Wednesday, March 21, 2012

கடவுளும் குயவனும்

கடவுளும் குயவனும் 

இருவரும் ஒரே வேலையைத்தான் செய்கிறார்கள்
ஆனால் குயவனை யாரும் ஒன்றும் சொல்வதில்லை

ஆனால் கடவுளை மட்டும் அனைவரும் எதற்கெடுத்தாலும் 
குறை சொல்கிறார்கள் குற்றம் சுமத்துகிறார்கள்
எப்படி? 

குயவன் மண்ணை பிசைந்து கால்களால் மிதித்து துவைத்து 
மண்ணை மிருதுவாக்கி விதவிதமான் பானைகளை வெவ்வேறு
அளவுகளில் செய்கிறான். 
சூரிய ஒளியில் காய வைத்து தீ மூட்டி சுட்டு எடுக்கிறான் 
பிறகு விற்பனைக்கு அனுப்புகிறான்
வேகாத பானைகளை உடைத்து போடுகிறான்
சில எடுத்து வைக்கும்போதும் வேறொரு இடத்திற்கு கொண்டு செல்லும் போதும் உடைந்து போகின்றன 

எல்லா பானைகளும் ஒரே மண்ணினால் செய்யபட்டாலும்
ஒரு பானை கோயிலில்  கலச  நீர்  வைக்க  செல்லுகிறது ,ஒன்று  உணவு  சமைக்க  செல்லுகிறது, சில பிணத்தின்  கூட  நெருப்பை  சுமந்து செல்லுகிறது  சில சுடுகாட்டில் பிணம் எரித்த பின் எலும்புகளையும் சாம்பலையும் வைக்க பயன்படுகிறது

அதேபோல்தான் மனிதர்களையும் இறைவன் ஒன்றாக நன்றாகத்தான் படைக்கின்றான்
ஒவ்வொரு மனிதனின்  செயல்பாடுகளுக்கு ஏற்ப அவன் வாழ்வு நல்லதாகவோ துன்பமானதாகவோ அமைகிறது.

 மண்பானைகளுக்கு தன வாழ்வை அமைத்து கொள்ளும் சுதந்திரம் கிடையாது

ஆனால் கடவுள் மனிதனுக்கு அறிவையும் சுதந்திரத்தையும்  அபரிமிதமாக 
வழங்கியிருக்கிறான். 
அதை நல்ல வகையில் பயன்படுத்திகொள்வது அவன் கையில்தான் இருக்கிறது 

அதை தவறாக பயன்படுத்தி தனக்கு தானே துன்பத்தை வரவழைத்துகொண்டு கடவுளையும் மற்றவர்களையும் குறை கூறுவது அறிவீனம் என்பதை மனிதர்கள் உணரவேண்டும். 

No comments:

Post a Comment