சுகம் என்பது என்ன?
குழந்தைகளின் எதிர்காலத்திற்க்காக தங்கள்
சும்மா இருப்பதுதான் சுகம் என்று
சொல்கிறார்கள் சித்தர்கள்
ஆனால் உலகில் மக்கள் ஏதாவது சுகத்தை நாடி
வாழ்நாள் முழுவதும் கிடைக்கின்ற இருக்கின்ற
சுகத்தை இழந்து வாழ்நாளை வீணடித்து
கொண்டிருக்கின்றார்கள் என்பதுதான் உண்மை
கல்வி கற்பதற்காக குழந்தபருவ இன்பங்களை
குழந்தைகள் இழக்கின்றார்கள்
வாலிப பருவத்தில் காதலில் சிக்கி தங்கள்நிகழ் காலத்தை
பாழாக்கி கொண்டிருக்கிறது இன்றைய இளைய சமுதாயம்
குழந்தைகளின் எதிர்காலத்திற்க்காக தங்கள்
வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் கிடைக்கின்ற
மகிழ்சிகளை பெற்றோர்கள் இழந்து கொண்டிருக்கின்றார்கள்
இப்படிதான் என்றோ எங்கோ கிடைக்கபோகும்
ஒரு சுகத்தை எண்ணி நிகழ்காலத்தை இழந்து
ஏமாற்றத்திலும் ஏக்கத்திலும் துன்பத்திலும்
வாழ்க்கையை கழித்துக்கொண்டிருக்கிரார்கள்
இன்றைய உலக மக்கள்.
எதிர்காலத்தையே நினைத்து நிகழ்காலத்தை
மகிழ்ச்சியின்றி கழிப்பதை விடுத்து
ஒவ்வொரு கணத்தையும்
அப்படியே ஏற்றுக்கொண்டு
வாழ்க்கையை மனநிறைவோடு
வாழ்வதுதான் சுகம்.
சுகம் - அவரவர் மனதைப் பொறுத்து மாறுபடும் !
ReplyDeleteமனத்தால் பெறும் சுகம் மாறுபடத்தான் செய்யும்
ReplyDeleteமனம் கடந்த சுகம் நிலையானதாக இருக்கும்