Thursday, March 1, 2012

காண்பதனைத்தும் அவனே

நாம் எதற்கு நாம் உண்ணும் உணவை 
இறைவனுக்கு படைக்க வேண்டும்? 

சிலைகள், படங்கள் முன்பு வைத்து 
படைக்கப்படும் உணவுகளை இறைவன் உண்கிறாரா 
என்று பல பேர்களின் உள்ளத்தில் கேள்விகள் எழும் 

ஆனால் எல்லோரும் செய்கின்றார்கள் என்று 
அவர்களும் செய்து விட்டு போகின்றார்கள்.
 
இறைவனுக்கு நமக்கு இருப்பதுபோல்
மாமிச உடலும் 
குடல்களும் கிடையாது 
அதனால் நாம் அளிக்கும் 
உணவுகளினால் அவருக்கு  
எந்த பிரயோஜனமும் இல்லை
அவன் ஒளி மயமானவன்
  
இருந்தும் ஏன் இந்த செயலை 
காலம் காலமாக இந்து
மதத்தை சார்ந்தவர்கள் 
செய்து வருகிறார்கள் ?

நமக்கு ஒரு வடிவம் கொடுத்து 
நமக்குள் அவன் புகுந்து கொண்டு
நம்மை இயக்குகின்றான்

நம்முடைய புலன்கள் எப்போதும் 
வெளியே சென்று கொண்டிருப்பதால் 
நம் உள்ளிருந்து அவன் நம்மை இயக்குவதை 
நாம் அறிய இயலுவதில்லை

நமக்கு வடிவம்  கொடுத்த அவனுக்கு நாம் ஒரு 
வடிவம் கொடுத்து அவன் நமக்கு செய்வதை எல்லாம் நாம் 
அவனுக்கு நன்றி கடனாக திருப்பி செய்யும் பாவனையில்தான் 
இந்த செயல்களை செய்து வருகின்றோம்
 
நமக்குள் அவன் இருந்து செயல்படுவதை உணர்ந்த பின்பு
இது போன்ற புற வழிபாடுகள் தேவையற்றதாகிவிடும் 

அதன் பின் நாம் செய்யும் 
அனைத்து செயல்களும் 
வழிபாடுகள் ஆகிவிடும்

அந்த நிலையை அடைந்த பின் 
காண்பதனைத்தும் அவனே என்று 
உணர்ந்து கொண்டு இவ்வுலக வாழ்வை
இன்ப துன்பம் கடந்த நிலையில் 
ஆனந்தமாக வாழலாம் 

2 comments: