Friday, April 11, 2014

அறுபதிலும் உண்டு ஆனந்தமான வாழ்க்கை (2)

அறுபதிலும் உண்டு ஆனந்தமான  
வாழ்க்கை (2)

60 வயதாகிவிட்டால் மனதில்
சில முடிவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும்.



முதலாவதாக  எனக்கு வயதாகிவிட்டது ,
இனி தன்னால் எதுவும் செய்ய முடியாது,
சுறுசுறுப்பாக இயங்க முடியாது போன்ற 
தாழ்வு மனப்பான்மையை விட்டுவிட வேண்டும்.

வயதாவது என்பது மூன்று வகைப்படும்

முதலாவது உங்களுடைய பிறந்த தேதியை
வைத்து கணக்கிடப்படும் வயது

இரண்டாவது நம்முடைய உடல் நலத்தை
வைத்து முடிவு செய்யப்படுவது

பிறந்த தேதியை நாம் மாற்றமுடியாது.
மாற்றமுடியாத அதைப் பற்றி
கவலைப்படவேண்டிய அவசியமில்லை.

ஆனால் நம்முடைய உடல் நலத்தை
நன்றாக பேணி வந்தால் வயதாகிவிட்ட விஷயம்
ஒரு பொருட்டல்ல. அது நம் கையில்தான் இருக்கிறது.

நம் கடமைகளை ஒழுங்காக செய்திருந்தோமானால் 
முதுமையைப் போல் இனிமையான பருவம் கிடையாது.
நிறைய ஓய்வு  நேரம் கிடைக்கும்

நம் வாழ்வில் பல காரணங்களினால்
நிறை வேற்றமுடியாத நம்முடைய
பல ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ளலாம்
கல்வியை தொடரலாம்,
கலைகளை கற்றுக்கொள்ளலாம்.,
இனிய இசையை ரசிக்கலாம்
தியானம் செய்யலாம்.
சுற்றுப் பயணம் செய்யலாம்.
அனுபவங்கள் எழுத்தில் வடிக்கலாம்.

ஆன்மீக விஷயங்களை கற்றுக்கொள்ளலாம்.
இதற்க்கு அளவே கிடையாது.

குழந்தைகளுடன் கொஞ்சி மகிழலாம்



வாழ்க்கையை வெறுமனே
தொலைகாட்சி பார்ப்பதிலும், வயிறு முட்டத்  தின்பதிலும்,
தூங்கி கழிப்பதிலும் ஈடுபட்டால் உடல் பெருத்து, நோய்களில் கூடாரமாகிவிடும்.

அதை தவிர்க்க  ஒரு ஒழுங்கு
முறையை கையாளவேண்டும்.

உணவும் தூக்கம், நடைபழக்கம், வீண் வாக்குவாதங்களில்  ஈடுபடுவதைதவிர்த்தல்.,
தன்னுடைய வேலைகளை தானே செய்து கொள்ளுதல்,
அனைவருக்கும், கௌரவம் பார்க்காது உதவுதல்,
பொறுமையை கடைபிடித்தல், இனிமையாக பேசுதல்
கோபத்தை கூடியமட்டும் கட்டுப்படுத்துதல்.
கையில் கொஞ்சம் காசு சேமித்து வைத்தல்
போன்று சில வழிமுறைகளைக் கடைபிடித்தால்.
முதுமை இனிமையாகப் போகும்.
(இன்னும் வரும்) 

3 comments:

  1. நல்ல யோசனைகள். இனிமையாக்கிக் கொள்வது அவரவர் கைகளில் இருக்கிறது.

    ReplyDelete
  2. முதுமையை இனிதாக்க எளிய வழிமுறைகள்! பகிர்விற்கு நன்றி ஐயா!

    ReplyDelete
  3. வயதாகி விட்டது என்கிற எண்ணமே தளர்ச்சியின் முதல் ஆரம்பம்...

    ReplyDelete