Tuesday, April 8, 2014

உடலையும் குடலையும் நம்பாதீர்கள்!

உடலையும் 
குடலையும் நம்பாதீர்கள்! 

ராம நாமத்தை
மட்டுமே நம்புங்கள் 





உணவை உண்டு வளரும்
இந்த உடலையும்
அதற்கு துணை போகும்
குடலையும் நம்பாதீர்கள்.

இந்த உடலிலிருந்து உயிர்
போனபின் இது வெளியிடும்
நாற்றம் சுற்றி நிற்பவர்களின்
குடலைப் பிடுங்கிவிடும்.

இந்த  உடல் ஒவ்வொரு கணமும் 
அழுகிக் கொண்டிருக்கிறது.
அதிலிருந்து உடலில் உள்ள ஒவ்வொரு
பகுதிகள் மூலம் நாற்றமடிக்கும் கழிவுகளும்
இறந்த செல்களின் துகள்களும்
வெளியேறிக் கொண்டிருக்கின்றன

தினம் எத்தனை முறை சோப்பு போட்டு
கழுவி  சுத்தம் செய்தாலும்
இது  அசுத்தமுடையாதாகத்தான் இருக்கும்.

எவ்வளவு வாசனை திரவியங்களை தடவினாலும்
அது வெளியிடும் கெட்ட   நாற்றத்தை சிறிது நேரம்தான்
மறைக்கமுடியும்.

இதுபோதாதென்று மனம் முழுவதும் நிறைந்து
சொல்லிலும் செயலிலும் நாற்றமடிக்கும் தீய குணங்கள் வேறு.

இப்படிப்பட்ட மலங்கள் நிறைந்த உடலில் பிராண சக்தியாக 
வந்து போய்க்கொண்டிருக்கும் இறைவனின் கருணையை எண்ணிப் பார்க்கவேண்டும்.

உள்ளத்தில் ஆன்ம ஒளியாக இருந்துகொண்டு நம்மை ஒவ்வொரு கணமும் உயிருடன் வாழ  வைத்துக்கொண்டிருக்கும் வள்ளல் வாசுதேவனை நாம் நினைக்க வேண்டாமோ?

அழகான  பல வண்ணங்களுடன் 
பறந்து செல்லும் நீர்க்குமிழி போல் 
எப்போது  வேண்டுமானாலும் வெடித்து சிதறும் 
இந்த உடல் நோய்களின் கூடாரம். 

இந்த கூடாரம் நாம் இந்த உலகில் 
வாழும் காலம் மட்டும்தான் உதவும். 

அதற்குள் நிரந்தரமான 
அழியாத வீடுபேற்றை அடையவேண்டும். 

அதற்கு ஒரே வழி ராம நாமம் சொல்லுங்கள். 
அனைத்து துன்பங்களிலிருந்தும் விடுபடுங்கள். 

1 comment:

  1. /// நீர்க்குமிழி போல் எப்போது வேண்டுமானாலும் வெடித்து சிதறும் கூடாரம்.... ///

    உணர வேண்டிய வரிகள் ஐயா...

    ReplyDelete