Friday, March 9, 2012

காண்பதனைத்தும் இறைவனே


காண்பதனைத்தும் இறைவனே

காண்பதனைத்தும் இறைவனே

ஆம் நாம் இவ்வுலகில் காண்பதனைத்தும் இறைவனே

காண்பதனைத்தும் அவனின் கைவண்ணமே தவிர வேறெதுவுமில்லை

நாம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களும் அவனுடையதே
நம்முடைய உயிரும் அது தங்கியுள்ள உடலுமவன் அளித்ததே


நமகென்று எதுவுமே சொந்தமில்லாத நிலைமையில்
நான் என்றும் .எனது என்றும் என்ற எண்ணம் எங்கிருந்து வந்தது ?

அதுதான் மாயை
மாயை நீங்க மாயவனை சிந்திக்க வேண்டும்
அப்போதுதான் உடல் மீதும் உடைமைகள்
 மீதும் மோகம் நீங்கி ஞானம் சித்திக்கும்

ஏமாற்றமில்லாமல் வாழ எந்த செயலையும்
 பலன் கருதாது செய்யவேண்டும்

அகந்தை நீங்க இறைவனிடம் முழு நம்பிக்கை வைத்து 
அனைவரையும் இறைவனின் வடிவங்களாக கருதி
சேவை செய்ய வேண்டும்

தனக்கு துன்பம் விளைவிக்கிறவர்களிடமும்
அன்பு காட்டபழக  வேண்டும் .

மேலே கண்டவற்றை நினைவில் கொண்டு வாழ்க்கையை 
நடத்தினால் துன்பமில்லா வாழ்வும்
ஞானமும் ஒருங்கே சித்திக்கும் .

இவுலகில் அனேக மகான்கள் பாடுபட்டு 
இறைஅருளை அடைந்திருக்கிறார்கள் 
.நாமும் முயற்சி செய்தால் 
அந்த நிலையை அடைவது சாத்தியம் 

2 comments:

  1. "அனைவரையும் இறைவனின் வடிவங்களாக கருதி
    சேவை செய்ய வேண்டும்"

    அருமை ! வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி
    அனைவரையும் இறைவடிவங்களாக
    கருதி சேவை செய்தால் அகந்தை ஏது?
    பொறாமை ஏது?
    போட்டி ஏது?
    ஏமாற்றம்தான் ஏது?
    துன்பம் ஏது?
    என்றும் இன்பம்தான்
    கடினம்தான்
    எனினும் முயற்சி செய்வோம்

    ReplyDelete