சித்திரை பிறந்தது
சித்திரை பிறந்தது
"ஜய ஜய" என்ற வெற்றி முழக்கத்துடன்
நம்மை சிறுமைப்படுத்தி, அடிமைப்படுத்தி
நம்மை சுரண்டிய வந்தேறிகள் நம் மீது
சுமத்தி சென்ற "சனவரி " புத்தாண்டை கொண்டாடுகிறோம்.
இன்னும் அடிமைகளாக
நல்லவற்றை போதிக்கும் ,நம் கலாசாரத்தை
பறை சாற்றும் ,நலமாக வாழ வழி வகை சொல்லும்
தமிழ் புத்தாண்டை கொண்டாட மறுக்கும்
சில புரட்டர்களின் செயலை புறந்தள்ளுவோம்.
இந்த கணத்திலிருந்து
சில விதிகள் செய்வோம்
அதை எந்நாளும் காப்போம்.
சித்திரை முதல் நம்மை
அழிக்கும் எதிர்மறை
சிந்தனைகளுக்கு
மனதில் இடம் கொடோம்
வேத மறைகள் கூறும்
சத்தியத்தை கடைபிடிப்போம்
தர்ம வழியில் செல்வோம்.
சித்திரை திங்கள் முதல்
மதியை மயக்கும் கள்
போன்றவற்றை ஐம்புலன்களாலும்
வெறுத்து ஒதுக்குவோம்.
விதியை நினைத்து நொந்து போகாமல்
மதியை இறைவனிடம் செலுத்தி
அவனருளால் அனைத்து இடர்களையும்
வென்று வெற்றி வாகை சூடுவோம்.
பொறுமைக்கு இடம் கொடுப்போம்
பொறாமைக்கு இடம் கொடோம்.
பொய்களைப் பேசி,புளுகுகளை அவிழ்த்து விட்டு
நம் பொன்னான நேரத்தையும்,
நம் பொருளையும் நம் கண் முன்னேயே
கொள்ளையடிக்கும் சின்ன திரை
கயவர்களிடம் எச்சரிக்கையாய் இருப்போம்.
வாழ்வில் முத்திரை பதிக்க
தினமும் நித்திரையை குறைப்போம்.
அன்பே வடிவான் இறைவனை
உணர்ந்துகொள்ள அனைவரின் மீதும்
அன்பு காட்டுவோம்.ஆனந்தமாய் வாழ்வோம்.
கோடை அனல் வறண்ட ஏரி குளங்களை
ஆழப்படுத்தி மாரியில் நீர் சேமிக்கவே,
ஆற்றில் பெருகி வரும் வெள்ளம்
அழுக்கடைந்த ஆறுகளை சுத்தப்படுத்தவே
இன்பமும் துன்பமும் வாழ்வில் வருவது
உள்ளத்தை உறுதிப்படுத்தவே
இறைநாமத்தை சொல்லுவது
இதயத்தில் உறையும் இறைவனை
உணர்ந்துகொள்ளவே ,
நல்லதே நினைப்போம்.
நல்லதே நடக்கும்
இனிய சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துகள்! அருமையான உறுதிமொழிகள்! நன்றி ஐயா!
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி
Deleteதமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி
Deleteஅன்பின் இனிய புத்தாண்டு
ReplyDeleteநல்வாழ்த்துக்கள்!..
வாழ்த்துக்கு நன்றி
Deleteஇனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி
Deleteஇனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துகள். DD
Delete