Thursday, May 1, 2014

என்ன பார்வை உந்தன் பார்வை !

என்ன பார்வை உந்தன் பார்வை !





ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன் 

ஆம் என்ன பார்வை
உந்தன் பார்வை !

அன்பினால் அனைவரையும்
கட்டிப் போட்டாய்

அவர்களுக்குள் உறையும்
தெய்வீக ஒளியை உணர
வழி காட்டினாய்

ஆன்மீக உலகின்
முடி சூடா மன்னன்  நீ
உனக்கு எவரும் ஈடு இல்லை
இவ்வுலகில் இனி

அனைத்தையும் அந்நியர்களின்
கொடுஞ்செயலால் இழந்து
நடைபிணங்களாய் மக்கள்
வாழ்ந்து வந்த தேசம் நீ
பட்டம்  ஏற்றபோது.

கலங்கவில்லை
இந்த நிலையைக் கண்டு
காலாறப்  புறப்பட்டுவிட்டாய் உன்
மக்களைக் கண்டு அவர் துயர் தீர்க்க

கடவுள் இல்லை என்று பல கூட்டம்
காட்டுக் கத்தல் கத்தியது
கடவுள் இருக்கிறார் என்று சொன்னவரை
ஓட ஓட விரட்டியது

ஈசனுக்கே பாடம் நடத்திய
சாமிநாதன் நீயன்றோ

நீ புறப்படுவிட்டாய் கடவுள் இருக்கிறார்
என்பதை நிலை நாட்ட

பொன்னும் பொருளும்
இறைவனுக்குத்தான்
என்று ஆலயங்களில் உறையும்
மூர்த்திகளுக்கு அளித்தனர்
 நம் நாட்டு மக்கள்

அதை அறியா  மூடர்கள் நம் நாட்டின் மீது
படையெடுத்து கவர்ந்து சென்றனர்
அனைத்தையும்.

எதிர்த்தவர்களை
கொன்றழித்தனர் அன்றி மதம் மாற்றினர்.

சிலைகளையும், கோயில்களையும்
அழித்துவிட்டால்  அனைத்தையும் மாற்றிவிடலாம்
என்று பகல் கனவு கண்டனர் மூடர்கள்

காற்றை 
அழிக்க முடியுமோ?

காற்றின்றிதான் 
இவ்வுலகில் வாழ முடியுமோ?

கண்ணுக்கு தெரியாத தெய்வம் 
காணாமல்தான் போகுமோ?

எல்லாம் அழிந்துவிடும் 
உன் உள்ளிருக்கும் ஆன்மாவை 
எதனாலும் அழிக்கமுடியாது  என்ற உபதேசத்தை 
பாருக்கு வழங்கிய கண்ணபிரான் அவதாரம் 
செய்த தேசமல்லவோ நம் தேசம் 

இங்கு யார் என்ன 
வேஷம் போட்டாலும் 
அது நிலைக்காது 


அடிமைத்தனத்தை எதிர்த்து ஆயுதம்
ஏந்தியவர் அழிந்துபோனார்.
இன்னும் அழிந்து கொண்டு
இருக்கிறார்கள்.

நாடு இன்னும் விடுதலை
பெறவில்லை. தறுதலைகளிடம்
சிக்கித் தவிக்கிறது

காவிக்கொடி ஏந்திய நீயோ
ஒவ்வொரு மனிதரின் உள்ளத்தில் புகுந்தாய்.
அங்கு மண்டிக்  கிடந்த அஞ்ஞான இருளை
ஒட்டினாய்.

எந்தன் பார்வை. உந்தன் பார்வை
ஆயிரமாயிரம் ஆலயங்கள் உருபெற்றன
கல்விசாலைகள் தோன்றின.மக்கள் நலப்
பணிகள் நடக்கின்றன நல்லதோர் சமூகம்
உருவாக வழிவகுத்துவிட்டாய்.

வாழிஉன் புகழ் என்றென்றும்.



6 comments:

  1. அருமை. படம், பதிவு இரண்டும் அருமை. எனக்கு மட்டும் அவரைப் படத்தில் பார்க்க மட்டுமே கொடுப்பினை.

    ReplyDelete
  2. இவன் வரைந்த படங்களை
    தினமும் பார்த்துக்கொண்டே இருங்கள்
    அவர் உங்கள் உள்ளத்தில் வந்தமர்ந்து
    உங்களோடு பேசவும் செய்வார்.

    ReplyDelete
  3. பகல் கனவு என்றும் நிறைவேறாது ஐயா... ஓவியம் அற்புதம்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. கனவு என்பது மனம் வரையும் கோலங்கள்
      அவைகள் திரைப்படங்கள் போல் காண்பதற்கு மட்டுமே
      எண்ணங்கள் வலிமையானால்தான்
      மட்டுமே எதுவும் நனவாகும். .

      Delete
  4. //காற்றை
    அழிக்க முடியுமோ?

    காற்றின்றிதான்
    இவ்வுலகில் வாழ முடியுமோ?

    கண்ணுக்கு தெரியாத தெய்வம்
    காணாமல்தான் போகுமோ?

    // அருமை ஐயா அருமை! வரைந்த படம் அற்புதம்! நன்றி!

    ReplyDelete