Monday, May 12, 2014

இன்று நரசிம்ம ஜெயந்தி



இன்று நரசிம்ம ஜெயந்தி 






விலங்கிலிருந்து நரனாக (மனிதனாக)
பிறவிஎடுத்த நாம் விலங்கு போல்தான்
வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கிறோம்.

உறங்குவது ,விழிப்பது, இரை  தேடுவது 
சண்டை போடுவது, உண்பது, உறவுகொள்வது,
பாசத்தில் மூழ்குவது, உறங்குவது, போன்று விலங்குகள் செய்யும் காரியங்களைத்தான் அனுதினமும் செய்துகொண்டுவருகிறோம்

உடலில் உள்ள இரைப்பையை நிரப்ப
இரை தேடுவதிலேயே ஆயுளில் பெரும்பகுதி
கழிந்துவிடுகிறது

நம் இதயத்தில் இறைவனை நிரப்ப
நாம் முயற்சி செய்வதேயில்லை.

அனைத்தையும் நம்முள் இருக்கும்
இறைவன் செய்துகொண்டிருக்க நாம்தான் அனைத்தையும் செய்துகொண்டிருக்கிறோம்.என்ற மமதை  வேறு.

அதனால் இறைவனை மறந்து
தன்னையே உயர்வாகக் கருதிக்கொண்டு
மற்றவர்கள் நம்மை மதிக்கவேண்டும் என்று அகந்தைகொண்டு ஹிரன்யகசிபுவைப்போல  பிறரை துன்புருத்திக்கொண்டு நாமும்
ம ன நிம்மதியில்லாமல் அலைந்துகொண்டிருக்கிறோம்.

அதனால்தான் ஹரி அகந்தை வடிவான
ஹிரணியனை  வதம் செய்தான்.

தன்  மீது பக்தி பூண்ட  பிரகலாதனை
அழிவிலிருந்து காப்பாற்றி
அழியா ஞானத்தை அளித்தான்.

நமக்கும்  இறைவன் நம் உள்ளத்தில் மண்டிக் கிடக்கும்
அகந்தை காட்டை அழிக்கட்டும்.

பக்தி அருளட்டும் அதன் மூலம்

நரசிங்கப்பெருமானின்
அருள் கிடைக்கட்டும்  

6 comments:

  1. //அனைத்தையும் நம்முள் இருக்கும்
    இறைவன் செய்துகொண்டிருக்க நாம்தான் அனைத்தையும் செய்துகொண்டிருக்கிறோம்.என்ற மமதை வேறு.//

    இந்த எண்ணத்தை மனதிலிருந்து மறையாமல் வைத்துக் கொள்வது கடினமாகத்தான் இருக்கிறது.

    ReplyDelete
  2. உண்மையில் நாம்தான் இறைவனை மறந்து
    அவன் பெருமையை உணராது. ,அவன் புகழ் பாடாது
    நம்மை எல்லோரும் பாராட்டவேண்டும் என்று அகந்தைகொண்டு அலையும்ம் நாமும் ஹிரணியன் வம்சத்தை சேர்ந்தவர்கள் .

    பிரகலாதன் போன்ற மகாத்மாக்கள் நமக்கு
    ஒவ்வொரு கணமும் அறிவுறுத்தியும் அதை செவி மடுக்காது காதுகளில் கண்ட நாராசங்களை கேட்டுக்கொண்டு உள்ளம் கெட்டு ,, உடல் கெட்டு
    மீளா நரகத்தில் உழன்றுகொண்டிருக்கிறோம்

    ஹரி நம் அடாத செயல்களைக் கண்டு நம்மை தண்டிப்பதற்கு முன் அவன் பாதங்களை சரணடைந்து உய்யவேண்டும்.

    பக்த பிரகலாதன் 55 பாடல்களில் நரசிங்கப் பெருமானை நமக்காக துதிக்கின்றான். அதை சொல்லி அதன் பொருளுணர்ந்து நம் ஜன்மாவினை கடைத்தேற்றிக்கொள்ளவேண்டும்.

    ReplyDelete
  3. எல்லாவற்றிக்கும் அகந்தை தான் காரணம் என்பது புரிகிறது ஐயா...

    ReplyDelete
    Replies
    1. அதை விளக்கத்தான் இவ்வளவு பெரிய புராணம்.
      ஹரியின் நரசிங்க அவதாரம். .
      ஆனால் எல்லோரும் கதை கேட்கிறார்கள்.
      அகந்தையை விட மட்டும் மறுக்கிறார்கள்.

      Delete
  4. அனைவருக்கும் நரசிங்கப் பெருமானின்
    நல்லருள் கிடைக்கட்டும்.

    ReplyDelete
  5. நல்லருள் கிடைக்கட்டும்

    ReplyDelete