அபிராமியே ! அகிலாண்டேஸ்வரியே !
காலையில் கண் முன்னே
உதிக்கின்ற செங்கதிரே !
அபிராமியே !
அகிலாண்டேஸ்வரியே !
தாபத்தினால் கொதிக்கின்ற
இவன் உள்ளத்தில்
குளிர் நிலவாய் தோன்றிடுவாய்
இருக்கின்ற இன்பங்களை
ஏறெடுத்து பாராமல்
இல்லாத இன்பங்களை
எந்நேரமும் எண்ணி
துன்பத்தில் உழலும்
இவனை மாற்றிடுவாய்
உன் இணையடியை
எந்நேரமும் நினைத்து
இன்புறும் வரமருள்வாய்
அகந்தை என்னும் கொடும்பாம்பு
கடித்து உடலும் மனமும்
நஞ்சாகி காண்போர் அனைவரின்
மீதும் சினம் கொண்டு
சிந்தனையில் தெளிவற்று,
புலம்பித் திரியும் இவனை
இக்கணமே காத்திடுவாய்.
அன்பே வடிவான அன்னையே !
அருளே வடிவான அம்பிகையே !
பார்க்கும் பொருள் மீதெல்லாம்
மோகம் கொண்டு அலைந்து
சோகத்தை பரிசாகப் பெரும்
துன்பம் நீங்கிட அருள் புரிவாய்
எல்லாப் பற்றையும் அகற்ற அருள் புரியட்டும் ஐயா...
ReplyDelete