உன்னை அறிந்தால்
நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
என்றான் கண்ணதாசன்
நீயே பிரம்மம் என்கிறது
உபநிதடங்கள்
நானே பிரம்மம் என்றார் ஆதி சங்கரர்
சர்வம் பிரம்ம மயம் என்றார்
சதாசிவ ப்ரம்ம்ஹேந்திர ஸ்வாமிகள்
தன்னை அறிந்து இன்புற
ஒரு தந்திரம் சொல் நிலாவே
என்றான் மஹாகவி பாரதி
பிரம்மனே பிரம்மத்தை அறிந்திடாது
முருகனிடம் குட்டு வாங்கினார்
என்று புராணங்கள் சொல்கிறது
சிவபெருமானே முருகனிடம்
பாடம் கேட்டார் பிரம்மத்தை பற்றி
அப்படியானால் பிரம்மம் என்றால் என்ன?
பிரம்மம் பற்றிய ஞானத்தை அறிந்தவன்தான்
பிராம்மணன் என்றார் மராட்டிய ஞானி
ஞானேஸ்வர்
பிரம்மத்தை ஒருவன் அறிந்துகொண்டேன் என்று
சொன்னால் அவன் பிரம்மத்தை அறியாதவன் என்று
பொருள்
ஏனெனில் வார்த்தைகளால்
விளக்கமுடியாத ஒன்றை கண்டேன்
என்று சொன்னால் எப்படி ஏற்றுகொள்வது என்று பொருள்
பிரம்மம் என்றால் அங்கு இங்கு எனாதபடி
எல்லாவற்றிலும் நீக்கமற நிறைந்த பொருள்
எல்லாவற்றிலும் நீக்கமற நிறைந்த பொருளை
அதில் ஒரு சிறு பகுதியான மனிதன் எவ்வாறு
விவரிக்கமுடியும்?
கடலில் உள்ள ஒரு நீர் துளி கடலை
குறித்தாலும் அது கடலாகுமோ?
அதுபோல்தான் இதுவும்
எங்கும் பரந்துள்ளது பிரம்மம்
எல்லாவற்றிற்குள்ளும் புகுந்துகொண்டு
இயக்குவதும் பிரம்மம்தான்
தோற்றுவித்த அனைத்தையும் தனக்குள்
மறைத்துக்கொள்வதும்
கொள்வதும் பிரம்மம்தான்
புலன்களின் உதவியால்தான் நாம்
இந்த உலகோடு தொடர்பு கொள்கிறோம்
வெளியே செல்லும் புலன்களை உள்முகமாக
திருப்பினால் நம் கேள்விகள் அனைத்திற்கும்
விடை கிடைக்கும்
முயற்சி செய்வோம்
No comments:
Post a Comment