அடிமுடி காணா எம்பெருமான்
அண்ணாமலையானே
சோதி பிழம்பாய் நின்றவனே
குளிர்ந்து மலையாய் ஆனவனே
உண்ணாமுலை அம்மனுடன்
உறைபவனே
கார்த்திகை தீபத்தில்
ஒளியாய் ஒளிர்பவனே
ஆதவனை சுற்றும் கோள்கள் போல்
உன்னை கிரி வலம் வரும்
பக்தர்களை காப்பவனே
செல்வ செருக்குற்றவரும்
கற்ற கல்வியினால் கர்வம்
கொண்டவரும் காண இயலா
கைலாயவாசனே
எளியோனே,எங்கும் நிறைந்தவனே
எல்லோர்க்கும் இறையோனே
உலகில் கோயில் அமைத்தோர்க்கும்
உள்ளத்தில் கோயில் அமைத்து உள்ளத்தில்
பூஜித்தொர்க்கும் ஒருசேர அருள் செய்வோனே
சிவாய நம என்றிருப்போர்க்கு
அபாயம் தவிர்க்கும் இறைவனே
அடிபணிந்தோம் என்றென்றும்
எல்லோரும் வாழ்கவென்று
பகிர்வுக்கு நன்றி !
ReplyDeleteநன்றி DDsir
ReplyDeleteபகிர்வை விட படத்திற்குதான்
பாராட்டப்படவேண்டும்
கங்கை கொண்ட சோழபுரம்
கோயில் சிற்பம்தான்
இந்த பதிவிற்காக
எடுத்துக்கொள்ளப்பட்டது
என்னே நம் முன்னோர்களின்
சிற்பக்கலை.
அதற்க்கு ஈடு இணை
எதுவும் கிடையாது