Wednesday, April 30, 2014

அகந்தை தேவையா?

அகந்தை தேவையா?

அகந்தை தேவையா?

யாராவது வீடு முழுவதும்
கந்தைத் துணிகளை அடுக்கி வைப்பார்களா?

கந்தைத் துணிகளால்என்ன  பயன்?

அது அழுக்குகளை துடைத்து எறிய  மட்டும் பயன்படும்.
மற்றபடி அதை யாராவது அலமாரியில்
பத்திரமாக பூட்டி வைப்பார்களா?

நிச்சயம் மாட்டார்கள்

ஆனால் நாம் நல்ல புதிய உயர்ந்த துணிகளை
அலமாரியில் வைக்காமல்
காமம், குரோதம், லோபம், மதம் மாச்சர்யம்
ஆகியவற்றின் முழு உருவகமாக அகந்தையை
மனம் என்னும் வீட்டில் வைத்துக்கொண்டு
வீட்டை நாறடித்துக் கொண்டிருக்கிறோம்.

நம்மைப் பார்ப்பவர்கள் அலறி ஓடுகிறார்கள்.
 டேய் இவன் நாய் மாதிரி
குலைக்கின்றான். என்று

டேய் இவன் புலி
 கிட்டே சென்றால்
அடித்தே கொன்றுவிடுவான் என்று

டேய் இவன் சாகவாசமே வேண்டாம் ,
நன்றாக இருக்கும் நம்மையும்
இவன் கெடுத்துவிடுவான்.

இவன் பார்வையிலேயே படக்கூடாது.
இவன் பார்வை பட்ட இடத்தில புல் 
பூண்டு கூட முளைக்காது .என்றெல்லாம்
இந்த உலகில் நாம் பார்க்கிறோம்.

இந்த அகந்தை நம்முள் இருக்கும்
வரையிலும் நாமமும் நிம்மதியாக இருக்கமுடியாது நம்மைச் சுற்றியிருப்பவர்களும் நிம்மதியாக இருக்கமுடியாது

நாம் செய்யும் தெய்வ வழி பாடுகள் கூட
நமக்கு கைகூடாது

இப்படிப்பட்ட அகந்தை
நமக்கு தேவைதானா?

நாம் சிந்திக்கவேண்டும்.

கவைக்குதவாத எண்ணற்ற சிந்தனைகள்
 நம் மனதை ஆக்கிரமித்துக்கொண்டு நம்மை இரவும் பகலும் பாடுபடுதிக்கொண்டு நம்மை நிம்மதியில்லாமல் செய்துகொண்டிருக்கின்றன. 

ஏன் அடுத்த பிறவிக்குக் கூட தொடர்ந்து வந்து நம்மை தொல்லைபபடுத்திக் கொண்டிருக்கின்றன

நம் தலையில் மீது உட்கார்ந்துகொண்டு நம்மை மகிழ்ச்சியாக இருக்கவிடாமல் செய்யும் அகந்தையை ஒழிக்க ஒரு வழி உண்டு.

அந்த தலையை அகந்தையை அண்ட  விடாமல் செய்த
சத்குருவின் திருவடிகளில்  வைத்துவிட்டால்
தறுதலையாய் சுற்றித் திரியும் நம் மனம் தானே
அடங்கி ஒடுங்கிவிடும் அவர்  திருவடிகளில். 

3 comments:

  1. சிந்திக்க வேண்டும் - கண்டிப்பாக....

    ReplyDelete
  2. கண்டிப்பாக சிந்திக்க வேண்டும்

    ReplyDelete