Monday, May 5, 2014

எல்லாம் பிராணன் உள்ள வரை தான்

எல்லாம் பிராணன் 
உள்ள வரை தான் 



தெருவிலே ஒரு காய்ந்த சருகு கிடக்கிறது
காற்று வீசுகிறது

அசையாமல் கிடந்த அந்த சருகு
பறந்து போய் ஒரு வீட்டின் மேல் விழுகிறது.

அப்புறம் மழை பெய்கிறது அது நனைந்து
 மக்கி அங்கேயே மண்ணாகிப் போகிறது.

மண்ணில் அசையாமல் கிடந்த சிறகு
பறந்ததே அதற்கு உயிருண்டோ?
காற்றுதான் அதை அசைத்தது,பறக்க வைத்தது.

அதுபோல்தான் நாம் தங்கியுள்ள உடலும்.
அந்த சருகைப்போல் ஒரு ஜடம்

நமக்குள் பிராண சக்தி வந்து போய்க்கொண்டிருப்பதால்
இந்த உடல் அங்கும் இங்கும் போய்  வந்துகொண்டிருக்கிறது.

உடலில் உள்ள கருவிகளெல்லாம்
 இயங்கிகொண்டிருக்கின்றன.

நம்முள்ளிருந்து வெளியே பிராணன்
மீண்டும் உள்ளே வராவிட்டால்.
ஆட்டம் கிளோஸ்  

இதை தினமும் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
சலனமில்லாமல்

இறைவன் நமக்கு எதற்க்காக
இந்த உடலைக்  கொடுத்தான்,
 மனத்தைக் கொடுத்தான்,
அறிவைக்கொடுத்தான் என்பதை ஆராயாது
எதை எதையோ ஆராய்ச்சி பண்ணிக்கொண்டிருக்கிறோம்.

சிலர் அகழ்வாராய்ச்சி
பண்ணிக்கொண்டிருக்கிரர்கள்.

சிலர் அடுத்தவர் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்
என்று அல்லும் பகலும் ஆராய்ச்சி
பண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.

ஒரு மரத்திலிருந்து விழுந்த இலைமீண்டும்
மரத்தில் சென்று ஒட்டிக்கொள்ளமுடியாது.

அதுபோல் இந்த உடலிருந்து வெளியே சென்ற
உயிர் என்னும் பிராணன் மீண்டும்
அந்த உடலில் புகமுடியாது.

எனவேதான் ஞானிகள் விழித்துக்கொள்ளுங்கள்
.மதி மயங்கி இறைவன் கொடுத்த வாய்ப்பை
வீணாக்கி விடாதீர்கள் என்று எச்சரிக்கிறார்கள்.

ஆனால் யாரும் அதை காதில்
போட்டுக்கொள்ளுவதே இல்லை. 

கவனியுங்கள். இந்த பிராணன்
எங்கிருந்து வருகிறது எங்கு செல்லுகிறது

அதைக்கண்டுவிட்டால்.மீண்டும் பிறப்பில்லை.
அதனால் விளையும் எண்ணற்ற துன்பங்களும் இல்லை. 

3 comments:

  1. எந்தக் காற்றாக இருக்கப் போகிறோம்...?

    ReplyDelete
  2. வாழ்வின் பொருளை அறிய முற்படாமல் வாழ்வதற்கு பொருள் தேடிக் கொண்டிருக்கிறோம்!

    ReplyDelete
    Replies
    1. இரண்டிற்கும் பொருள் ஒன்றுதான்.

      இவ்வுலகில்வாழ்வாங்கு
      வாழ பொருள் தேவை

      அதை அற வழியில் ஈட்ட வேண்டும்.
      ஈட்டிய பொருளைக் கொண்டு ஈஸ்வரனை வழிபடவேண்டும்

      அதோடும் மட்டுமல்லாமல் நடமாடும்
      உயிர்களுக்கும் அந்த பொருளைக் கொண்டு உதவ வேண்டும்.

      எல்லாம் தனக்குத்தான் என்று இருந்தால் மனதில் இருள் சூழ்ந்துவிடும்.

      Delete