மறை பொருளாய் இருப்பது
பரம்பொருள் (2)
இந்த உடல் அழிவதற்குள்
உரிமையை அடைந்து விடுவோமோ ஐயா...?
திண்டுக்கல் ஜெயபாலன்
ஏன் முடியாது?
அது மிக எளிது
எப்படி?
இப்போது எதை எதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறோமோ
அதில் சில மாற்றங்கள் செய்தால் போதும்.
இப்போது தண்ட பேச்சு பேசி
வாழ்நாளை வீணாக்கிக் கொண்டிருக்கிறோம்.
அதை விடுத்து கையில் தண்டம் ஏந்திய தன்டாயுதபாணியாகிய
முருகனைப் பற்றி பேச வேண்டும், பாடவேண்டும் ,
நினைக்கவேண்டும்.வணங்கவேண்டும் (அல்லது)
அல்லது கோதண்டத்தை கையில் ஏந்தி காட்சி தரும்
கோதண்டராமனை பேச வேண்டும், பாடவேண்டும் , நினைக்கவேண்டும்.
வணங்கவேண்டும் (அல்லது)
மும்மலங்களை அகற்றிய சூலத்தை ஏந்திய சூலபாணியாகிய
சிவபெருமானைத் துதிக்க வேண்டும். (அல்லது)
ஆபத்தில் அபயக்கரம் நீட்டும் அகிலாண்டேஸ்வரியின்
பாதாரவிந்தங்களை பற்றவேண்டும். (அல்லது)
நமக்காக அனைத்தையும் துறந்து எல்லாவற்றையும் தியாகம் செய்த செய்யும்
தண்டத்தை கையில் ஏந்தி பற்றற்று பரோபகாரிகளாக வாழும், வாழ்ந்த ஞானிகளை ,
யோகிகளின் பாதங்களை சரணடையவேண்டும்.
நாம் எப்போதும் புறவுலகில் நமக்கு துன்பம் தரும் எதிரிகளை சமாளிப்பதில்
அக்கறை காட்டுகிறோம்.
அழியும் பொருள்களை நாடி ஓடி தேடி ஆயுளை ஒழிக்கிறோம்.
நமக்குள் இருக்கும் எதிரிகளை நாம் இனம் கண்டு அவைகளை ஒழிக்க
எந்த முயற்சியும் செய்வதில்லை. அவர்களை அழிக்க முடியாது. அவர்களின்
சக்தியை நாம் இறைவனை அடைய பயன்படுத்த கற்றுக்கொள்ளவேண்டும்.
அதற்கு ஒரே வழி இறை நாமத்தை சொல்வதுதான்.
எப்படி என்றெல்லாம் கேட்காதீர்கள்
இறை நாமத்தை சொல்லி சொல்லி
முக்தி அடைந்தவர்கள் ஏராளம் நம் நாட்டில்.
சந்தேகத்தை விடுங்கள்.
அவர்கள் சொன்னார்கள்.
செய்து காட்டினார்கள்.
அதைதான் இவனும்
செய்கிறான் சொல்கிறான்.
உலக மோகத்தில் மூழ்கியவர்களின்
காதில் இந்த செய்தி என்றும் போய்ச் சேராது
மனித பிறவியை வீணாக்காதீர்கள்.
இந்த பிறவியில் அதற்கான விதை போட்டால்
அடுத்த பிறவியிலாவது
அது முளைத்து துளிர் விடும்.

நம்பிக்கை வைப்பதே நல்ல வழி.
ReplyDeleteவிளக்கங்கள் அருமை... நன்றி ஐயா...
ReplyDelete