எத்தனை கோடி இன்பம்
வைத்தாய் இறைவா
பாசத்தினால் இந்த உயிர்களை
கட்டி போட்டு வைத்திருக்கிறாய்
பாசத்தினால் இந்த உயிர்கள்
இன்ப துன்பங்களில் மாட்டிகொண்டு
மீண்டும் பாவ புண்ணியம்
மற்றும் இறப்பு இறப்புகளில் சிக்கி
தான் யார் என்பதை மறந்து
படைத்த உன்னையும் மறந்து
இந்த பூஉலகில் மீண்டும் மீண்டும்
வந்து அல்லல்படுவதை
கண்டு அவர்கள் மீது கருணை
கொண்டு காக்க நினைத்தால்தான்
உயிர்களுக்கு விமோசனம் பிறக்கும்
பாச வலையில் சிக்கிய மனிதர்களும்
சிலந்தி வலையில் சிக்கிய பூச்சிகளும்
அதிலிருந்து மீள்வது மிகவும் அரிது
பாசம் மனிதர்களுக்கு மட்டுமன்று
விலங்குகளுக்கும் தானே
கீழே பூனையின் பாசம் எப்படி?
பாராட்டிற்கு நன்றி.
ReplyDeleteசில மாதங்கள் எங்களோடு
வாழ்ந்தது ஒரு பூனை கூட்டம்
அப்போது அவைகளின் பாச மழையில்
நாங்கள்நெகிழ்ந்து போனோம்.
அப்போது கிளிக்கின படங்களில்
ஒன்றுதான் இந்த படம்.
எவ்வளவு டென்ஷனாக இருந்தாலும்
அந்த பிஞ்சுகளை பார்த்துகொண்டிருந்தால்
அனைத்தும் பறந்துவிடும்
பிறகு அவைகளை விட்டு
பிரிந்துவிட்டோம்.