கடலைக் கடக்க படகு தேவை
பிறவிக் கடலை கடக்க
உடல் என்னும் படகு தேவை.
படகு நல்லபடியாக கடலைக் கடக்க வேண்டுமென்றால்
அளவுக்கு மேல் அதில் பாரத்தை ஏற்றக்கூடாது
ஏற்றினால் படகு மூழ்கிவிடும்.
நம் மனம்தான் படகில்
பயணிகள் அமரும் பகுதி
நம் மனதில் உள்ள எண்ணங்கள்தான்
அதில் ஏறி பயணிக்கும் பயணிகள்.
இறைவனை இலக்காக கொண்டு பயணம் செய்யும்போது
அதற்க்கு எதிரிடையான எண்ணம் கொண்டவர்களை
தவிர்க்கவேண்டும்
(மனதில் இறை சிந்தனையைத்
தவிர மற்ற எண்ணங்களை ஒதுக்கித் தள்ள வேண்டும்.)
படகுகள் பல இடங்களுக்கு பயணிகளை கொண்டு செல்லும்
எந்த இடத்திற்கு படகு செல்கிறதோ
அந்த இடத்திற்கு செல்ல வேண்டிய
பயணிகளை மட்டும் ஏற்றிச்செல்ல வேண்டும்.
வேறு இடங்களுக்கு செல்லநினைப்பவர்களை.
ஏற்றி செல்லக் கூடாது .
பிறவிக் கடலை கடக்க நினைப்பவர்கள்
அதுபோன்ற சிந்தனை உடையவர்களை மட்டும்
தம் படகில் ஏற்றிக்கொள்ளவேண்டும்.
மற்றவர்களை அதில் ஏற அனுமதிக்கக்கூடாது
( நல்லதோர் சத்சங்கத்தில் இணைந்து கொள்ள வேண்டும் )
அப்படி ஏற்றினால் படகு போய்ச் சேர வேண்டிய இடத்தை
என்றும் சேர முடியாது
படகை ஓட்டுபவன் நல்ல திறமைசாலியாக வழியில்
ஏற்படும் ஆபத்துகளை கண்டறிந்து பத்திரமாக
பயணிகளை கரைக்கு கொண்டு சேர்ப்பவனாக
இருக்க வேண்டும். (அதற்க்கு
நல்ல சத்குருவின் துணையை நாடிப் பெறவேண்டும்)
எல்லா எண்ணங்களை யும் ஒதுக்கிவிட்டு
இறை நாமத்தை மட்டும் எண்ணவேண்டும்
அப்படி இருந்தால் பயணம் பாதுகாப்பாக இருக்கும்.

'மூட்டை முடிச்சைக் குறையுங்கள் வண்டிப் பயணம் சுகமாகும்' என்றொரு விளம்பரம் வரும்! இங்கு 'பாவ' என்ற வார்த்தை சேர்த்து 'பாவ மூட்டை முடிச்சைக் குறையுங்கள்... வாழ்க்கைப் பயணம் சுகமாகும்' என்று பாடலாம் போல! :)))
ReplyDeleteபுண்ணிய மூட்டைகளும் ஒரு சுமையே
Deleteஇன்றைக்கு எல்லாமே சுமை தான்...
ReplyDeleteசுகமான சுமைகளும் இருக்கின்றனவே!
Delete