பெறுதர்க்கரிய மனித பிறவியை
பெற்ற பின் அதை வீணடிக்கலாமா?
பெறுதர்க்கரிய மனித பிறவியை பெற்றும்
அதன் மகிமையை உணராமல் மனிதர்கள்
விலங்குகள்போல் வாழ்க்கையை
ஒட்டிகொண்டிருக்கின்றனரே ,அவர்களின்
அறியாமையை என்னவென்று சொல்வது?
உண்பதற்க்காகவும் உறவு கொள்வதற்காகவும்
உலகில் நிலையில்லாத உயிரற்ற
பொருட்கள் மீது மோகம் கொண்டு
ஆயுளில் தூங்கும் நேரம் போக விழித்திருக்கும் நேரம்
முழுவதும் வீணடிக்கும் செயலை என்னவென்று
சொல்வது ?
மனதில் ஆசை கொண்டு புலன்களின் வழியே மனதை
செலுத்தி வாழ்நாள் முழுவதும் இன்ப துன்பங்களில்
சிக்கிக்கொண்டு வேதனைப்படவா இந்த பிறவி
நமக்கு இறைவனால் அளிக்கப்பட்டது
என்பதை ஒரு கணம் சிந்திப்பீர்
கணத்திற்கு கணம் மாறும் மனதினால் எப்படி
நிலையான இன்பத்தை அடையமுடியும் என்பதை
தயவு செய்து மனிதர்கள் சிந்தித்து பார்த்தார்களேயானால்
தங்கள் செய்யும் செயல் எவ்வளவு மூடத்தனமானது
என்பதை உணர முடியும்
உண்மையான, நிலையான என்றும்,
எப்போதும் மாறாத இன்பம்
நம்முடைய ஆன்மாவில் உள்ளது என்பதை
இனியாவது நினைவில் கொண்டு அந்த
இன்பத்தை அடைய இக்கணத்திலிருந்து
முயற்சி செய்யுங்கள்
மரணம் நம்மை எந்த நொடியிலும் ஆட்கொன்றுவிடும்
எனவேஇறைவன் நம்மை ஆட்கொள்ள அவன்
நாமத்தை இடைவிடாது மனதில் உச்சரித்துக்கொண்டே
இந்த உலக பணியில் ஈடுபடுங்கள்
மனதில் இறைவன் புகுந்துகொண்டால்
உலக ஆசைகள் தானே வெளியே சென்று விடும்
இப்பிறவியிலே இன்ப வாழ்வு வாழலாம்
No comments:
Post a Comment