தவம் செய்யுங்கள்
ஆனால் வரம் கேட்காதீர்கள்
இறைவனை நோக்கி தவம் செய்யுங்கள்
ஆனால் அவனிடம் எந்த வரமும் கேட்காதீர்கள்
ஏனென்றால் நமக்கு எந்த பொருளை பற்றியும்
முழுமையான அறிவு கிடையாது
நம்முடைய அறிவெல்லாம் புலன்கள்
காட்டும் வழியை பொறுத்தது
புலன்கள் வெறும் கருவிகளே
அவைகள் அவைகள் காணும்
காட்சி அல்லது உணர்வுகளின்
அடிப்படையில் முடிவுகளை நமக்கு
அறிவிக்கின்றன
புராண கதைகளை உற்று நோக்கினால்
சில உண்மைகள் புலப்படும்
ராமாயணத்தில் தசரதன் தனக்கு
குழந்தை வரம் வேண்டும் என்று இறைவனை
வேண்டி யாகம் செய்தான்
ஆனால் புதல்வர்களால் அவனுக்கு
பெருமை உண்டானாலும்
அவன் புத்திர சோகத்தில்
ஆழ்ந்து ராமனை பிரிந்து
அந்த சோகத்திலேயே
அவன் உயிரை விட நேர்ந்தது
கும்பகர்ணன் தவம் செய்து நிலையாக இருக்க
வரம் கேட்க நினைத்து தூக்க நிலையில்
என்றும் ஆழ்ந்து கிடக்கும் வரம் பெற்று தன் வாழ்வில்
பெரும்பகுதி தூக்கத்தில் கழித்து முடிவில்
தன் சகோதரனுக்காக வீணே போரிட்டு மாண்டான்
ஹிரண்யகசிபு பிரம்மாவிடம் மரணம் வாராமல்
இருக்க வரம் கேடடு பெற்று
முடிவில் அதனால் அகந்தை மேலிட தன்னையே
கடவுளாக வழிபடவேண்டும் என்று அனைவரையும்
துன்புறுத்தி முடிவில் தன் மகன் மூலமாகவே
இறைவன் கையில் சிக்கி மாண்டான்
எனவே நம்மை படைத்த இறைவனுக்கு நமக்கு
என்ன தரவேண்டும், எப்போது தரவேண்டும் என்பது
அவனுக்கு நன்றாக தெரியும்
எனவே அவன் அருளை மட்டும்
நாம் வேண்டி பெற முயற்சி செய்ய வேண்டும்
மற்றவைகளை அவன் விருப்பத்திற்கு விட்டு விட்டால்
அனைத்தும் நன்றாக நடைபெறும்
நம் வாழ்வில் ஏமாற்றங்கள் ஏற்படாது .
அதனால் நம் மகிழ்ச்சி என்றும்
குறைவுபடாது வாழலாம்
No comments:
Post a Comment