உலகில் இறைவனுக்காக
பல்லாயிரக்கணக்கான கோயில்கள் கட்டப்பட்டன
அவைகளில் பல கோடி மக்கள் வழிபாடுகள் செய்தனர்.
நன்மைகளும், மன அமைதியும் பெற்று
இன்பமாக வாழ்ந்து வந்தனர்.
மனிதன் தான் உழைத்து சம்பாதித்த மிக உயர்ந்த
பொருட்களான தங்கம், வைரம் போன்ற
விலைமதிப்பில்லாத பொருட்களை
இறை வடிவங்களுக்கு சாற்றி மகிழ்ந்தான்
காலபோக்கில் இறை வடிவங்களுக்கு
முக்கியத்வம் அளித்த மனிதன் இறைவன்
அனைத்து உயிர்களிலும் இறைவன்
வாசம் செய்கின்றான் என்பதை மறந்து போனான்
தெய்வ வடிவங்களுக்கு அவன் கொடுத்த முக்கியத்வதை
தன்னோடு வாழும் சக மனிதர்களுக்கும் உயிர்களுக்கும்
கொடுக்காமல் அவர்களை துன்புறுத்துவதில் இன்பம் காணலானான்
மனிதர்களை திருத்த எண்ணிய இறைவன்
மனிதர்களில் சில பகுதியினரை இறை வடிவங்கள்
மட்டும் கடவுளல்ல என்ற கொள்கையினை
மக்களிடையே பரப்ப எண்ணி கோயில்களை அழிக்க செய்தான்
.
பொருட்கள் மீது கொண்ட மோகத்தை அழிக்க
அவைகளை கொள்ளை போகுமாறு செய்தான்
அதனால்தான் ஏராளமான கோயில்கள் அழிக்கப்பட்டன.
செல்வங்கள் கொள்ளை போயின
இறைவன் படைப்பில் அனைவரும் சமம் என்று புத்தரும்,
மகாவீரரும், ஆதி சங்கரரும், திருவள்ளுவரும் , வள்ளலாரும்,
ராமகிருஷ்ண பரமஹம்சரும் ,ராமானுஜரும் ,
முகமது நபியும், கிறிஸ்துவும் ,சீரடி சாயியும்
என கணக்கற்ற மகான்கள் மக்களிடையே தோன்றி
அன்பின் பாதையை உலகிற்கு காட்ட வந்தனர்
.மீண்டும் உலகில் உண்மையான இறைவன்
தத்துவம் உணரப்பட்டது.
ஆனால் சில காலம் கழித்து அவர்களின் கொள்கைகள்
காற்றில் பறக்கவிடப்பட்டு மக்கள் ஒருவரை ஒருவர்
சுயநலத்தால் தாக்கிகொண்டு கோடிகணக்கில் மாண்டு போயினர்
மதங்களின் பெயரால் சண்டையிட்டு மடிந்தனர்.
மதங்களின் உண்மையான தத்துவங்கள் பின்னுக்கு
தள்ளப்பட்டு மக்கள் போலிகளின் பின்னால் மக்கள் இன்று
அணிவகுத்து சென்று கொண்டு தானும் துன்பத்திற்கு
ஆளாகி உலக மக்களையும் துன்பதிற்க்க்கு ஆளாக்கிகொண்டிருக்கின்றனர்.
இந்நிலை மாற வேண்டும் உலகில் அன்பு கோலோச்ச வேண்டும், பகைமை ஒழிக்கப்படவேண்டும். அதற்க்கு இறைவன் வழி காட்டட்டும்
என்று நல்ல உள்ளங்கள் அனைத்தும். பிரார்த்தனை செய்ய வேண்டும்.