Tuesday, May 6, 2014

அழகிய சிங்கா அருள் தருவாய் !

அழகிய சிங்கா 
அருள்  தருவாய் !




                                                                      ஓவியம்- தி.ரா. பட்டாபிராமன்


அழகிய சிங்கனே !

அன்னை இலக்குமியுடன்
அருட்காட்சி தந்து
அயிஸ்வர்யங்களை
அள்ளித் தரும்
லக்ஷ்மி நரசிம்மனே

புன்னகை பூத்த  முகத்தவா
புவனத்தைக்  காக்கும் சுந்தரா
பாவம் போக்கும் பரந்தாமா

இன்னல் வாராமல் காத்திடுவாய்
இவ்வுலகில் இன்பமாக வாழ
அருள் செய்திடுவாய்

அலைகடல் மேல் துயின்றவா
அடியவரைக் காக்க தூணிலிருந்து
வெளிவந்து அகந்தை என்னும்
அரக்கனை அழித்தவா

ஆபத்திலே அபயக்கரம்
அளித்த அண்ணலே
ஆதி  சங்கரர் போற்றித் துதித்த
கராவலம்பனே

பரமேச்வரன் பாடிப் போற்றிய
மந்திர ராஜ பதனே

நீ உறையும் உள்ளத்தில்
களங்கம் உண்டோ?
கவலைகள்தான் தோன்றுமோ?

இறப்பிற்கு இறப்பளித்து
பிறப்பறுக்கும் புண்ணியனே

கடக்க இயலா பவக்கடல்
வற்றிப்போகும்
பற்றுக்கள் அற்றுப்போகும்

உன் பாதார விந்தங்களை
நம்பிக்கையுடன்
சரணடைந்தவர்க்கு

என் மனம் எப்போதும்
உன் திருவடிகளையே   
சிந்தனை செய்யட்டும்

என் நாக்கு  உன்  நாமத்தையே
சொல்லட்டும்

என் உள்ளத்தில் உன் திருவடிவம்
நிலையாய்  நிலைத்து நிற்கட்டும். 

அன்புடனே பூசிப்பேன்
உன் திருவடிவத்தை அனுதினமும்

அன்புடனே மலர் சாற்றி வழிபடுவேன்
இவ்வுலகில் உள்ள அனைத்து
உயிர்களின் வாழ்வும் ஆனந்தமாய்
அமைந்து அமைதியாய் வாழ



4 comments:

  1. அருமை. லக்ஷ்மி நரசிம்மர் படமும் அருமை.

    ReplyDelete
  2. தங்களின் ஓவியமும் சொல்லொவியமும் மிக அருமை! இதையும் படியுங்களேன்! http://www.esseshadri.blogspot.com/2012/11/blog-post_10.html

    ReplyDelete
  3. நன்றி!ES .I have already given my comments on the post

    ReplyDelete