Monday, March 19, 2012
எல்லாவற்றிற்கும் காரணம் மனம்தான்
பணம் ஏராளமாக இருக்கிறது
வாழ்க்கையை நடத்த அனைத்து வசதிகளும் இருக்கிறது
உதவி செய்ய வேலையாட்கள் இருக்கிறார்கள்
எல்லாம் இருந்தும் இன்று பல கோடி பேர்கள்
மகிழ்ச்சியாக இருக்கிறார்களா?
என்றால் இல்லை என்றுதான் பதில் கிடைக்கும்
எல்லாம் இருந்தும் ஏன் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை?
மனதின் போக்கை சரியாக புரிந்துகொள்ள இயலாமையால் மனம் போன போக்கில்
மீளமுடியாத தவறான் பழக்க வழக்கங்களுக்கு ஆளாகி பெரும்துன்பதிர்க்கு ஆளாகிவிடுகிறார்கள்.
தன் முட்டாள்தனத்தினால் விளைந்த செயல்களுக்கு
பிறர் மீது குற்றம் செலுத்தி தனி மனிதர்கள் அனைவருக்கும் கேடு விளைவிக்கிறார்கள்
அதை போன்ற எண்ணம் கொண்ட சில நாடுகளின் தலைவர்கள்
மற்ற நாடுகளின் மீது போர் தொடுத்து கோடிகணக்கில் பணத்தை வீணடித்து,
லட்சகணக்கில் மக்களை கொன்று குவித்து உலகில்
அமைதியை குழி தோண்டி புதைக்கிறார்கள்.
முடிவில் அவர்களும் புதையுண்டு போகிறார்கள்.
ஆனால் அவர்கள் தோற்றுவித்த அழிவுகள்
பல ஆண்டுகள் நிலைத்து நிற்கும்
.
இதுபோன்ற மன நோயாளிகளின் போக்கிற்கு காரணம்
சுயநலம்தான்.அவர்களிடம் கூட்டு சேரும் அதுபோன்ற சில
மனிதர்களும்தான் இந்த நிலைமைக்கு காரணம்.
எல்லாவற்றிற்கும் காரணம் மனம்தான்
அதில் உள்ள எண்ணங்கள்தான் காரணம்
அது இந்த உலக பொருட்கள் மீது இன்பத்தை தேடுகிறது
உயிரற்ற பொருட்கள் இன்பத்தை எப்படி தரமுடியும் என்று யாரும் யோசிப்பதில்லை
அழகிய உயிருள்ள பூனைக்குட்டியோ நாய்க்குட்டியோ
தரும் இன்பம் தங்க நகைகளோ வைர நகைகளோ தர இயலுமா?
அழகிய உயிருள்ள குழந்தையின் ஒவ்வொரு அசைவும்
மழலையும் தரும் மட்டற்ற இன்பம் ஒரு பொம்மை தர இயலுமா?
பிணமாகிவிட்டால் பணமோ இந்த வசதிகளோ
நம்முடன் வருமா என்பதை ஒவ்வொருவரும் தினமும்
ஒரு கணமாவது சிந்தித்து பார்க்கவேண்டும்
உயிருடன் இருக்கும்போதே அனைவருடன் அன்போடு
பழக வேண்டும்
வேதனையை தரும் வெறுப்பை நீக்க வேண்டும்
பிறர் மனம் நோகும்படி வார்த்தைகளை கூறாமல்
பிறர் மீது புறங்கூறாமல்,
பிறருக்கு துன்பம் விளைவிக்காமல்,
பிறர் சொத்துக்களை .அபகரிக்காமல் ,
இல்லாதவருக்கு உதவுவதும்,
பிறர் துன்பங்களை நீக்க பாடுபடுவதும்
துன்பங்களையும், ஏமாற்றங்களையும்
ஏற்றுக்கொள்ள பழகிகொள்வதும்,
எல்லாம் வல்ல இறைவன் மீது
நம்மையும் இந்த உலகையும் படைத்த
இறைவன் மீது எப்போதும் நம்பிக்கை வைத்து
அகந்தையில்லாமல் வாழ்க்கை நடத்த பழகி கொண்டால் எந்நிலையிலும்
கவலைகள் இல்லாமல் வாழலாம்.
இவ்வுலகில் அமைதி தவழ நம்மை படைத்த
இறைவனை தினமும் காலையில் கண் விழித்ததும்
பிரார்த்தனை செய்வோம
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment