Tuesday, February 14, 2012

பிறப்பிறப்பு சுழலிருந்து விடுபட முயற்சிக்கவேண்டும்

இறைவனிடமிருந்து பிரிந்து கணக்கற்ற பிறவிகளை அடைந்து
பலவிதமான பிறவிகளை எடுத்து,இன்ப துன்பங்களை அடைந்து ஆசையினாலும், மோகத்தினாலும், அறியாமையாலும் பல இன்னல்களை அனுபவித்து இந்த சுழலிலிருந்து விடுதலை அடைவதற்காக இறைவனால் நமக்கு அளிக்கப்பட்ட பிறவிதான் மனித பிறவி

அதை உணராது இந்த உலக மாயையில் மூழ்கி உலகத்திற்கு தான் வந்ததின் நோக்கத்தை உணராது அகந்தை கொண்டு அன்பில்லாது பிற உயிர்கள் மீது ஆதிக்கம் செலுத்தியும் ,தன்னை படைத்த இறைவனை உணர்ந்துகொள்ளும் மார்க்கத்தை நாடாது வாழ்க்கையை வீணடிப்பதே தங்கள் உயிர் மூச்சாக கொண்டு இந்த உலகில் பெரும்பாலான  மனிதர்கள் தங்கள் காலத்தை கழித்து கொண்டு வருவது மிகவும் வருத்தர்க்குரியது 

எக்கணமும் மரணத்தை தழுவும் உடல் கொண்ட நாம் தம்மைப்போல் அழியக்கூடிய மனிதர்களின் உடல் மீது இச்சை கொண்டு அதை 
பரா(மரிப்பதிலேயே }ஆயுள் முழுவதும் நம்முடைய நேரத்தையும், சக்தியையும் வீணடித்து கொண்டிருக்கிறோம் 

இறைவனே கணக்கற்ற முறை இவ்வுலகில் அவதரித்து மனிதர்களுக்கு அறிவுறித்தியும் ,மெய்யறிவு பெற்ற சித்தர்கள், யோகிகள் ஞானிகள் 
போன்றவர்களை   இவ்வுலகிற்கு அனுப்பி மனித குலத்திற்கு நல்வழிகாட்டி அவர்களை மாயையிலிருந்து மீட்க வழிவகைகள் செய்தும் மனித குலம் எந்த பாடத்தையும் கற்றுகொள்ளாமல் நிலையற்ற பொருட்கள்மீதே தங்கள் நாட்டத்தை தங்கள் ஆயுட்காலம் முடியும்வரை செலுத்தி மீண்டும் பிறவி என்னும் புதைகுழிக்குள் (தாயின் கருவறை) விழுந்து துன்பபடுவதற்க்கே முயற்சி செய்கின்றனர். 

எனவே இனியாவது இறைவனின் நாமத்தை உச்சரித்துக்கொண்டு 
பற்றற்று தங்கள் கடமைகளை தங்களை இறைவனின் கருவியாக கருதி 
செய்து இந்த பிறப்பிறப்பு சுழலிருந்து விடுபட முயற்சிக்கவேண்டும்     

2 comments:

  1. அருமையாய் சொன்னீங்க சார் !

    ReplyDelete
  2. நன்றி வருகைக்கும் கருத்துக்கும்
    உங்களைபோல் ஒரு ரசிகன்
    இருக்கும்வரைக்கும் நான்
    எண்ணங்களை வெளிப்படுத்தி
    கொண்டிருப்பேன்
    பிறவி என்பது எளிதில்
    தீர்க்க இயலாத பிணி
    ஆனால் கோடிக்கணக்கான மக்களில்
    அந்த பிணி தன்னை
    பாதித்திருப்பதை அறிந்த
    ஒரு சிலரே அந்த நோயை தீர்க்கும்
    இறைவனை நாடி செல்கின்றனர்
    மற்றவர்கள் மற்றவற்றை நாடியே
    நாடி தளர்ந்து மடிந்து போகின்றனர் .

    ReplyDelete