களை கவர்வதில்லை
    கவர்ச்சியான பொய்களிடமே மனிதர்களுக்கு
    நாட்டமுண்டு. அதனால் நட்டமும் அவர்களுக்கு
    கிடைப்பதுண்டு.கவலை என்னும் உணர்ச்சியில்
    வீழ்ந்தவர்கள் துன்பம் என்ற சிலந்திவலையில்
    சிக்கி மடிவது திண்ணம் .எனவே அதிலிருந்து
    அவர்கள் தங்களை காத்து கொள்ளவேண்டும்

    ReplyDelete