Wednesday, April 2, 2014

நாவிருப்பது எதற்காக? நாம் இந்த உலகில் பிறந்தது எதற்க்காக?

நாவிருப்பது எதற்காக?
நாம் இந்த உலகில் பிறந்தது எதற்க்காக? 

ராம நாமம்
சொல்லத்தான் நாவிருக்குது



ருசிக்காக உண்டு உடலை கொழுக்க
வைத்து நோய்களின் கூடாரமாக ஆக்க அல்ல

"நா " என்றால் ?

நா என்றால் நம்மையெல்லாம்
படைத்துக் காக்கும் நாராயணன்

நா என்றால் சொல்ல சொல்ல நம் பாவங்களைஎல்லாம்
போக்கி பரமபதத்தை அருளும் அவன் நாமம்

நா என்றால் நாக்கு அல்லது நாவு
நம்மை வாழ வைக்கும்

அதை தவறாக பயன்படுத்தினால்
அது நம்மை அழிக்கவும் செய்யும்.

நாம் வாழும் இந்த உடல் என்னும்
பிண்டம் நாம் வெளியே காணும்
அண்டங்களின் சங்கமம்

புறத்தே இருக்கும் பஞ்ச பூதங்களும்
நம் உடலுக்குள்ளேயும் இருக்கின்றன.

புறத்தே நடக்கும் அத்தனை செயல்பாடுகளும்
அனைத்தும் நம் உடலுக்குள்ளேயும் நடக்கின்றன

இரண்டும் ஒன்றை ஒன்று
சார்ந்துதான் இயங்குகின்றன.

நம் மனதில் தோன்றும் எண்ணங்கள்
உடலில் பாதிப்புகளை ஏற்படுத்துவதோடு புறவுலகிலும்
அதிர்வலைகளை ஏற்படுத்துகின்றன.

தீய எண்ணம் கொண்டவனின் உள்ளத்தில்
உண்டாகும் தீய எண்ணங்கள் புற உலகத்தில் வாழும் அதே எண்ணம்  கொண்ட அனைவர்களின் உள்ளத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்துவதால்தான் ,தீயவர்கள் பெருகிக், கொண்டே போகிறார்கள்.

அவர்கள் தொடர்ந்து இந்த  உலகத்திற்கு தீங்கை விளைவித்துக்கொண்டிருக்கிறார்கள்.

அகந்தை கொண்ட மனிதனின் நாக்கு
கடும் சொற்களை பேசுகிறது

அவர்களின் பேச்சு மற்றவர்களின்
மனதில் சினத்தை மூட்டுகிறது

அன்புடையவர்களின் பேச்சு
அனைவரையும் இணைக்கிறது.
ஆனந்தம் தருகிறது .
உலகில் அமைதியை தருகிறது.

அனைவரும் காலையில் எழுந்ததும்
இன்று முதல் கடும் சொற்களை பேசமாட்டோம்,
அன்போடு நடந்துகொள்ளுவோம்
அனைவரும் நன்றாக
வாழவேண்டும், உலகில் அமைதி நிலவ வேண்டும்
என்று மனம் ஒன்றி பிரார்த்திப்போம்.

பரம்பொருளினை உணர்த்தும்
ராம நாமம் நாவினால் சொல்லுவோம்
உள்ளத்தில் அவன் வடிவை நினைப்போம்.

நல்லது நினைத்தால்
நல்லது நடக்கும்

4 comments:

  1. அன்புடையவர்களின் பேச்சு - அனைவரையும் இணைக்கிறது.
    ஆனந்தம் தருகிறது - உலகில் அமைதியை தருகிறது.

    நல்லது நினைத்தால் - நல்லது நடக்கும்..
    = = = = = = = = = = = = = = = = = =

    நல்லதே நடக்கும்!..

    ReplyDelete
    Replies
    1. நடக்கும்.நல்லது நினைத்தால் நடக்கும்

      Delete
  2. மனம் போல் வாழ்வு என்பார்கள். எதுவாக நினைக்கிறோமோ அதுவாகவே ஆகிறோம் என்பார்கள். கற்பக மரத்தின் கீழ் தங்கிய வழிப்போக்கன் போல நல்ல சிந்தனை இருந்தால் நல்லதே நடக்கும். புலி வருமோ என்று நினைத்தால் வந்து கொன்றே விடும்.

    ReplyDelete
  3. அனைத்தும் நம் மனதைப் பொறுத்தே என்பதை நன்றாகவே சொல்லி உள்ளீர்கள் ஐயா...

    ReplyDelete